வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
பயணங்கள் எப்போதுமே சுவையானவை . உற்சாகம் தரக்கூடியவை. தினசரி அலுவல் அட்டவணையில் இருந்து விடுபட்டு இயற்கையின் அரவணைப்பில் விருப்பம் போல் உலவும் சந்தர்ப்பங்களைத் தருபவை.
உலகின் பல பகுதிகளிலும் சுற்றுலா சென்றிருப்பவர்களும் கூட மகிழ்ச்சியாக குறிப்பிடக்கூடிய ஒரு நாடு உள்ளதென்றால் அது நெதர்லாந்துதான். கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு.
பெல்ஜியத்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே உள்ள இந்த நாடு ஹாலந்து என்றும் அழைக்கப் பெறுகிறது.

நீர்லாந்து என்றே அழைக்கலாம் போல பெரிய சிறிய ஆறுகள் ஓடைகள் அங்கங்கே தென்படுகின்றன. மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படும் நீர் வழிகளில் படகுகளும் கப்பல்களும் அணிவகுப்பதை காணலாம்.
சிலர் தங்கள் தனி உபயோகத்துக்கென்றே வைத்திருக்கும் அழகு சொகுசு கப்பல்களையும் பார்க்கலாம்.
இயற்கை தன்னுடைய வளங்களையெல்லாம் கொட்டிக் கொடுத்திருக்கிறது என்றால் மிகையாகாது.
கப்பல்களுக்கு அடுத்தாற் போல நம் கண்களில் இடறுவது சைக்கிள்கள். சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை சைக்கிள்களில் பயணிப்பதை காணலாம்.
சைக்கிள்களுக்கென்றே தனிப் பாதையும் உள்ளது. சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் பல மாணவர்களை பார்க்க முடிகிறது.
மக்கள் உற்சாகமாக நடமாடுகிறார்கள். வயது முதிர்ந்தவர்கள் கூட தன்னிச்சையாக கடைகள், பூங்காக்களுக்கு சென்று வருகின்றனர்.

நாய்க்குட்டிகளை கையில் பிடித்துக்கொண்டு வேகமாக நடக்கும் பல முதியவர்களைப் பார்க்கலாம். யாரும் தேவையில்லாத வேண்டாத விஷயங்களை பேசுவதில்லை.இருப்பதை சந்தோஷமாக அனுபவித்து வாழ்கிறார்கள்.
அழகான பூக்களின் இருப்பிடம் நெதர்லாந்து.பல வண்ணங்களில் துலிப் மலர்கள் கவனத்தையும் கருத்தையும் கவர்கின்றன. வசந்த காலங்களில் பூக்களை பார்ப்பதற்கென்றே பயணிகள் வருகிறார்கள்.
கீவ்கென்ஹாப்(Keukenhof) சென்ற போது பூக்கள்தான் எத்தனை விதம்! எத்தனை நிறம் என்று வியக்கத் தோன்றுகிறது.பச்சை சிவப்பு ஆரஞ்சு நீலம் இன்னும் எத்தனையோ வண்ணங்களில் மலர்ப் படுக்கைகள்.
மிகவும் சிரத்தையாகஅருமையாக பராமரிக்கிறார்கள்.பல நாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகள் விரும்பி வருகிறார்கள்.
ஐரோப்பாவின் தோட்டம் என்றே அழைக்கப்படும் இந்த நாடு காற்றாலைகளுக்கும் பெயர் போனது.

