ஐபிஎல் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்.. அடித்து சொல்லும் யுவராஜ் சிங்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் இதுவரை 9 போட்டிகள் விளையாடி உள்ளது. அதன்படி புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும் டெல்லி கேபிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த மூன்று அணிகளும் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. 

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அனி 10 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் பஞ்சாப் மற்றும் லக்னோ அணி 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. வழக்கமாக சிறப்பாக விளையாடி பிளே ஆஃப்-க்கு செல்ல போட்டிபோடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை அதலபாதாளத்தில் அதாவது கடைசி இடத்தில் உள்ளது. விளையாடிய 9 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

முதல் ஆறு இடத்தில் இருக்கும் அணிகள் சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே இந்த 6 அணிகளுக்கு தான் பிளே ஆஃப்பில் நுழைவதற்கு போட்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், நடப்பாண்டு ஐபிஎல் தொடரை எந்த அணி வெல்லப்போகிறது என்ற தனது கணிப்பை பகிர்ந்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் எனக்கு மிகவும் பிடித்த அணி என்றால் அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான். ஆனால் ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது பஞ்சாப் கிங்ஸ் அணிதான் அந்த அணிக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்துள்ளது. எனவே அந்த அணிதான் கோப்பையை வெல்லும் என அவர் தெரிவித்துள்ளார். 

யுவராஜ் சிங் தனக்கு பிடித்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தான் என கூறுவதற்கு தனி காரணம் உள்ளது. அதாவது யுவராஜ் சிங்கால் பட்டை தீட்டப்பட்ட அபிஷேக் சர்மா அங்கு தான் உள்ளார். அதனாலேயே யுவராஜ் சிங் சன்ரைசர்ஸ் அணியை சுட்டிக்காட்டி உள்ளார். அதே நேரத்தில் யுவராஜ் சிங் பஞ்சாபை சேர்ந்தவர் என்பதால் பஞ்சாப் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என சுட்டிக்காட்டி இருக்கிறார். 

பஞ்சாப் கிங்ஸ் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தி வருகிறார். அந்த அணி இதுவரை 8 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில், அதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு எதிர்கால நட்சத்திரம் கிடைத்துவிட்டார் – அனில் கும்ப்ளே

மேலும் படிங்க: ப்ரீ ஹிட்டை மிஸ் செய்த கமிந்து, காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் வைரல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.