ஆல் அவுட்டான லக்னோ.. பாயிண்ட்ஸ் டேபிளில் டாப்புக்கு சென்ற மும்பை அணி!

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 27) இத்தொடரின் 45வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கில்டன் களம் இறங்கிய நிலையில், ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் இருந்த ரியான் ரிக்கில்டன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 32 பந்துகளில் 6 ஃபோர்கள், 4 சிக்சர்கள் உட்பட 58 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து சிறிது நேரம் களத்தில் தாக்குபிடித்த வில் ஜாக்ஸ் 29 ரன்களில் வெளியேற தொடர்ந்து திலக் வர்மா 6, ஹர்திக் பாண்டியா 5, என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கார்பின் போஷ் 20 ரன்களும் நமன் திர் 25 ரன்களும் எடுத்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 215 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் அதிகபட்சமாக மயங்க் யாதவ் மற்றும் அவேஷ் கான் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

இதனைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதையடுத்து வந்த பூரன் 27, ரிஷப் பண்ட் 4, ரன்களிலும் என வில் ஜாக்ஸ் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெரிய இலக்கை துரத்தும்போது விக்கெட்டை தக்க வைப்பது என்பது மிகவும் முக்கியம். மார்க்ரமிற்கு அடுத்து வந்த பூரன் சிறப்பாக விளையாடினார். இருப்பினும் எதிர்பாராமல் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து வந்த ரிஷப் பண்ட் களத்தில் நின்றிருந்தால், வெற்றி லக்னோ பக்கம் செல்ல வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் சற்றும் பொறுப்பில்லாமல் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் சென்று கரன் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஆயூஸ் பதோனி சிறப்பாக விளையாடினாலும் அவரால் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அவர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்ஷும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். மில்லர் 24, அப்துல் சமத் 2, அவேஷ் கான் 0 என அட்டமிழந்தனர். இறுதியில் லக்னோ அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பும்ரா 4 விக்கெட்களையும் போல்ட் 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: மழையால் ரத்தான கேகேஆர் – பஞ்சாப் போட்டி! சென்னை அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

மேலும் படிங்க: மும்பை அணியில் இணையும் பென் ஸ்டோக்ஸ்? பரபரக்கும் ஐபிஎல் களம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.