ரூ.6.39 லட்சத்தில் 2022 டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வந்தது

மாருதி பலேனோ காரின் அடிப்படையிலான டொயோட்டா நிறுவனத்தின் கிளான்ஸா விற்பனைக்கு ரூபாய் 6.39 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய் 9.69 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. Toyota Glanza தோற்றத்தைப் பொறுத்தவரை, கிளான்ஸா ஆனது பலேனோவுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட LED DRL வடிவத்துடன் மாறுபட்ட கிரில், பம்பர் மற்றும் ஹெட்லைட் வடிவமைப்பைப் பெறுகிறது. 16-இன்ச் அலாய் வீல்களும் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளன. புதிய கிளான்ஸா நான்கு டிரிம் நிலைகளில் வழங்கப்படுகிறது – அவை E, S, … Read more

புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் அறிமுகம்

வென்டோ காருக்கு மாற்றாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் (Volkswagen Virtus) செடான் காரை இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 25 நாடுகளுக்கு மேலாக ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இன்று முதல் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு மே மாதம் மத்தியில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0 IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட Virtus செடான் ரக மாடல் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்கோடா ஸ்லாவியா காரினை அடிப்படையாக கொண்டதாகும். ஸ்லாவியா மற்றும் டைகன் காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை … Read more

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்கிராம் 411 அறிமுக தேதி வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ஹிமாலயன் ஸ்கிராம் 411 (Royal Enfield Scram 411)பைக்கினை விற்பனைக்கு வரும் மார்ச் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. தோற்ற அமைப்பினை பொறுத்தவரை ஹிமாலயனில் இருந்து பல்வேறு மாறுபாடுகள் கொண்டு உள்ளது. குறிப்பாக முகப்பு ஹெட்லைட்டில் சிறிய மாற்றம் உட்பட மேலும் பெட்ரோல் டேங்க் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பேணல், இருக்கையில் சிறிய மாற்றம் மற்றும் பக்கவாட்டு பேனல் போன்றவைகள் இந்த மாடலுக்கு புதுப்பிக்கப்படடுள்ளது. மேலும் முன்புறம் வீல் … Read more

461 கிமீ ரேஞ்சு.., எம்ஜி ZS EV எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்தது

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ZS EV எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு ₹ 21.99 லட்சம் முதல் ₹ 25.88 வரையிலான விலையில் வெளியாகியுள்ளது. புதிய மாடலின் பேட்டரி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது 461 கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூபாய் 50 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது விற்பனையில் கிடைக்கின்ற எம்ஜி ஆஸ்டர் பெட்ரோல் எஸ்யூவி காரின் அடிப்படையில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய மாடல் முந்தைய மாடலை விட … Read more

டாடா அல்ட்ரோஸ் DCA ஆட்டோமேட்டிக் காருக்கு முன்பதிவு துவங்கியது

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் DCA எனப்படுகின்ற டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் விற்பனைக்கு கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அதனால் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. டாடாவின் Altroz DCA (Dual Clutch Automatic) என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது டூயல் கிளட்ச் தொழில்நுட்பத்துடன் இரட்டை கிளட்ச் கியர்பாக்ஸைப் பயன்படுத்தும். கூடுதலாக, அல்ட்ரோஸ் DCA ஆனது XT, XZ மற்றும் XZ+ வகைகளில் தனியான டார்க் எடிஷன் வரிசையுடன் விற்பனை … Read more

ஹீரோ எலெக்ட்ரிக் Eddy ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் குறைந்த வேகத்தில் பயணிக்கும் Eddy ஸ்கூட்டர் ₹ 72,000 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டுள்ள எடி ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவெண் பெற வேண்டிய அவசியம் இல்லை. ஹீரோ எடியின் விரிவான விவரக்குறிப்புகள் விரைவில் நடைபெறும் அறிமுக விழாவில் வெளிப்படுத்தப்படும். முழு பேட்டரி வரம்பு வெளியிடப்படவில்லை என்றாலும், அது … Read more

4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற நிசான் மேக்னைட் மற்றும் ரெனோ கைகெர் – Global NCAP

இந்திய சந்தையில் தயாரிக்கப்பட்டு இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற நிசான் நிறுவனத்தின் மேக்னைட் மற்றும் ரெனோ நிறுவனத்தின் கைகெர் எஸ்யூவி கார்களை குளோபல் என்சிஏபி மையம் மூலம் Safer Cars For India திட்டத்தின் கீழ் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. நிசான் மேக்னைட் GNCAP மேக்னைட் காரின் வயது வந்தோருக்கான பாதுகாப்புச் சோதனையில் 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. 17 புள்ளிகளுக்கு 11.85 புள்ளிகளைப் பெற்றது. இருப்பினும்,  குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சோதனையில் … Read more

ஹோண்டா சிட்டி, ஜாஸ் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது – Global NCAP

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற காரர்களுக்கு குளோபல் என்சிஏபி மையம் மூலம் Safer Cars For India திட்டத்தின் கீழ் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்ட நிலையில் ஹோண்டா சிட்டி, ஜாஸ் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹோண்டா சிட்டி GNCAP சிட்டி காரின் வயது வந்தோருக்கான பாதுகாப்புச் சோதனையில் 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. 17 புள்ளிகளுக்கு 12.03 புள்ளிகளைப் பெற்றது.  குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சோதனையில் 49 புள்ளிகளுக்கு 38.27 மதிப்பெண்களைப் சிறப்பாகச் செயல்பட்டது. எனவே குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர … Read more

₹.8.99 லட்சத்தில் கியா கேரன்ஸ் விற்பனைக்கு வந்தது

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட கேரன்ஸ் அறிமுக ஆரம்ப விலை ₹.8.99 லட்சம் முதல் ₹.16.99 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கேரன்ஸ் காரை பொறுத்தவரை செல்டோஸ் காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டு கூடுதலான நீளத்தை பெற்றதாக அமைந்திருக்கின்றது. எம்பிவி மற்றும் எஸ்யூவி ரக கார்களின் கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கேரன்ஸ் மாடல் பிரிமியம் பிரெஸ்டிஜ் பிரெஸ்டிஜ் பிளஸ் லக்சூரி மற்றும் லக்சூரி பிளஸ் கிடைக்கின்றது. கியா கேரன்ஸ் இரு பெட்ரோல் மற்றும் … Read more

விரைவில்.., அதிக ரேஞ்சு வழங்கும் டாடா நெக்ஸான் EV அறிமுகம்

இந்தியாவின் மிக பிரபலமான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் EV காரில் கூடுதலான ரேஞ்சு வழங்கும் மாடலை விற்பனைக்கு ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூரம் பயணிப்பதற்க்கான நெக்ஸான் மின்சார காரில், பெரிய 40kWh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய நெக்ஸான் EV உடன் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் விற்கப்படும் மின்சார கார்களில் 60 சதவீத சந்தையை நெக்ஸான் கொண்டுள்ளது. டாடா நெக்ஸான் இவி சிறப்புகள் விற்பனையில் கிடைக்கின்ற நெக்ஸான் … Read more