மேட்டர் எனெர்ஜி 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

Use இந்தியாவின் ஸ்டார்ட் அப் மேட்டர் எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் புதிய எனெர்ஜி (Matter Energy) பைக் மாடல் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், 5.0 kWh லிக்யூடு கூல்டு பேட்டரி, டூயல் சேனல் ஏபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ள மாடலாக விளங்குகிறது. IP67 தர மதிப்பீடு பெறப்பட்ட திரவ நிலையில் குளிரூட்டப்பட்ட, 5.0 kWh பேட்டரி, வழக்கமான 5A வீட்டு சாக்கெட்டில் செருகப்பட்டாலும் டாப்-அப் செய்ய முடியும். முழுமையான … Read more

2023 டொயோட்டா இன்னோவா Hycross கார் வெளிவந்தது

இந்தோனேசியா சந்தையில் டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடல் இந்தியாவில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் என்ற பெயரில் நவம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹைபிரிட் என்ஜினை பெற்றுள்ள இன்னோவா 20 முதல் 23 கிமீ மைலேஜ் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எம்பிவி காராக அறியப்படுகின்ற இன்னோவா தற்போது எஸ்யூவி ஸ்டைலாக காட்சியளிக்கின்ற வகையில் இன்னோவா ஹைக்ராஸ் கார் விளங்குகின்றது. Toyota Innova Hycross புதிய இன்னோவா ஹைக்ராஸ் … Read more

200 கிமீ ரேஞ்சு.., PMV Eas-E குவாட்ரிசைக்கிள் விற்பனைக்கு வந்தது

மும்பையை தலைமையிடமாக கொண்ட மின்சார வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனம் PMV எலக்ட்ரிக் நிறுவனம் Eas-E என்ற பெயரில் மினி கார் அல்லது குவாட்ரிசைக்கிள் மாடலை ரூ.4.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய EV மைக்ரோகாரை இந்தியாவில் தனிநபர் வாகனப் பிரிவில் மிக மலிவான மின்சார காராக விளங்குகின்றது. இரு வயது வந்தோர் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் குவாட்ரிசைக்கிள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. PMV Eas-E குவாட்ரிசைக்கிள் Eas-E மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூ.2,000 வசூலிக்கப்பட்டு வருகின்றது. … Read more

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் படங்கள் கசிந்தது

வரும் நவம்பர் 25ஆம் தேதி இந்திய சந்தையில் வெளிவரவுள்ள புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் படம் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளது. முன்னதாக வரும் நவம்பர் 21 ஆம் தேதி இந்தோனேசியா சந்தையில் இன்னோவா ஹைக்ராஸ் ஜெனிக்ஸ் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. Toyota Innova Hycross புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் புதிய இன்னோவா அதன் முந்தைய மாடலின் தோற்ற அமைப்பில் இருந்து சற்று மாறுபட்டு எஸ்யூவி போன்ற தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.  குரோம் பாகங்கள் சேர்க்கப்பட்டு … Read more

பெங்களூரில் முதல் ஹீரோ Vida ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் விடா (Vida) பிரிவின் முதல் ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது. விடா வி1 ஸ்கூட்டர் விலை ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.59 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. விடா பெங்களூரில் தனது முதல் அனுபவ மையத்துடன் இந்திய சந்தையில் செயல்பட தொடங்கியுள்ளது. விட்டல் மல்லையா சாலையில் அமைந்துள்ள இந்த புதிய அனுபவ மையம், நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர்களான வி1 பிளஸ் மற்றும் வி1 ப்ரோ ஆகியவற்றின் டெஸ்ட் டிரைவ் வழங்கும். பெங்களூருக்கு அடுத்து … Read more

ரூ.92,198 விலையில் பஜாஜ் பல்சர் 125 கார்பன் ஃபைபர் பைக் அறிமுகம்

பிரசத்தி பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தொடக்க நிலை பல்சர் 125 பைக்கில் கார்பன் ஃபைபர் எடிசன் என்ற பெயரில் சிறிய அளவில் கார்பன் ஃபைபர் கிராபிக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டு மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. பல்சர் 125 கார்பன் எடிசன் பைக் மாடல் ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பீளிட் இருக்கை என இரண்டிலும் கிடைக்கிறது. மேலும் நீலம் மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. சிங்கிள் சீட் மாடல் விலை ரூ.92,198 … Read more

ஓலா எலக்ட்ரிக் ஸ்போர்ட் பைக் அறிமுகம் எப்போது..?

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பாளராக வளர்ந்து வரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக ஸ்போர்ட்டிவ் பிரிவில் மின்சார பைக்கினை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் நடத்திய டிவீட்டர் சமூக ஊடக மூலமாக நடத்திய வாக்கெடுப்பில்.., நெட்டிசன்கள் தங்களுக்கு விருப்பமான மோட்டார்சைக்கிள் வகையைப் பற்றிக் கேட்டு ஒரு ட்வீட்டைப் பதிவு செய்தார். பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் க்ரூஸர், அட்வென்ச்சர் … Read more

521 கிமீ ரேஞ்சு.., பிஒய்டி ஆட்டோ 3 (BYD Atto 3) மின்சார எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

இந்திய சந்தையில் பரவலாக மின்சார கார் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் சீனாவை தலைமையிடமாக கொண்ட பிஒய்டி ஆட்டோ 3 (Build Your Dreams Atto 3) மின்சார காரின் விலை ரூபாய் 33.99 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. BYD ஆட்டோ 3 மாடல் இந்திய சந்தையில் எம்ஜி ZS EV விலை ரூ.22.5 லட்சம் முதல் ரூ.26.49 லட்சம் மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் விலை ரூ.23.84 லட்சம் ஆக விளங்கும் கார்களுக்கு போட்டியாகவும்,  கூடுதலாக … Read more

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக 650 சிசி எஞ்சின் அடிப்படையில் சூப்பர் மீட்டியோர் 650 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள நிலையில் முதற்கட்டமாக EICMA 2022 அரங்கில் அறிமுகப்படுத்தியுள்ளது. விற்பனையில் உள்ள மீட்டியோர் 350 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உள்ள சூப்பர் மீட்டியோர் மாடலானது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு மிக ஸ்டைலிசான ஒரு க்ரூஸர் மாடலாக மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. Royal Enfield Super Meteor 650 இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்டல் ஜிடி … Read more

50,000 எலக்ட்ரிக் கார்களை தயாரித்த டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் பயணிகள் எலக்ட்ரிக் வாகன சந்தையை மிகப்பெரிய அளவில் கையகப்படுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தமாக 50,000 எலக்ட்ரிக் கார்களை தற்போது வரை உற்பத்தி செய்துள்ளது. இந்நிறுவனம் தற்போது நான்கு மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. அவை நெக்ஸான் இவி டிகோர் இவி மற்றும் டியாகோ இவி மற்றும் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கான எக்ஸ்பிரஸ் டீ மாடலும் விற்பனை செய்கின்றது. FY2023 இன் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர் 2022), நிறுவனம் அதன் அனைத்து மின்சார … Read more