சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரலவையில், துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா தாக்கல் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை.க்கு துணைவேந்தர் நியமனம் மற்றும் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. இன்றைய அமர்வில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் […]
