கார் குண்டுவெடிப்பில் சிக்கி ரஷிய ராணுவ தளபதி உயிரிழப்பு

மாஸ்கோ,

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி மூத்த ரஷிய ராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டதை அந்நாட்டு புலனாய்வுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

ரஷிய அரசு ஊடகங்களில் வெளியான தகவல்படி, மாஸ்கோ ஒப்லாஸ்டின் ரஷிய நகரமான பாலாஷிகாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் முன்பகுதியில் ஒரு கார் வெடித்து ஒருவர் கொல்லப்பட்டார். ரஷிய புலனாய்வுக் குழு பின்னர் இறந்தவரை ரஷியாவின் ராணுவத்தின் முக்கிய செயல்பாட்டு இயக்குநரகத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் என அடையாளம் கண்டுள்ளது. கிடைத்திருக்கக்கூடிய தரவுகளின்படி, வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததன் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களில் ஒரு உயர் ரஷிய ராணுவ அதிகாரி மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப், உக்ரைனுக்கான அமெரிக்க மத்தியஸ்த அமைதித் திட்டம் குறித்து விவாதிக்க மாஸ்கோவில் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.