Nissan Magnite Kuro – நிசான் மேக்னைட் குரோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

ரூ.8.27 லட்சம் ஆரம்ப விலையில் நிசான் மேக்னைட்காரில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குரோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி என இரு விதமான கியர்பாக்ஸ் கொண்டு பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கின்றது. முழுமையான கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள குரோ எடிசன் மாடல் பல்வேறு இடங்களில் மேக்னைட், நிசான் லோகோ போன்றவற்றில் சிவப்பு நிற குரோ பேட்ஜிங்கும் பெற்றுள்ளது. Nissan Magnite Kuro Edition நிசான் இந்தியா … Read more

Tata Harrier – 2023 டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது

5 இருக்கை பெற்ற ஹாரியர் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது. புதிய ஹாரியர் முந்தைய மாடலை விட மேம்பட்ட டிசைன் அம்சத்துடன் நவீனத்துவமான இன்டிரியரை கொண்டுள்ளது. 7 இருக்கை பெற்ற டாடா சஃபாரி எஸ்யூவி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை தொடர்ந்து ஹாரியரும் வந்துள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பாக  நெக்ஸான் மற்றும் நெக்ஸான்.இவி என இரு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டது. 2023 Tata Harrier ஹாரியர் மற்றும் … Read more

New Tata Safari – 2023 டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது

 டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர் அடிப்படையிலான 7 இருக்கை கொண்ட சஃபாரி எஸ்யூவி காரின் தோற்றம் இன்டிரியரில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய சஃபாரியில் என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சத்தில் பெரிதாக மாற்றமில்லை. முன்பாக இடம்பெற்றிருந்த வேரியண்ட் பெயர்கள் நீக்கப்பட்டு, தற்பொழுது ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் அக்காம்பலிஸ்டு என நான்கு விதமாக கிடைக்க உள்ளது. 2023 Tata Safari Facelift சஃபாரி மற்றும் ஹாரியர் என இரண்டு எஸ்யூவி காரிலும் பொதுவாக 170 hp பவர் … Read more

ரூ.2.30 லட்சம் வரை எம்ஜி ZS EV மின்சார காரின் விலை குறைப்பு

100வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ZS EV எலக்ட்ரிக் காரின் விலை ரூ.50,000 முதல் ரூ.2.30 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்ற இசட்எஸ் இவி இந்தியாவின் பிரசத்தி பெற்ற எலக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும். 17 விதமான பிரத்தியேகமான இரண்டாம் கட்ட ADAS உடன் கூடிய புதிய, டாப் இசட்எஸ் எக்ஸ்குளூசிவ் புரோ வேரியண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. MG ZS EV Price 50.3kWh பேட்டரி பேக்குடன் வந்துள்ளது. … Read more

Hyundai Exter – ரூ.16,000 வரை ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை உயர்ந்தது

அமோக வரவேற்பினை பெற்ற ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி காரின் விலையை ரூ.5,000 முதல் ரூ16,000 வரை வேரியண்ட் வாரியாக மாறுபட்ட வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் துவக்க நிலை EX வேரியண்டின் விலையில் மாற்றிமில்லாமல் ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.10.15 லட்சம் வரை விலை உள்ளது. எக்ஸ்டர் காரில் 6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் … Read more

Triumph Scrambler 400 X – ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X அறிமுகம் எப்பொழுது ?

பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் கூட்டணியில் உருவான ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 X பைக்குகளில் அடுத்ததாக ஸ்கிராம்பர் 400 எக்ஸ் விலை அடுத்த சில வாரங்களுக்குள் அறிவிக்கப்பட உள்ளது.  விற்பனையில் உள்ள ஸ்பீடு 400 மாடலை விட சற்று விலை கூடுதலாக அமையும் என்பதனால் ரூ. 2.45 லட்சத்திற்குள் அமையலாம். அறிமுக சலுகையாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் விலை குறைவாக ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் விற்பனைக்கு கிடைக்கலாம். Triumph Scrambler 400 X ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் … Read more

Tata Harrier, Safari – டாடா ஹாரியர், சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2023 ஆம் ஆண்டிற்கான புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி என இரு மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பதிவை துவங்கியுள்ளதால் விரைவில் அடுத்த சில நாட்களுக்குள் விலை அறிவிக்கப்பட உள்ளது. சமீபத்தில் நெக்ஸான் மற்றும் நெக்ஸான்.இவி என இரண்டும் விற்பனைக்கு வெளியானதை தொடர்ந்து இரண்டு மாடல்களும் அறிமுகம் செய்ய உள்ளது. Tata Harrier Facelift டாடா ஹாரியர் எஸ்யூவி புதுப்பிக்கப்பட்ட முன்புற கிரில், பம்பர் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் கொண்டதாக … Read more

Hero Karizma – 13,688 முன்பதிவுகளை பெற்ற ஹீரோ கரீஸ்மா XMR 210

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய கரீஸ்மா XMR 210 பைக்கிற்கு முதற்கட்ட முன்பதிவில் 13,688 எண்ணிக்கையை கடந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி நவம்பர் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் உற்பத்தி துவங்கப்பட்ட நிலையில், அறிமுக சலுகை விலை முடிவுக்கு வந்த நிலையில் ரூ.7,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு தற்பொழுது ரூ.1.80 லட்சம் ஆக உள்ளது. முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. Karizma XMR 210 கரீஸ்மா XMR 210 பைக்கில் … Read more

Citroen C3 Aircross – சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி விலை பட்டியல் வெளியானது

5+2 இருக்கை ஆப்ஷனை பெற்று பட்ஜெட் விலையில் அமைந்துள்ள சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.12.34 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. போட்டியாளர்களாக இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. Citroen C3 Aircross SUV முன்பாக முன்பதிவு துவங்கப்பட்ட நிலையில் … Read more

Harley X440 – மீண்டும் ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கிற்கு அக்டோபர் 16 முதல் முன்பதிவு துவக்கம்

ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் பட்ஜெட் விலை மோடார்சைக்கிள் மாடலான X440 பைக்கிற்கான முன்பதிவு மீண்டும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. மேலும், முன்பாக பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் டெலிவரி துவங்கப்பட உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் உருவான முதல் தயாரிப்பு மாடலான எக்ஸ்440 அமோக வரவேற்பினை இந்திய சந்தையில் பெற்று 25,597 பதிவுகளை பெற்றிருந்த நிலையில் முன்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. டாப்-ஸ்பெக் ‘S’ வேரியண்ட் எண்ணிக்கையில் … Read more