Mahindra SUV – 2.92 லட்சம் எஸ்யூவிகளுக்கு முன்பதிவு தினறும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களுக்கு தொடர்ந்து முன்பதிவு அதிகரித்து வருவதனால் 2,92,000 எஸ்யூவிகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டெலிவரியை அதிகரிக்க உற்பத்தி எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. நாட்டின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம், ஸ்கார்பியோ மற்றும் XUV700 கார்களுக்கு அமோகமான முன்பதிவு நடைபெற்று வருகின்றது. எனவே, புதிய எஸ்யூவிகளான XUV300, மற்றும் தார் 5 டோர் எஸ்யூவி ஆகியவற்றின் அறிமுகத்தை 2024 ஆம் ஆண்டுக்கு மாற்றியுள்ளது. மஹிந்திரா எஸ்யூவி Q4 FY2023 நிதியறிக்கை … Read more

komaki tn 95 electric scooter – 2023 கோமகி TN 95 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள்

கோமகி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளரின்  2023 கோமகி TN-95 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மேம்பட்ட பல்வேறு வசதிகள் கொண்டதாக 150km/charge மற்றும் 180km/charge என இரண்டு விதமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வாகன நிலை தடுமாறுவதனை தடுக்கும் ஆன்டி ஸ்கிட் நுட்பத்தை கொண்டுள்ள டிஎன்-95 மின்சார ஸ்கூட்டரில் தீப்பறுவதனை தடுக்கும் அம்சத்துடன் ஆப் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்ற மிக சிறப்பான LiFePO4 (lithium iron phosphate) பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 2023 Komaki TN 95 escooter டிஎன்-95 மாடலில் உள்ள … Read more

McLaren Artura – ₹ 5.10 கோடியில் மெகலாரன் அர்துரா விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் மெகலாரன் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரின் அர்துரா ஹைபிரிட் சூப்பர் கார் விற்பனைக்கு ரூ.5.10 கோடி விலையிங் வெளியிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் முதல் V6 என்ஜின் பெற்ற மாடலாகும். 1489 கிலோ எடை கொண்டுள்ள அர்துரா காரினை மெக்லாரன் கார்பன் லைட்வெயிட் ஆர்கிடெக்சர் (McLaren Carbon Lightweight Architecture – MCLA ) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. McLaren Artura விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மெக்லாரன் Artura PHEV காரில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ V6 இன்ஜின் கொடுக்கப்பட்டு … Read more

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் புகைப்படங்கள் – Harley-Davidson X440 Images and launch date

ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் ஹார்லி-டேவிட்சன் வெளியிட்டுள்ள புதிய X 440 ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்ற பைக்கின் படங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா 350, ஹோண்டா CB350RS உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் நவீனத்துவமான ஹார்லியின் வடிவமைப்பினை கொண்டு ஹீரோ மோட்டோ கார்ப் தயாரிக்க உள்ளது. ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் முன்பக்கம் முரட்டுத்தனமான எரிபொருள் டேங்க், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் விளக்கு மற்றும்  மேல்நோக்கிய எக்ஸாஸ்ட் கொண்டுள்ள பைக்கில் … Read more

5 டோர் மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது

மாருதி ஜிம்னி காருக்கு சவால் விடுக்கும் 5 கதவுகளை பெற்ற மஹிந்திரா தார் அல்லது அர்மடா எஸ்யூவி மாடலை 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தார் எஸ்யூவி மாடல் 1,00,000 விற்பனை இலக்கை கடந்த நிலையில், இன்றைக்கு நடைபெற்ற Q4 மற்றும் FY23 முடிவுகளுக்கான சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், மஹிந்திரா & மஹிந்திரா செயல் இயக்குனர் (ஆட்டோ மற்றும் விவசாயம்) ராஜேஷ் ஜெஜூரிகர், கூறுகையில் 2023 ஆம் … Read more

2023 honda dio launch soon – ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் அறிமுகம் எப்பொழுது ?

