Padma Awards: `பத்ம பூஷண்' அஜித்; விருது விழாவில் நெகிழ்ந்த ஷாலினி

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு.

பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்துக்கும், கிரிக்கெட்டர் அஷ்வினுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

பெருமிதத்துடன் நடிகர் அஜித் குமாரின் குடும்பம்

இந்நிலையில் இன்று நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்பட்டது. குடும்பத்துடன் சென்று பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார் நடிகர் அஜித் குமார்.

மனைவி ஷாலினி, குழந்தைகள் அனுஷ்கா-ஆத்விக் மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் அஜித் பத்ம பூஷண் விருதைப் பெறுவதை நெகிழ்ச்சியுடன் பார்த்து பெருமிதப்பட்டனர்.

பத்ம பூஷண் விருது பெற்றார் அஜித்குமார்

1993ம் ஆண்டு ‘அமராவதி’ திரைப்படத்தில் அறிமுகமாகி ‘good bad ugly’ என இதுவரை 63 திரைப்படங்கள். சினிமா மட்டுமின்றி ட்ரோன்களை தயாரிக்கும் எம்.ஐ.டி குழுவிற்கு ஆலோசகர், மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அங்கம், மோட்டர் சைக்கள் பயணங்களை ஊக்குவிக்க வீனஸ் மோட்டர் சைக்கிள் டூர்ஸ் நிறுவனம், கார் பந்தயத்தில் சர்வதேச அளவில் சாதனைகள் என பன்முகத்தன்மையுடன் இன்னும் விடாமுயற்சியுடன் பல சாதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவர். இப்படி பல்வேறு துறைகளில் பங்காற்றி வரும் அஜித்குமாருக்கு மத்திய அரசு, ‘பிரபல தமிழ் நடிகர்’ மற்றும் ‘கார் பந்தய ஓட்டுநர்’ என கலை பிரிவில் ‘பத்ம பூஷண்’ விருதைக் கொடுத்து கெளவரப்படுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.