ஐபிஎல் 2025 க்கு பிறகு இந்த 5 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்!

ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், பிளே ஆப்பிற்கு செல்ல ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். அவர்களில் சிலருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி வந்தவர் தான் அபிஷேக்சர்மா, திலக் வருமா போன்றவர்கள். தற்போது இந்திய அணியில் மூத்த வீரர்களாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்றவர்களும் ஐபிஎல்லில் தங்களின் திறமையை நிரூபித்து இந்திய அணியில் இடம் பிடித்தனர்.

மேலும் படிங்க: ஆல் அவுட்டான லக்னோ.. பாயிண்ட்ஸ் டேபிளில் டாப்புக்கு சென்ற மும்பை அணி!

குறிப்பாக டி20 போட்டிகளில் இந்திய அணி சமீப நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு ஐபிஎல் போட்டியும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடஜா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்த இடங்களை பிடிக்க இந்திய அணி வீரர்களுக்குள்ளே பல போட்டிகள் நிலவி வருகிறது. மேலும் அதிகமான சுழற் பந்துவீச்சாளர்கள் தற்போது இந்தியாவில் உருவாகியுள்ளனர். கிட்டத்தட்ட 3 அணிகளை அமைக்கும் அளவிற்கு இந்தியாவில் வீரர்கள் தயாராக உள்ளனர். ஐபிஎல் 2025ல் சிறப்பாக விளையாடி வரும் பின்வரும் 5 வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம்.

நேஹல் வதேரா

மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கிய நேஹல் வதேரா தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆவரேஜ் ஆக 37ம், ஸ்ட்ரைக் ரேட் ஆக 146 வைத்துள்ளார் நேஹல் வதேரா. எந்த ஒரு இடத்திலும் பேட்டிங் செய்யும் திறன் கொண்டுள்ள இவர் இந்திய டி20 அணியில் நிச்சயம் இடத்தை பெறுவார்.

விப்ராஜ் நிகம்

இந்திய அணியில் நீண்ட காலமாக லெக் ஸ்பின்னர் ஆல் ரவுண்டர் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த இடத்தை விப்ராஜ் நிகம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் பேட்டிங் மற்றும் பீல்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விரைவில் இந்திய அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

அங்க்கிரிஷ் ரகுவன்ஷி

கடந்த சில சீசன்களாக கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் அங்க்கிரிஷ் ரகுவன்ஷி. மிடில் ஆர்டரில் களமிறங்கும் இவர் தேவையான நேரத்தில் அணிக்கு ரன்களை அடித்துக் கொடுக்கிறார். சிறப்பான பேட்டிங் திறன் கொண்டுள்ள இவை 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் திறன் கொண்டுள்ளார்.

அபிஷேக் போரெல்

கடந்த சில சீசனங்களாக மூன்றாவது இடத்தில் களமிறங்கி வந்த அபிஷேக் போரெல் இந்த சீசனில் ஓப்பனிங் வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. விக்கெட் கீப்பர் பேட்டரான அபிஷேக் போரெல் தனது பேட்டிங் திறனை இந்த வருடம் ஐபிஎல்லில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த சீசனில் 8 இன்னிங்சில் 225 ரன்கள் அடித்துள்ளார்.

திக்வேஷ் சிங் ரதி

இந்த சீசனில் அனைவரையும் கவர்ந்த ஒரு இளம் ஸ்பின்னர் திக்வேஷ் சிங் ரதி. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக இந்த ஆண்டு அறிமுகமான இவர் 10 போட்டிகளில் 14 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார். சுனில் நரேன் போன்று பந்து வீசும் பானியை கொண்ட இவர் வெறும் 7.28 எகானமி ரேட்டில் பந்து வீசி வருகிறார். மேலும் அவரது செலிபிரேஷன்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளனர். விரைவில் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கலாம்.

மேலும் படிங்க: ஐபிஎல்லில் டக் அவுட்டே ஆகாமல் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.