திண்டுக்கல்: தொகுதி ஒதுக்கீடு குறித்து இபிஎஸ், அமித்ஷா இருவரும் பேசிக்கொள்வார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு செய்யும். ஹைட்ரோ கார்பன் அனுமதி கொடுத்தது யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களுடைய கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று.
எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும். சொல்வது முக்கியமில்லை எல்லோருக்கும் கிடைப்பது மாதிரி செய்ய வேண்டும். இந்திய திருநாட்டில் எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது. எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இதில் நாம் கருத்து சொல்ல முடியாது.இலையும், தாமரையும் கூட்டணியாக சேர்ந்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். தாமரைப்பூ உள்ளது என்றால் கீழே இலை இருக்கத்தான் செய்யும். தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷா, இபிஎஸ் பேசிக்கொள்வார்கள்.
திமுக மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. முதலில் ஆட்சி அகற்றப்படவேண்டும். அனைவருக்கும் நாட்டு பற்று என்பது வேண்டும். தேசப்பற்று தேச உணர்வு என்பது வேணும். அதை புரிந்து கொண்டு எல்லா தலைவர்களும் நாட்டின் நன்மை கருதி பேச வேண்டும். தொலைக்காட்சியில் வரவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. தெலுங்கானா முதல்வர் பேசுவதை பார்த்தீர்களா? பாகிஸ்தான் துண்டாடப்பட வேண்டும். பாரத பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு தர வேண்டும் என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தேச உணர்வுக்காக பேசுகிறார். ரேவந்த் ரெட்டி போன்ற நபர்களுக்கு எனது வணக்கங்கள்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்