சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர்கூறினார். தமிழகத்தில் ஆண்டு தோறும் பல லட்சம் இளைஞர்கள் படிப்பை முடித்து வேலை தேடி வெளி உலகத்திற்கு வருகிறார்கள். அந்த வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டம், வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான தகவலை […]
