கோவை: உதகையில் இன்று ஆளுநர் ரவி தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மாநில தனியார் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, உதகையில் இன்று நடைபெறுகிறது. உதகை ராஜ்பவனில் நடைபெறும் இந்த மாநாட்டை துணை குடியரசு தலைவர், ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க அவர் சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். இந்த நிலையில், தமிழக ஆளுநர் ரவி ஏற்பாடு […]
