அதானியை குறிவைத்த ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதன் பின்னணியில் ராகுல் காந்தி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி நிறுவனங்கள் செயற்கையான முறையில் பங்குகளின் விலையை உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதாகவும், அதன் கணக்கு வழக்குகளில் முறைகேடுகள் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கடுமையான குற்றச்சாட்டை அடுத்து அதானி குழும பங்குகளின் விலை அதலபாதளத்துக்கு சென்றது. இதனால், முதலீட்டாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அதானி குறிவைத்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னணியில் ராகுலுக்கும் தொடர்பு இருப்பதை ரகசிய விசாரணையின் மூலம் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் கண்டுபிடித்துள்ளதாக ஸ்புட்னிக் இந்தியா தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளரும், காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவருமான சாம்பிட்ராடோவின் நடவடிக்கைகளை மொசாட் ரகசியமாக கண்கணித்ததையடுத்து இந்த உண்மை தெரியவந்துள்ளதாக ஸ்புட்னிக் கூறியுள்ளது.
கவுதம் அதானி மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதை உள்நோக்கமாகக் கொண்டு ராகுல் காந்திக்கும் ஹிண்டன்பர்க் ஆய்வுக் குழுவுக்கும் இடையேயான தொடர்புகளை அதன் மறைகுறியாக்கப்பட்ட அரட்டைகள் மற்றும் வெளிப்படுத்தப்படாத நிகழ்நேர தொடர்புகள் மொசாட்டின் ரகசிய உளவுபார்ப்பின்போது சிக்கியதாக ஸ்புட்னிக் இந்தியா தெரிவித்துள்ளது.