இந்த 4 அணிகளுக்கு 90 சதவீதம் பிளே ஆப் உறுதி! இனி தோற்றாலும் கவலையில்லை!

ஐபிஎல் 2025 தொடர் ஆரம்பிக்கும்போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது பாதிக்கட்டத்தை எட்டி உள்ள இந்த தொடரில் நான்கு அணிகள் தங்களது பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பிறகு கடந்த சீசனில் மிகவும் மோசமாக விளையாடிய அணிகள், இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிகள் அதிக வெற்றிகளை பதிவு செய்தனர். மாறாக இதுவரை ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றனர்.

இந்த அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி மூன்று இடத்தை பிடித்துள்ளனர். மேலும் இந்த முறை இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத மூன்று அணிகள் பிளே ஆப் ரேஸில் இடம் பிடித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஐபிஎல்லில் உள்ள பத்து அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைஸ் ஹைதராபாத்,  ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தவிர மீதமுள்ள ஆறு அணிகளில் நான்கு அணிகள் தங்களது பிளே ஆப் வாய்ப்பை 90 சதவீதம் உறுதி செய்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

மேலும் படிங்க: CSK: 2026இல் தோனி விளையாடுவார்… அவர் தான் கேப்டன் – காரணம் இதுதான்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவுடன் முதலிடத்தை பிடித்துள்ளனர். இன்னும் அவர்களுக்கு நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில் அதில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட போதும்.

குஜராத் டைட்டன்ஸ்

சுப்மான் கில் தலைமையில் கடந்த ஆண்டு மோசமாக விளையாடிய குஜராத் அணி, இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். மேலும் அவர்களுக்கு நெட் ரன் ரேட் நல்ல விதத்தில் இருப்பதால் கிட்டத்தட்ட தங்களது பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் சில தொடர் தோல்விகளை சந்தித்தாலும், தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இதுவரை 10 போட்டிகளில் விளையாடி அதில் 6ல் வெற்றி பெற்று மும்பை, மீதமுள்ள நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட போதுமானதாக இருக்கும்.

டெல்லி கேபிட்டல்ஸ்

அக்சர் படேல் தலைமையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அசைக்க முடியாத ஒரு அணியாக இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர். இன்னும் 5 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் அதில் இரண்டு அல்லது மூன்றில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப்பிற்கு தகுதி பெறலாம். இருப்பினும் பஞ்சாப் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கும் இன்னும் பிளே ஆப் செல்ல சிறிது வாய்ப்புள்ளது அடுத்தடுத்த போட்டிகளில் அபார வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெறலாம்.

மேலும் படிங்க: நடராஜன் ஏன் டீமில் இல்லை? கெவின் பீட்ர்சனின் பதிலால் கிளம்பிய சர்ச்சை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.