பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவிப்பது கட்டாயம் என்ற இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மண்டி மாவட்டத்தில் உள்ள பங்க்னா கிராம பஞ்சாயத்து தலைவர் பசந்த் லால் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்தது. குற்றவியல் வழக்குகளை […]
