சென்னை: வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட உள்ள எரிஉலைக்கு வடசென்னை பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அரசுக்கும், மாநகராட்சிக்கும் எதிராக குடியிருப்போர் நலச்சங்கங்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், எரியுலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய மேயர், ஆணையர், கவுன்சிலர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பயணம் மேற்கொண்டுள்ளனர். குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரியுலை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் […]
