Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2025) சிஎஸ்கே அணிக்கு அடுத்து வரும் அனைத்து போட்டிகளும் வாழ்வா, சாவா போட்டிகள்தான். 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அந்த வகையில், நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸை ஹைதாராபாத் அணியை சந்திக்கிறது.
Chennai Super Kings: இக்கட்டான நிலையில் சிஎஸ்கே
ஹைதராபாத் 9வது இடத்திலும், சிஎஸ்கே 10வது இடத்திலும் இருக்கின்றன. இதில் நாளை சிஎஸ்கே வெற்றி பெற்றால் 9வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பும் கிடைக்கும். அடுத்தடுத்த வெற்றிகளால் அப்படியே புள்ளிப்பட்டியலிலும் முன்னேற்றம் காண முடியும். ஆனால், அது அவ்வளவு எளிதானதும் இல்லை.
ஹைதராபாத் போட்டிக்கு பின் பஞ்சாப் அணியுடன் சேப்பாக்கத்தில் மோதுகிறது சிஎஸ்கே (CSK). அதன்பின் ஆர்சிபியை அதன் ஹோம் மைதானமான சின்னசாமியில் சந்திக்கிறது. தொடர்ந்து, கேகேஆர் அணியை ஈடன் கார்டன்ஸிலும், ராஜஸ்தானை சேப்பாக்கத்திலும், குஜராத் டைடன்ஸ் அணியை அகமதாபாத்திலும் சிஎஸ்கே சந்திக்கிறது.
Chennai Super Kings: பிளேயிங் லெவனில் உள்ள வரும் இளம் வீரர்
ஒரு போட்டியில் தோற்றால் கூட நிச்சயம் சிஎஸ்கே பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிடும். எனவே ஒவ்வொரு போட்டியையும் முக்கிய போட்டியாக கருதி சிறப்பான வீரர்களை கொண்டு சிஎஸ்கே பிளேயிங் லெவனை அமைக்க வேண்டும். அந்த வகையில் நிச்சயம் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
ஏற்கெனவே சிஎஸ்கே அதன் ஸ்குவாடில் சுமார் 20 வீரர்களை பயன்படுத்திவிட்டது. தற்போதைய பிளேயிங் லெவனில் ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீத், அன்ஷூல் கம்போஜ் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். டிவால்ட் பிரேவிஸ் (Dewald Brevis) நாளைய போட்டியில் இருந்து நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் சிஎஸ்கே அணியில் மேலும் ஒரு இளம் வீரர் நாளைய போட்டியிலேயே இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Chennai Super Kings: பிளமிங்கை கவர்ந்த ராமகிருஷ்ண கோஷ்
அது வேறும் யாருமில்லை, சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளேமிங்கையே (Stephen Fleming) கவர்ந்த ராமகிருஷ்ண கோஷ் தான். ஒருவேளை பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாவிட்டால் இரண்டாம் பாதியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்போம் என பிளமிங் முன்னர் பேசியிருந்தார். அதிலும், ராமகிருஷ்ண கோஷ், ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீத் உள்ளிட்டோரை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
மும்பைக்கு எதிரான போட்டிக்கு முன் பேசிய சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்,”எங்களிடம் சில திறமைவாய்ந்த இளம் வீரர்கள் உள்ளனர். அதில், கேஷும் ஒருவர். அவர் ஒரு ஆல்-ரவுண்டர். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என நினைக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
Chennai Super Kings: யார் இந்த ராமகிருஷ்ண கோஷ்?
ராமகிருஷ்ண கோஷ் (Ramakrishna Gosh), ரஞ்சிக் கோப்பை போன்ற உள்நாட்டு தொடர்களில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். 27 வயதான இவர் தற்போதுதான் அறிமுகமாகி உள்ளார். மகாராஷ்டிராவில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையின் கீழ் விளையாடி வந்தவர். பெரியளவில் ரன்களையோ, விக்கெட்டுகளையோ எடுத்துக் குவிக்காவிட்டாலும் இவரிடம் நல்ல திறன் இருப்பதை சிஎஸ்கேவும், ஃபிளமிங்கும் கண்டறிந்திருக்கிறார்கள்.
Chennai Super Kings: யாருக்கு பதில் ராமகிருஷ்ண கோஷ்?
இந்த சூழலில், டிவால்ட் பிரேவிஸை அணிக்குள் கொண்டுவருவதால் நிச்சயம் ஓவர்டனை வெளியே வைக்க வேண்டும். எனவே, மிடில் ஆர்டரில் விஜய் சங்கருக்கு பதில் ராமகிருஷ்ண கோஷை உள்ளே கொண்டுவந்தால் ஒரு வேகப்பந்துவீச்சு ஆப்ஷனும் கிடைக்கும், மிடில் ஆர்டரில் பெரிய ஷாட்களை ஆட வீரரும் கிடைப்பார். பிளமிங்கை கவர்ந்த ராமகிருஷ்ண கோஷ், தோனியையும் (MS Dhoni) கவர்ந்து பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பாரா… பொறுத்திருந்து பார்ப்போம்.