எம்பிவி, எஸ்யூவி என இரண்டு கார்களை வெளியிடும் நிசான்

புதிய ரெனால்ட் டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி மற்றும் சிறிய ரக 7 இருக்கை பெற்ற ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி என இரு மாடல்களை இந்திய சந்தையில் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதனை நிசான் உறுதிப்படுத்தியுள்ளது. நிசான் டஸ்ட்டர் இந்திய சந்தையில் முன்பாக டெரோனோ என்ற பெயரில் நிசான் நிறுவனம் டஸ்ட்டர் மாடலை விற்பனை செய்து வந்த நிலையில் டஸ்ட்டர் சில வருடங்களாக நீக்கப்பட்டுள்ளதால், டெரோனோ விடுவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது மீண்டும் சந்தைக்கு வரவுள்ள ரெனால்ட் டஸ்ட்டர் 2026 ஆம் … Read more

2025 சுசுகி அவெனிஸ் ஸ்கூட்டரின் சிறப்பு எடிசன் வெளியானது

பிரசத்தி பெற்ற சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் கொண்ட அவெனிஸ் மாடலில் OBD-2B மேம்பாட்டை பெற்ற எஞ்சினுடன் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிசனில் மெட்டாலிக் மேட் கருப்பு நெ.2 / மேட் டைட்டானியம் சில்வர் நிறத்தை பெற்றதாக வந்துள்ளது. 2025 Suzuki Avenis Price list Avenis STD Edition – ₹ 97,435 Avenis Race Edition – ₹ 98,237 Special Edition – ₹ 98,237 (Ex-showroom) மற்றபடி, புதுப்பிக்கப்பட்ட பாடி … Read more

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் முன்பதிவு துவங்கியது.!

ஃபோக்ஸ்வேகன் இந்திய சந்தையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட உள்ள டிகுவான் ஆர்-லைன் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவை துவங்கியுள்ள நிலையில் 2.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் எஞ்சின் உடன் 6 விதமான நிறங்களில் கிடைக்க உள்ளது. சிப்ரெசினோ கிரீன் மெட்டாலிக், நைட்ஷேட் ப்ளூ மெட்டாலிக், கிரெனடில்லா பிளாக் மெட்டாலிக், ஓரிக்ஸ் ஒயிட் மதர் ஆஃப் பெரல் எஃபெக்ட், ஆய்ஸ்டர் சில்வர் மெட்டாலிக் இறுதியாக பெர்சிமன் ரெட் மெட்டாலிக் என 6 நிறங்களை பெற்று சர்வதேச … Read more

சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரில் OBD-2B மேம்பாடு வெளியானது

சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மேக்ஸி ஸ்டைல் பர்க்மேன் ஸ்டீரிட் மற்றும் பர்க்மேன் ஸ்டீரிட் EX என இரு மாடல்களிலும் OBD-2B மேம்பாட்டை பெற்று மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ நிறத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025 Suzuki Burgman Street Series Price list Burgman Street Standard Edition – ₹ 1,00,035 Burgman Street Ride Connect – ₹ 1,04,037 Burgman Street EX – ₹ 1,20,436 தொடர்ந்து இந்த … Read more

Royal Enfield Classic 650 launch date – ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிளாசிக் 350 அடிப்படையில் கிளாசிக் 650 விற்பனைக்கு மார்ச் 27 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இந்த மாடலை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. ஏற்கனவே சந்தையில் உள்ள மற்ற 650சிசி மாடல்களிலிருந்து பெறப்பட்ட எஞ்சினை பகிர்ந்து கொண்டுள்ள கிளாசிக் 650ல் 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன்,  4000 RPMல் அதிகப்படியான … Read more

ரெனால்ட் கார்களின் விலையை 2% வரை ஏப்ரல் 1, 2025 முதல் உயருகின்றது

ரெனால்ட் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 1, 2025 முதல் அனைத்து கார்களின் விலையை 2 சதவீதம் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேரியண்ட் வாரியாக எவ்வளவு விலை உயர்த்தப்படும் விபரங்களை தற்பொழுது தெளிவுப்படுத்தவில்லை. ரெனால்ட் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான வெங்கட்ராம் மாமில்லபல்லேவின் கூற்றுப்படி, நிறுவனம் தொடர்ந்து அதிகரித்து வரும் மூலப் பொருட்களின் செலவுகளை ஏற்றுக்கொண்டு வருகிறது. இருப்பினும், தொடர்ச்சியான அதிகரிப்பு இப்போது தயாரிப்பு தரம் மற்றும் புதுமைகளைப் பராமரிக்க விலை … Read more

இந்தியாவில் பிஎம்டபிள்யூ, மினி கார்களின் விலை 3% உயருகின்றது

இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற பிஎம்டபிள்யூ குழுமத்தின் மினி, பிஎம்டபிள்யூ கார்களின் விலையை அதிகபட்சமாக 3% வரை உயர்த்தியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் லாங் வீல்பேஸ், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் லாங் வீல்பேஸ், பிஎம்டபிள்யூ X1, பிஎம்டபிள்யூ X3, பிஎம்டபிள்யூ X5, பிஎம்டபிள்யூ X7, பிஎம்டபிள்யூ M340i மற்றும் எலக்ட்ரிக் பிஎம்டபிள்யூ X1 லாங் வீல்பேஸ் ஆகியவை அடங்கும். … Read more

ஏப்ரல் 2025 முதல் ஹோண்டா கார்களின் விலை உயருகின்றது

பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் விலையும் ஏப்ரல் 1, 2025 முதல் உயர்த்தப்பட உள்ளது. ஆனால் எத்தனை சதவீதம் உயர்த்தப்படும் என குறிப்பிடவில்லை. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ” உற்பத்தி மூலப்பொருட்களின் செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்ய இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுகிறது. மேஸ், சிட்டி, சிட்டி இ:ஹெச்இவி மற்றும் எலிவேட் போன்ற மாடல் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என இந்நிறுவனம் … Read more

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் 1 ஏப்ரல் 2025 முதல் அனைத்து மாடல்களும் 3% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. தற்பொழுது வேரியண்ட் வாரியாக விலை உயர்வு பற்றி வெளியிடப்படவில்லை. அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் செலவுகள், பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதிகரித்த செயல்பாட்டு செலவுகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் விலை உயர்வினை தவிரக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது. முழுநேர இயக்குநரும் தலைமை இயக்க அதிகாரியுமான தருண் கார்க் கூறுகையில், அதிகரித்து வரும் செலவுகளை … Read more

RTX300 அறிமுகத்திற்கு தயாரான டிவிஎஸ் மோட்டார்.! – Automobile Tamilan

நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்ற வகையிலான அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் வடிவத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள டிவிஎஸ் RTX 300 பைக்கில் புதிதாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த RTX-D4 300cc எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. முன்பாக ஆட்டோ எக்ஸ்போ 2025 அரங்கில் டிவிஎஸ் ஆர்டிஎக்ஸ் 300 பைக்கின் புகைப்படம் கசிந்த நிலையில், எப்பொழுது விற்பனைக்கு வரும் போன்ற முக்கிய தகவல்கள் தற்பொழுது வரை வெளியாகவில்லை என்றாலும் டிசைனுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. ஆர்டிஎக்ஸ் 300 மாடலில்  299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் … Read more