Husqvarna Pioneer electric dirt bike – 2025 ஹஸ்குவர்னா பாய்னியர் எலெக்ட்ரிக் டர்ட் பைக் அறிமுகமானது

பொதுப் போக்குவரத்து சாலைகளில் பயணிக்ககூடிய அட்வென்ச்சர் டர்ட் பைக் மாடலை ஹஸ்குவர்னா பாய்னியர் என்ற பெயரில் 5.5kwh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு சுமார் 137 கிமீ ரேஞ்ச் (WMTC) வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 பிப்ரவரி முதல் சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பாய்னியர் டர்ட் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 5.5 kwh பேட்டரி மூலம் 11 kW மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 19.2 kW வரை, 12000 rpm-லும், டார்க் 37.6NM வரை … Read more

Royal Enfield Flying Flea S6 teased- ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளே S6 ஸ்கிராம்பளர் டீசர் வெளியானது

ராயல் என்ஃபீல்டின் பிளேயிங் பிளே எலெக்ட்ரிக் மூலம் C6 முதல் மாடலாக வரவுள்ளது. அதனை தொடர்ந்து ஸ்கிராம்பளர் வகையில் S6 மாடல் டீசராக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மாடல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. வழக்கமான ஃபோர்க்கிற்கு பதிலாக வித்தியாசமான கிரிடெர் ஃபோர்க் பயன்படுத்தப்படும் FF C6 போல அல்லாமல் ஸ்கிராம்பளர் வகையாக வரவுள்ள FF S6 மாடலின் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் … Read more

Royal Enfield Flying Flea C6 – ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளே C6 அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஃபிளையிங் ஃபிளே (Flying Flea) எலெகட்ரிக் பிராண்டின் கீழ் முதல் C6  என்ற பெயரில் துவக்க நிலை சந்தைக்கு நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலின் நுட்பவிபரம் மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. எலெகட்ரிக் வாகனத்தின் அறிமுகத்தின் பேசிய ராயல் என்ஃபீல்டு தலைவர் சித்தார்த் லால் பேசுகையில், எலெக்ட்ரிக் டூ வீலர்கள் குறிப்பிட்ட அளவிலான மிக குறைந்த ரேஞ்ச் மட்டும் வெளிப்படுத்தும் சந்தைக்கு ஏற்ப மட்டுமே தயாரிக்க … Read more

Maruti Suzuki eVitara – மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eவிட்டாரா அறிமுகமானது

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் eVX முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலுக்கு இவிட்டாரா என பெயரிடப்பட்டு 49kwh அல்லது 61kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் ஆனது வழங்கப்படுகின்றது சர்வதேச அளவில் ஐரோப்ப சந்தையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் ஆனது இந்திய சந்தைக்கு ஏற்ற மாடல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுசூகியின் Heartect-e … Read more

Honda amaze teased – புதிய 2025 ஹோண்டா அமேஸ் டீசர் வெளியானது

இந்தியாவின் பிரபலமான செடான் கார்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் காரின் புதிய தலைமுறை அதாவது மூன்றாவது தலைமுறை மாடலுக்கான டீசரானது வெளியிடப்பட்டிருக்கின்றது. வரும் மாதங்களில் இந்த மாடலின் விற்பனை துவங்க உள்ளதால் இதே நேரத்தில் புதிய டிசையர் காரும் கடுமையான சவாரி ஏற்படுத்த நவம்பர் 11ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது புதிய தலைமுறை அமேஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றிருக்கும் குறிப்பாக ஸ்டைலிங் சார்ந்த மேம்பாடுகளில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஹோண்டா சிவிக் … Read more

Mahindra Electric suv – நவம்பர் 26ல் மஹிந்திரா BE 6e, XEV 9e அறிமுகமாகிறது

வரும் நவம்பர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகின்ற விழாவில் மஹிந்திராவின்  INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட BE 6e மற்றும் XEV 9e என இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவிகளின் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. XEV மற்றும் BE எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ள XEV மற்றும் BE என இரண்டு பிராண்டுகளிலும் தலா ஒன்று என இரண்டு மாடல்கள் வரவுள்ளது. இதில் முதல் மாடலாக வரவுள்ள XEV 9e ஏற்கனவே … Read more

Verna gets new colour – புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிரபலமான செடான் மாடலான வெர்னா காரில் கூடுதலாக அமேசான் கிரே என்ற புதிய நிறத்தை பெற்றுள்ள நிலையில் கூடுதலாக ரூ.4,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக வந்துள்ள அமேசான் கிரே நிறத்துடன் சேர்த்து தற்போது எட்டு விதமான ஒற்றை வண்ணங்களை பெறும் நிலையில் கூடுதலாக வெள்ளை நிறத்துடன் கருப்பு நிற மேற்கூரை மற்றும் சிவப்பு நிறத்துடன் கருப்பு நிற மேற்கூரை என இரண்டு விதமான டூயல் டோன் விருப்பங்களை பெறுகின்றது. வெர்னாவில் … Read more

Citroen Aircross Xplorer edition – கூடுதல் ஆக்செரீஸ் உடன் சிட்ரோன் ஏர்கிராஸ் எக்ஸ்புளோரர் எடிசன் வெளியானது

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏர்கிராஸ் எஸ்யூவி காரில் கூடுதலான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்ட சிறப்பு எக்ஸ்ப்ளோரர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிரத்தியேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள இந்த எக்ஸ்ப்ளோரர் எடிசனில் மிக நேர்த்தியான நிறம் கொடுக்கப்பட்டு அதில் சூப்பரான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக டேஷ் கேமரா பாதுகாப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஃபுட்வேல் பகுதியில் லைட்டிங் செய்யப்பட்டு இன்டீரியரில் ஒளிரும் வகையிலான சில் பிளேட்ஸ் மற்றும் ஹூடின் மேற்பகுதியில் கார்னிஷ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. … Read more

Royal Enfield first ev unveil soon – இன்றைக்கு 100 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் அறிமுகமாகிறது

உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் Flying Flea எலெக்ட்ரிக் பைக் இன்றைக்கு EICMA அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே இந்த எலக்ட்ரிக் பைக் வடிவம் தொடர்பான காப்புரிமை படங்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது சோதனையோட்டத்தில் ஈடுபடுகின்ற படமும் வெளியாகி இருக்கின்றது குறிப்பாக வழக்கமாக பயன்படுத்தப்படுகின்ற டெலஸ்கோபிக் மற்றும் அப்சைட் டவுன் ஃபோர்க் பயன்படுத்தப்படாமல் வித்தியாசமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பு கிரிடெர் … Read more

Maruti Dzire Bookings open – டிசையர் காருக்கு முன்பதிவை துவங்கிய மாருதி சுசூகி

மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற டிசையர் காரின் 2025 மாடல் நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் நாளை நவம்பர் 4 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ளது. முன்பே டீலர்களை வந்தடைய துவங்கியுள்ளதால் விலை அறிவிக்கப்பட்ட மறுநாளே டெலிவரி துவங்கப்பட உள்ளது. டிசையருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்பட உள்ள நிலையில் டீலர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவினை மேற்கொள்ளலாம். சமீபத்தில் வெளியான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றிருக்கின்ற 1.2 … Read more