பிரசத்தி பெற்ற ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற என்ஜின் மற்றும் H-Smart எனப்படுகின்ற கீலெஸ் ரிமோட் வசதி பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் வெளியான ஹீரோ மோட்டோ கார்ப் ஜூம் ஸ்கூட்டர் அபரிதமான வரவேற்பினை பெற்றுள்ளதால் போட்டியை எதிர்கொள்ள ஹோண்டா நிறுவனம் கூடுதல் நிறங்கள், அலாய் வீல், டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆகியவற்றை வழங்க உள்ளது. 2023 Honda Dio H-smart முன்பாக ஆக்டிவா … Read more

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 படங்கள் வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் க்ரூஸர் ரக மீட்டியோர் 350 மாடலின் புதுக்கப்பட்ட வேரியண்ட் ஸ்போக் வீல் கொண்டு பல்வேறு ரெட்ரோ அம்சங்களை பெற்றதாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக ராயல் என்ஃபீல்டின் புதிய J- பிளாட்ஃபாரத்தில் வெளிவந்த மாடலான மீட்டியோர் 350 தற்பொழுது கூடுதலான சில மேம்பாடுகளை பெற்று சோதனை செய்யப்பட்டு வருகின்றது. 2023 RE Meteor 350 மீட்டியோர் 350 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற கேஸ்ட் அலாய் வீலுக்கு மாற்றாக … Read more

2023 TVS Apache Bikes on-road Price in Tamil Nadu – டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்தியாவின் மிக பிரபலமான டிவிஎஸ் அப்பாச்சி பைக் சீரிஸ் மாடலில் உள்ள என்ஜின், மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 2005 ஆம் ஆண்டு முதன்முறையாக அப்பாச்சி 150 என்ற பெயரில் முதல்முறையாக வெளியிடப்பட்டது. தற்பொழுது அப்பாச்சி பைக் தொடரில் அப்பாச்சி RTR 160, அப்பாச்சி RTR 160 4V,  அப்பாச்சி RTR 180 மற்றும் அப்பாச்சி RTR 200 4V ஆகியவற்றுடன் ஃபேரிங் ஸ்டைலை பெற்ற அப்பாச்சி RR … Read more

Nissan Maginte Geza- ₹ 7.35 லட்சத்தில் நிசான் மேக்னைட் கெஸா எடிசன் விற்பனைக்கு வெளியானது

இசையை கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நிசான் மேக்னைட் கெஸா சிறப்பு எடிசன் மாடலின் விலை XL வேரியண்ட்டை விட ரூ.35,000 வரை அதிகரிக்கப்பட்டு ₹ 7.39 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானிய மொழியில் கெசா என்றால் “மேடைக்கு வெளியே இசைக்கருவி மற்றும் ஒலி எழுப்புதல்” என்று பொருளாகும். மேலும் குறிப்பிட்ட பதிப்பு அதன் பெயருக்கு ஏற்றதாக உள்ளது. ஏனெனில் பெரும்பாலான மேம்படுத்தல்கள் இன்ஃபோடெயின்மென்ட் மூஙம் உள்ளன. Nissan Magnite Geza Edition நிசான் … Read more

Lexus LC500h – ரூ.2.39 கோடியில் லெக்சஸ் LC500h விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் லெக்சஸ் வெளியிட்டுள்ள புதிய LC500h ஸ்போர்ட்ஸ் கூபே ரக மாடல் மேம்பட்ட வசதிகள் கொண்டிருக்கின்றது. மற்றபடி, டிசைன் என்ஜின் பவர் தொடர்பான மாற்றங்கள் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பில் மாற்றமில்லை, ஆனால் 21 அங்குல புதிய அலாய் உள்ளது. சக்திவாய்ந்த எல்சி500 ஹெச் ஸ்போர்ட்ஸ் கூபேவில் 300 hp பவரை வெளிப்படுத்தும் 3.5 லிட்டர் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் பெற்றதாக வந்துள்ளது. Lexus LC500h லெக்சஸ் LC500h காரில் … Read more