TVS Apache RTR 310 Price – டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி பைக் வரிசையில் புதிதாக RTR 310 நேக்டூ ஸ்டைல் மாடலை விற்பனைக்கு ரூ.2.42 லட்சத்தில் அறிமுகம் செய்துள்ளது. முன்பாக ஃபேரிங் ஸ்டைல் பெற்ற அப்பாச்சி RR310 மாடல் சந்தையில் உள்ளது. டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணியில் உருவாக்கப்பட்ட 500cc-க்கு குறைவான என்ஜின் பிரிவில் வந்த 310சிசி என்ஜின் பெற்று பிஎம்டபிள்யூ G 310R , G310GS, G 310RR என மூன்று மாடல்களும், டிவிஎஸ் தற்பொழுது இரண்டு மாடல்களையும் கொண்டுள்ளது. TVS Apache … Read more

Ather Energy – ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் GIC மூலம் 900 கோடி முதலீட்டை பெறும் ஏதெர் எனர்ஜி

நாட்டின் மிக்கபெரிய டூ வீலர் தயாரிப்பளரான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் சிங்கப்பூரின GIC முதலீட்டு நிறுவனம் என இரண்டும் 900 கோடி முதலீடு ஏதெர் எனர்ஜி நிறுவனத்தில் மேற்கொள்ள உள்ளது. ஏற்கனவே, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 33.1 % பங்ககுளை ஏதெர் நிறுவனத்தில் கொண்டுள்ள நிலையில் கூடுதலாக 550 கோடி முதலீட்டை செய்ய உள்ளது. சிங்கப்பூரின GIC முதலீட்டு நிறுவனம் ரூ.450 கோடி மேற்கொள்ள உள்ளது. Ather Energy ஓலா எலக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்குப் … Read more

Honda Elevate vs Rivals on-road Price Comparison – ஹோண்டா எலிவேட் எஸ்யூவி ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்தியாவின் மிக கடும் போட்டியாளர்களை பெற்ற C-பிரிவு சந்தையில் வந்துள்ள ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் என்ஜின், மைலேஜ் உள்ளிட்ட முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி ஆஸ்டர், கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. Honda Elevate on-Road price in TamilNadu எலிவேட் எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் சிட்டி காரில் … Read more

MG AStor – எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி பிளாக்ஸ்டார்ம் விற்பனைக்கு வெளியானது

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் எஸ்யூவி அடிப்படையில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிளாக்ஸ்டார்ம் எடிசன் ரூ.14.48 லட்சம் முதல் ரூ. 15.77 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு விதமான என்ஜினை பெறும் ஆஸ்டரில் 110 ஹெச்பி பவர் மற்றும் 150 என்எம், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும், சக்திவாய்ந்த 140 ஹெச்பி பவர் மற்றும் 220 என்எம், 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் 6 … Read more

Kawasaki – இந்தியா வரவிருக்கும் கவாஸாகி நின்ஜா ZX-4R அல்லது ZX-6R பைக்கின் டீசர் வெளியானது

கவாஸாகி இந்தியா நிறுவனம், தனது சமூக ஊடக பக்கங்களில் முதல்முறையாக இன்லைன் 4 சிலிண்டர் என்ஜின் கொண்ட மாடல் குறித்தான டீசரை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் நின்ஜா ZX-4R அல்லது ZX-6R பைக்குகளில் இன்லைன் 4 சிலிண்டர் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ZX-4R மற்றும் ZX-6R பைக்குகள் மிக ஸ்டைலிஷான ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்று அதிநவீன வசதிகளை கொண்டதாகும். Kawasaki Ninja ZX-4R நின்ஜா ZX-4R ஆனது 399cc, … Read more

செப்டம்பர் 15.., சிட்ரோன் C3 ஏர்கிராஸ் முன்பதிவு துவக்கம்

சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது மாடலான 5+2 இருக்கை வசதி பெற்ற C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவு செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்க உள்ளதால் விற்பனைக்கு இந்த மாத இறுதியில் விலை அறிவிக்கப்பட்டு, டெலிவரி அக்டோபரில் நடைபெற உள்ளது. 5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. சிட்ரோன் C3 … Read more

Ola S1X – ஓலா எஸ்1எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக குறைந்த விலை S1X ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதாக இந்நிறுவன சிஇஓ தெரிவித்துள்ளார். ரூ.90,000 முதல் துவங்குகின்ற இந்த மாடல் ரூ.1,10,000 வரை நிறைவடைகின்றது. எஸ்1 எக்ஸ் மாடலில் 2Kwh மற்றும் 3Kwh பெற்ற S1X , S1X  பிளஸ் என இருவிதமாக விற்பனைக்கு கிடைக்கின்றது. Ola S1X escooter ஓலா எஸ்1எக்ஸ் மாடலில் 2Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 85 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 91 கிமீ … Read more

Apache RTR 310 Launch details – டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் எதிர்பார்ப்புகள்

நேக்டூ ஸ்டைலை பெற்ற டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கினை விற்பனைக்கு ஜனவரி 6 ஆம் தேதி வெளியிட உள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டார்டு- டிவிஎஸ் மோட்டார் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள 310cc பிரிவில் வருகின்ற அப்பாச்சி RTR 310 மாடல் விற்பனையில் உள்ள பிஎம்டபிள்யூ G 310 R என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ளது. RTR 310 பைக்கில் விற்பனையில் உள்ள ஜி310ஆர் மாடலை விட சற்று மாறுபட்ட வகையிலான டிசைன் அம்சங்களை பெற்றதாக வரவுள்ளது. TVS Apache … Read more

Royal Enfield 350cc bikes Tamil Nadu on-road price – ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 350cc பைக்குகளின் வரிசை இப்பொழுது முழுமையாக J-series என்ஜின் பெற்றுள்ளதால் புல்லட் 350, மீட்டியோர் 350, கிளாசிக் 350, மற்றும் ஹண்டர் 350 ஆகிய பைக்குகளின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை தொகுத்து அறிந்து கொள்ளலாம். பொதுவாக, அனைத்து 350சிசி என்ஃபீல்டு பைக்குகளில் உள்ள J-series என்ஜின் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டுள்ளது. 349cc, ஒற்றை சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100rpm-ல் 20.2 Bhp பவரையும் , … Read more

Volvo C40 Recharge – ₹61.25 லட்சத்தில் வால்வோ சி40 கூபே எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனையில் உள்ள வால்வோ XC40 ரீசார்ஜ் மாடலை அடிப்படையாக கொண்ட C40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரில்  78kWh பேட்டரி பேக் மூலம் அதிகபட்சமாக 530km பயணிக்கலாம் என WLTP முறையில் அல்லது 683km ICAT முறையில் சிங்கிள் சார்ஜ் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரின் தோற்றத்தை பெற்றிருந்தாலும், பின்புறத்தில் கூபே ஸ்டைல் மாடலுக்கு இணையான மாற்றத்தை பெற்றுள்ளது. பின்புறத்தில் நேர்த்தியான எல்இடி டெயில் லைட் அமைப்பு உள்ளது. … Read more