Ola S1 Air escooter – ஆகஸ்ட் 15 வரை.. ரூ.1.10 லட்சம் விலையில் ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்

பட்ஜெட் விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஓலா நிறுவனம் ஜூலை 28 முதல் விற்பனை துவங்கிய நிலையில் ஆரம்ப கட்ட சலுகையாக ரூ.1,09,999 விலையில் S1 ஏர் அறிமுகம் செய்யப்பட்டது. ஜூலை 31 முதல் ரூ.1,19,999 ஆக விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு தள்ளுபடி ரூ.10,000 வழங்கப்பட்ட சலுகை முன்பதிவு செய்யாத அனைவருக்கும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு 8 மணி வரை கிடைக்கும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவன தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். … Read more

Top 10 selling scooter – விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் ஜூன் 2023

கடந்த ஜூன் 2023 மாதாந்திர முடிவில் விற்பனையில் டாப் 10 இடங்களை கைப்பற்றிய ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் தொடர்ந்து ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா விற்பனை 1,30,830 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 64,252 எண்ணிக்கையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுசூகி ஆக்செஸ் 39,503 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது. டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஜூன் 2023 டாப் 10 ஸ்கூட்டர் ஜூன்  2023 … Read more

2023 Yamaha R3 and MT-03 – இந்தியா வரவிருக்கும் யமஹா ஆர்3, எம்டி-03 பைக் அறிமுகம்

2023 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் வெளியிடப்பட உள்ள யமஹா R3 மற்றும் MT03 பைக்குகள் இன்றைக்கு சென்னையில் உள்ள மெட்ராஸ் சர்க்யூட்டில் நடைபெற்ற டிராக் தின கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. குறிப்பாக இரண்டு பெர்ஃபாமென்ஸ் ரக பைக்குகளும் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இரண்டிலும் 321cc பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். Yamaha YZF-R3 R3 பைக்கில் உள்ள 321cc பேரலல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் அதிகபட்ச பவர் 40.4 … Read more

Mahindra Pikup – ஆகஸ்ட் 15.., எலக்ட்ரிக் பிக்கப் டிரக்கினை வெளியிடும் மஹிந்திரா

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் புதிய பிக்கப் டிரக் மாடலை மஹிந்திரா & மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது. அனேகமாக, இந்த பிக்கப் டிரக் எலக்ட்ரிக் மாடலாக இருக்கலாம் அல்லது மிகவும் பிரீமியம் வசதிகளை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே, மஹிந்திரா நிறுவனம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த ஆண்டு இலகு ரக ஓஜா டிராக்டர் மற்றும் பிக்கப் … Read more

Ducati Monster 30th Anniversario – 30வது ஆண்டு விழா டூகாட்டி மான்ஸ்டர் சிறப்பு எடிசன் அறிமுகமானது

சர்வதேச அளவில் டூகாட்டி மான்ஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சிறப்பு நிறத்துடன் பல்வேறு சிறிய மாற்றங்களை பெற்ற Monster 30 Anniversario வந்துள்ளது. மொத்தம் 500 எண்ணிக்கையில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும். 500 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளதால் ஒவ்வொரு மாடலுக்கும் ஒரு சிறப்பு எண் வழங்கப்பட்டிருக்கும். இந்திய சந்தையில் ஒரு சில யூனிட்டுகள் மட்டும் விற்பனைக்கு கிடைக்கலாம். Ducati Monster 30 Anniversario குறிப்பாக விற்பனையில் உள்ள மாடலை விட வித்தியாசப்படுத்தும் … Read more

2026 வரை லம்போர்கினி ரிவில்ட்டோ சூப்பர் கார் விற்று தீர்ந்தது

கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட லம்போர்கினி நிறுவனத்தின் புதிய சூப்பர் கார் Revuelto ஆனது தற்பொழுது வரை நடைபெற்ற முன்பதிவு மூலம் 2026 வரை விற்று தீர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய ரிவில்ட்டோ காரில் முதன்முறையாக பிளக் இன் ஹைபிரிட் பெற்ற லம்போர்கினி முதல் மாடலாகும். Lamborghini Revuelto லம்போர்கினியின் ரிவில்ட்டோ மாடலில் 6.5 லிட்டர் V12 பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 814 bhp மற்றும் 725 Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது … Read more

Ather Grid – நிமிடத்திற்கு 1 ரூபாய் + ஜிஎஸ்டி ஏதெர் கிரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் கட்டணம்

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின், மிக வேகமான சார்ஜிங் வசதி கொண்ட ஏதெர் கிரிட் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நிமிடத்திற்கு 1 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்பொழுது வரை இந்த சேவையை ஏதெர் இலவசமாக வழங்கி வந்தது. மிக விரைவான கிரீட் சேவையை 2018 ஆம் ஆண்டு முதல் நெட்வொர்க்கை இலவசமாக அணுக வைத்துள்ளது. இருப்பினும், இப்போது இலவச சார்ஜிங் வசதியினை நீக்குவதாக அறிவித்துள்ளது. Ather Grid பயணத்தின்போது விரைவான சார்ஜிங் … Read more

Harley X440 – அதிகப்படியான வரவேற்பினால் ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 முன்பதிவு நிறுத்தம்

அதிகப்படியான வரவேற்பின் காரணமாக வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மட்டுமே ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகச்சிறிய, குறைந்த விலை ஹார்லிக்கு “மிகப்பெரும் வரவேற்பு” பெற்றுள்ளதாகவும், செப்டம்பர் மாதம் X440 தயாரிப்பை தொடங்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த மாடல் ராஜஸ்தானில் உள்ள நீம்ரானாவில் உள்ள அதன் ‘ ஹீரோ கார்டன் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. Harley-Davidson X440 X440 பைக்கின் வாடிக்கையாளர் டீலர் மூலம் … Read more

Tata Punch cng – எக்ஸ்டர் எதிரொலி..! டாடா பஞ்ச் சிஎன்ஜி எஸ்யூவி அறிமுக விபரம்

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டர் சிஎன்ஜி எஸ்யூவிக்கு போட்டியாக பஞ்ச் சிஎன்ஜி அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கூடுதலாக சன்ரூஃப் பெற்றதாகவும் வரவுள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனை பெற உள்ள பஞ்ச் ஆனது டூயல் சிலிண்டர் பெற்றதாகவும், மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் மாடலாகவும் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிரிவில் முதன்மையான எஸ்யூவி காராக பஞ்ச் விளங்கி வருகின்றது. Tata Punch iCNG எக்ஸ்டெர் சிஎன்ஜிக்கு போட்டியாக வரவிருக்கும் பஞ்ச் சிஎன்ஜி காரில், பெட்ரோலில் இயங்கும் … Read more

Upcoming Honda 160cc bike – ஆகஸ்ட் 2 ஆம் தேதி SP 160 பைக்கினை வெளியிடும் ஹோண்டா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் SP 160 பைக் மாடலை விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக வரவுள்ள மாடல் 150cc-160cc வரையில் உள்ள பைக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கும். ஏற்கனவே, சந்தையில் உள்ள ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் உள்ள என்ஜினை புதிய எஸ்பி 160 பைக் வரவுள்ளது. இந்த மாடலின் டிசைன் அம்சங்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ள எஸ்பி 125 அடிப்படையில் இருக்கலாம். Honda SP 160 launch soon யூனிகார்ன் 160 … Read more