2023 பஜாஜ் பல்சர் 220F பைக்கின் விலை வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பல்சர் பிராண்டில் உள்ள 220F பைக்கினை மீண்டும் விற்பனைக்கு வெளியிட உள்ளது. பல்சர் 220F பைக்கின் விலை ரூ. 1,39,686 (எக்ஸ்ஷோரூம்) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியான பல்சர் 250 பைக்குகளை தொடர்ந்து சில மாதங்களில் 220 எஃப் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டது. 2023 Bajaj Pulsar 220F கடந்த 2007 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிடப்பட்ட பல்சர் 220 எஃப் மாடல் … Read more

2023 யமஹா ஃபேசினோ, ரே ZR , ரே ZR ஸ்ட்ரீட் ரேலி விற்பனைக்கு வந்தது

இந்தியா யமஹா மோட்டார் (IYM) நிறுவனம் 125 CC ஸ்கூட்டர் சந்தையில் புதுப்பிக்கப்பட்ட ஃபேசினோ 125 Fi ஹைபிரிட், ரே ZR 125 Fi ஹைபிரிட் மற்றும் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி 125 Fi ஹைபிரிட்  என மூன்று மாடல்களையும் புதிய வசதிகளை கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையில் இந்தியாவின் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில், யமஹாவின் 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர்களில் இப்போது E20 எரிபொருளுக்கு ஏற்ற என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. … Read more

2.66 லட்சம் மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு முன்பதிவு.., காத்திருப்பு 2 ஆண்டுகள்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி சந்தையில் தனது வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் வெளியிடப்பட்ட XUV700, ஸ்கார்பியோ N, ஸ்கார்பியோ கிளாசிக், XUV300, XUV400 EV, தார் எஸ்யூவி, பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவற்றுக்கு மொத்தமாக 2,66,000 அதிகமான முன்பதிவுகள் நாடு முழுவதும் டெலிவரிக்கு காத்திருக்கின்றது. மஹிந்திரா ஸ்கார்பியோ (ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் இணைந்து) மொத்தமாக 1.19 லட்சம் முன்பதிவுகளில் மிகப்பெரிய பேக்லாக் உள்ளது, அதே சமயம் பொலிரோ (பொலேரோ மற்றும் பொலேரோ … Read more

2023 டாடா ஹாரியர், சஃபாரி கார்களுக்கு முன்பதிவு துவக்கம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்முறையாக தனது கார்களில் பாதுகாப்பு சார்ந்த ADAS (advanced driver assistance systems) நவீன நுட்பத்தை ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் கொண்டு வந்துள்ள நிலையில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இரண்டு எஸ்யூவி கார்களும் ADAS மற்றும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது. 2023 டாடா ஹாரியர், சஃபாரி 2023 ஆட்டோ எக்ஸ்போவில் புதுப்பிக்கப்பட்ட டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி கார்களில் ரெட் டார்க் பதிப்பை காட்சிப்படுத்தியது. 2023 … Read more

கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி சுசூகி சியாஸ் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனத்தின் சியாஸ் காரில் கூடுதலான பாதுகாப்பு வசதிகளை சேர்த்துள்ளதால் காரின் விலை ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ESP மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றை ஆட்டோமேட்டிக் வகைகளில் மட்டுமே பெற்றுள்ள சியாஸ், இப்போது அனைத்து வகைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. சியாஸ் காரில் ABS, ISOFIX குழந்தை இருக்கைகள் மற்றும் இரட்டை முன் ஏர்பேக்குகளுடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது. அதன் பெரும்பாலான போட்டியாளர்கள் ஆறு ஏர்பேக்குகளை குறைந்தபட்சம் அவற்றின் டாப் வேரியண்டில் வழங்கும் நிலையில் மாருதி இரண்டு மட்டுமே வழங்குகின்றது. … Read more

இந்தியாவில் ரூ.51.43 லட்சத்தில் ஆடி Q3 ஸ்போர்ட் பேக் வெளியிடப்பட்டுள்ளது

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ரூ.51.43 லட்சம் விலையில் ஆடி Q3 ஸ்போர்ட்பேக் எஸ்யூவி காரில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மிக சிறப்பானதாக விளங்குகின்றது. இலவச சலுகையாக 2+3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் வழங்கப்படுகிறது. ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக், இந்தியாவில் தொடக்க நிலை சொகுசு எஸ்யூவி பிரிவில் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி மாடலாக விளங்குகின்றது. ஆடி Q3 ஸ்போர்ட் பேக் Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் Q3 எஸ்யூவி காரின் பவர்டிரெய்னைப் பகிர்ந்து கொள்கின்றன. 190hp, 320Nm … Read more

4 எஸ்யூவி, 2 EV கார்களை தயாரிக்க ரெனோ-நிசான் 5,300 கோடி முதலீடு

இந்திய சந்தையில் ரெனோ-நிசான் (Renault Nissan Automotive India Private Ltd – RNAIPL) கூட்டு நிறுவனம் ரூபாய் 5,300 கோடி முதலீட்டில் 4 காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் 2 எலெக்ட்ரிக் கார்கள் என மொத்தமாக 6 கார்களை விற்பனைக்கு அடுத்த சில ஆண்டுகளுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. உள்ளூரில் பெரும்பாலான உதிரிபாகங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் மிக குறைந்த விலையில் கார்களை வெளியிடக்கூடும். ரெனோ-நிசான் ரெனால்ட்-நிசான் நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நான்கு சிறிய … Read more

2023 ஹூண்டாய் வெர்னா காருக்கு முன்பதிவு துவங்கியது

வரும் மே மாதம் விற்பனைக்கு வர உள்ள 2023 ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) செடான் காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. முன்பதிவு தொகை ரூ. 25,000 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் காரை முன்பதிவு செய்யலாம். சி-பிரிவு செடான் சமீபத்திய நவீனத்துவமான வடிவமைப்பு மொழியைப் பெறுகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் ஹூண்டாய் விற்பனை செய்கின்ற கார்களில் இருந்து தோற்றத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. முன்புறத்தில் அகலமான பெரிய … Read more

2023 யமஹா FZ-X, MT 15 V2 பைக் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் நடைமுறைக்கு வரவுள்ள OBD-2, E20 உள்ளிட்ட அம்சங்களுடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை பெற்றுள்ள FZ-X, MT 15 V2 என இரு பைக் உட்பட FZ-S,FZ-S V4 மற்றும் R15M , R15 V4 என மொத்தமாக 6 பைக்குகள் இன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து யமஹா பைக்குகளிலும் இழுவை கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System – TCS) சேர்க்கப்பட்டு இதற்காக பிரத்யேக மின்னணு அமைப்பின் மூலம் வீல் ஸ்பின் ஆகி சாலைகளில் … Read more

புதிய வசதிகளுடன் யமஹா R15 V4 & R15M விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் பிரசத்தி பெற்ற யமஹா R15 V4 மற்றும் R15M பைக்கில் கூடுதலாக TFT டிஸ்பிளே கிளஸ்ட்டர், ஸ்மார்ட்போன் ஆதரவுடன் OBD-2 மற்றும் E20 எரிபொருள் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இழுவை கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System – TCS) சேர்க்கப்பட்டு இதற்காக பிரத்யேக மின்னணு அமைப்பின் மூலம் வீல் ஸ்பின் ஆகி சாலைகளில் ஏற்படும் டிராக்‌ஷன் இழப்பினை ஈடுகட்டி வாகனம் நிலை தடுமாறுவதனை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யமஹா R15M & R15 V4 … Read more