பஞ்ச பூதங்களில் நீர் காற்று நெருப்பு (சூரியன் ) மூன்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
மிகப் பெரிய ராட்சத காற்றாலைகளை இங்கே பார்க்கலாம்.அவற்றின் பிரமாண்டம் வியக்க வைக்கிறது.
சட்ட திட்டங்கள் கண்டிப்பானவை. மக்கள் இசைந்து வாழ்கிறார்கள்.
அலுப்பு சலிப்பு இவர்களிடம் காணமுடியாத ஒன்று.
எப்போதும் குளிர்ந்த சூழ்நிலையே நிலவுவதால் கோடை காலமான மூன்று மாதங்களை மிகவும் விரும்பி வரவேற்கிறார்கள். அப்போதும் நம் ஆதவனார் தன் விருப்பப்படி தான் விண்ணில் பயணிக்கிறார் .
அதிகாலை மூன்று மணிக்கே தன் கதிர்களை பரப்பும் கதிரவன் இரவு பத்து மணிவரை சுருக்குவதே இல்லை. சில நாட்களில் மேகத்தில் மறைந்து கொண்டு கண்ணாமூச்சி காட்டுவதும் உண்டு.
யாழ்ப்பாணத்தவர் நிறைய பேர் இங்கு வசிக்கிறார்கள். நம் ஊர்க் கோவில்களும் உள்ளன. பூஜைகளும் நடைபெறுகின்றன. சில இடங்களில் தேரோட்டம் அன்னதானம் காவடியாட்டம் என்று பல சிறப்பு நிகழ்ச்சிகளும்நடைபெறுகின்றன. இந்தியாவில் இருக்கிறோமோ என்று நினைக்கும் வண்ணம் பலர் கலாச்சார ஆடைகள் அணிந்து பக்திப் பாடல்கள் பாடி மகிழ்கின்றனர்.

எல்லா இடங்களிலும் மரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு சோலைக்குள் நுழைந்து விட்டோமோ என்று பிரமிக்கும் வண்ணம் பல விதமான மரங்கள். மலைகளைப் போல அரணாக நிற்கும் மரங்கள் குளுமையான சூழலை தருவதோடு சுத்தமான காற்றையும் வடிகட்டித் தருகின்றன.
ஆம்ஸ்டர்டம், ரோட்டர்டாம் , யூ த்ரெட், ஐந்தோவன் போன்ற பல நகரங்கள் பழமையையும் புதுமையையும் சேர்த்துக் கொண்டு உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாக விளங்குகிறது.புகழ் பெற்ற அருங்காட்சியகங்கள், விளையாட்டு மைதானங்கள் என்று எல்லா வயதினரையும் ஈர்க்கும் மிக சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
மதுரா டாம் என்ற நகரம் மினியேச்சர் கலைக்கு பெயர் போனது .அப்படியே அத்தனை நகரங்களும் சிறிய அளவில் படைக்கப்பட்டு கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகின்றன. விமானநிலையம் ,ரயில் நிலையம், ஆறுகள் , கப்பல்கள் என்று எல்லாவற்றையும் நம் ஊரில் கொலு பொம்மைகள் அடுக்கியது மாதிரி அழகாக செதுக்கியிருக்கிறார்கள்.

தெருக்கள் வீடுகள் மக்கள் என்று எல்லோரையும் அழகாக ஒரு பறவைப் பார்வையில்அமைத்திருக்கிறார்கள்.மக்களின் உடைகளும் சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி சாதாரண உடைகள், கம்பளி உடைகள், லெதர் ஜாக்கெட்டுகள் என்று மாறுவது விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. சிறுவர்கள் கண்டு மகிழ விளையாட்டு ரயில்கள் பல இடங்களுக்கு செல்கின்றன.
ரோடர்ராம் மிகப் பெரிய துறைமுகம். வணிக வளர்ச்சி பெற்றது.
ஐந்தோவனில் பிலிப்ஸ் தலைமையகம் இயங்குவதால் இந்திய மக்கள் பலரையும் காணமுடிகிறது.
ஐ. டி துறையின் அபார வளர்ச்சியால் பல நாட்டு மக்களையும் இங்கே பார்க்கமுடிகிறது. அந்நியன், முதல்வன் போன்ற திரைப்படங்களில் மட்டுமே பார்க்க முடிந்த இடங்கள் நேரில் பார்க்கும் போது உற்சாகத்தையும் உவப்பையும் ஒருங்கே தருகிறது என்றால் மிகையாகாது.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.