maruti suzuki evx – உற்பத்தி நிலை மாருதி சுசூகி eVX எலக்ட்ரிக் எஸ்யூவி படங்கள் வெளியானது

மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக eVX விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் நிலையில் உற்பத்தி நிலை காரின் படங்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கதாகும். ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் முதன்முறையாக காட்சிக்கு வந்த இவிஎக்ஸ் நடுத்தர எஸ்யூவி சந்தைக்கு ஏற்றதாக வரவுள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கும் கிரெட்டா எலக்ட்ரிக், சி3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. Maruti Suzuki … Read more

ola electric bike – நாளை ஓலா எலக்ட்ரிக் பைக் மற்றும் S1X ஸ்கூட்டர் அறிமுகமாகிறது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி 4க்கு மேற்பட்ட ஓலா எலக்ட்ரிக் பைக் மற்றும் ரூ.1 லட்சம் விலைக்குள் வெளியிடப்பட உள்ள S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றுடன் MOVEOS 4 மென்பொருள் மேம்பாட்டினை அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் ஓலா எஸ்1 ஏர் மாடல் விற்பனைக்கு ரூ.1.20 லட்சத்தில் வெளியானதை தொடர்ந்து ரூ.1 லட்சத்திற்கு குறைந்த விலையில் 2kwh பேட்டரி பெற்ற எஸ்1எக்ஸ் விற்பனைக்கு வெளியாக உள்ளது. Ola Electric Bike நாளை ஆகஸ்ட் … Read more

Citroen C3 Aircross AT – வரவிருக்கும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் விபரம் வெளியானது

இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்ற GIIAS கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெறுகின்ற சி3 ஏர்கிராஸ் மாடல் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகின்றது. Citroen C3 Aircross Automatic தோற்ற அமைப்பில் மற்றும் வசதியில் பெரிதாக மாற்றமில்லாமல் வந்துள்ள சி3 ஏர் கிராஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் 110 PS பவரை 5500rpm-லும் மற்றும் 205 … Read more

Tata Punch vs Hyundai Exter – டாடா பஞ்ச் Vs ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி ஒப்பீடு., எந்த கார் சிறந்தது

டாடா மோட்டார்ஸ் பஞ்ச் எஸ்யூவி மாடலுக்கு சவால் விடுக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் நிலையில் இரு மாடல்களையும் ஒப்பீடு செய்து பல்வேறு முக்கிய விபரங்களை அறிந்து கொண்டு எந்த கார் தேர்வு செய்யலாம் என அறிந்து கொள்ளலாம். இரண்டு மாடல்களும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனை கொண்டு பல்வேறு வசதிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டர் 6 ஏர்பேக்குகள், டேஷ்கேம், உள்ளிட்ட வசதிகள் பிரத்தியேகமாக பெற்றுள்ளது. சிஎன்ஜி … Read more

2023 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் – TVS Jupiter on-Road price and Specs

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். Table of Contents Toggle 2023 TVS Jupiter டிவிஎஸ் ஜூபிடர் 110 நுட்பவிரங்கள் 2023 TVS Jupiter on-Road Price Tamil Nadu 2023 TVS Jupiter rivals Faqs About TVS Jupiter 2023 TVS Jupiter Scooter … Read more

Hero Karizma – ஹீரோவின் கரீஸ்மா XMR ஸ்போர்ட்டிவ் பைக்கின் எதிர்பார்ப்புகள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மீண்டும் இந்தியாவின் ஐகானிக் பைக் பிராண்டான கரீஸ்மா XMR மாடலை விற்பனைக்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட உள்ளது. ஸ்போர்ட்டிவான டிசைனை பெற்று முதன்முறையாக லிக்யூடூ கூல்டு என்ஜின் மற்றும் 6 ஸ்பிடூ கியர்பாக்ஸ் பெற்ற ஹீரோவின் முதல் மாடலாக விளங்கலாம். முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்டுள்ள கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் 210சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பக்கவாட்டின் வடிவமைப்பு வெளியாகியிருந்த நிலையில் அதனை உறுதிப்படும் வகையில் டீசர் வெளியாகியுள்ளது. … Read more

Ather 450S Vs 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒப்பீடு, சிறந்த ஸ்கூட்டர் எது ?

ஏதெர் நிறுவனம் வெளியிட்டுள்ள 450S vs 450X 2.9kwh vs 450X என மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பெர்ஃபாமென்ஸ், ரேஞ்சு உள்ளிட்ட அம்சங்களை ஒப்பீடு செய்து எந்த ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கலாம் என அறிந்து கொள்ளலாம். மூன்று ஸ்கூட்டர்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பினை பகிர்ந்து கொண்டாலும் பல்வேறு வித்தியாசங்களை பெற்றதக அமைந்துள்ளது. குறிப்பாக பேட்டரி, டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆகியவற்றில் மாறுபடுகின்றது. Table of Contents Toggle Ather 450S vs 450X 2.9 kWh vs 450X சஸ்பென்ஷன், … Read more

Tata EV -1 லட்சம் எலக்ட்ரிக் கார்களை தயாரித்த டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் முதன்மையான பயணிகள் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் வெற்றிகரமாக ஒரு லட்சம் பேட்டரி மின்சார வாகனங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. டாடா நிறுவனம் நெக்ஸான் இவி, டியாகோ இவி மற்றும டிகோர் இவி என மூன்று மாடல்களை தனநபர்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவின் ஒட்டுமொத்த தனிநபர் நான்கு சக்கர பயணிகள் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 72 சதவீத சந்தை பங்களிப்பை கொண்ட முதன்மையான நிறுவனமாக விளங்குகின்றது. Tata Motors EV … Read more

Hero Destini Prime – ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெஸ்டினி 125 அடிப்படையில் பிரைம் எடிசன் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டீலர்களை வந்தடைந்த டெஸ்டினி பிரைம் விலை ரூ.77,738 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக்  அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய 2023 ஹீரோ கிளாமர் 125 விற்பனைக்கு சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஹீரோ கரீஸ்மா 210 விற்பனைக்கு வெளியாக உள்ளது. … Read more

2023 Honda CD110 Dream Deluxe – 2023 ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக் விற்பனைக்கு வெளியானது

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் OBD-2 மற்றும் E20 மேம்பாடு கொண்ட புதிய 2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கினை ரூ.73,400 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை போலவே தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா எஸ்பி 160 பைக்கினை தொடர்ந்து புதிய சிடி 110 ட்ரீம் பைக் ஆனது விற்பனைக்கு வெளியாகியுள்ளது. மேலும் சில வாரங்களுக்கு முன்பாக பட்ஜெட் விலையில் ஷைன் 100 பைக் … Read more