ஹோண்டா சிட்டி, ஜாஸ் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது – Global NCAP

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற காரர்களுக்கு குளோபல் என்சிஏபி மையம் மூலம் Safer Cars For India திட்டத்தின் கீழ் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்ட நிலையில் ஹோண்டா சிட்டி, ஜாஸ் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹோண்டா சிட்டி GNCAP சிட்டி காரின் வயது வந்தோருக்கான பாதுகாப்புச் சோதனையில் 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. 17 புள்ளிகளுக்கு 12.03 புள்ளிகளைப் பெற்றது.  குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சோதனையில் 49 புள்ளிகளுக்கு 38.27 மதிப்பெண்களைப் சிறப்பாகச் செயல்பட்டது. எனவே குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர … Read more

₹.8.99 லட்சத்தில் கியா கேரன்ஸ் விற்பனைக்கு வந்தது

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட கேரன்ஸ் அறிமுக ஆரம்ப விலை ₹.8.99 லட்சம் முதல் ₹.16.99 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கேரன்ஸ் காரை பொறுத்தவரை செல்டோஸ் காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டு கூடுதலான நீளத்தை பெற்றதாக அமைந்திருக்கின்றது. எம்பிவி மற்றும் எஸ்யூவி ரக கார்களின் கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கேரன்ஸ் மாடல் பிரிமியம் பிரெஸ்டிஜ் பிரெஸ்டிஜ் பிளஸ் லக்சூரி மற்றும் லக்சூரி பிளஸ் கிடைக்கின்றது. கியா கேரன்ஸ் இரு பெட்ரோல் மற்றும் … Read more

விரைவில்.., அதிக ரேஞ்சு வழங்கும் டாடா நெக்ஸான் EV அறிமுகம்

இந்தியாவின் மிக பிரபலமான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் EV காரில் கூடுதலான ரேஞ்சு வழங்கும் மாடலை விற்பனைக்கு ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூரம் பயணிப்பதற்க்கான நெக்ஸான் மின்சார காரில், பெரிய 40kWh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய நெக்ஸான் EV உடன் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் விற்கப்படும் மின்சார கார்களில் 60 சதவீத சந்தையை நெக்ஸான் கொண்டுள்ளது. டாடா நெக்ஸான் இவி சிறப்புகள் விற்பனையில் கிடைக்கின்ற நெக்ஸான் … Read more

மீண்டும் ஹோண்டா CBR150R பைக் இந்தியா வருகையா..?

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற CBR150R பைக்கினை இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வெளியிடும் நோக்கில் டிசைன் அம்சத்திற்க்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. CBR150R சிறப்பான ஸ்போர்ட் பைக் போல் அமைந்துள்ள கூர்மையான ஃபேரிங் பேனல், கூர்மையான பேனலுடன் கூடிய எரிபொருள் டேங்க் மற்றும் டெயில் பகுதி மேல்நோக்கி உள்ளது. அனைத்தும் LED லைட்டிங் மற்றும் ரிவர்ஸ் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. சேஸ்ஸைப் பொறுத்தவரை, CBR150R ஆனது USD ஃபோர்க் மற்றும் … Read more

மஹிந்திரா Born எலெக்ட்ரிக் எஸ்யூவி டீசர் வெளியானது

வரும் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள Born Electric எஸ்யூவி கார்களின் டீஸரை முதன் முறையாக மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மஹிந்திரா அட்வான்ஸ் டிசைன் ஐரோப்பா (Mahindra advance design Europe – MADE) பிரிவின் தலைவர் பிரதாப் போஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள டிசைன் வடிவமைப்புகளை கொண்ட மின்சார எஸ்யூவி ஆனது விற்பனைக்கு அடுத்த சில ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படுகின்றது. வெளியிடப்பட்டுள்ள Born EV டீசரில் மூன்று கார்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று காம்பேக்ட் எஸ்யூவி மற்றொன்று நடுத்தர ரக … Read more

புதிய மாருதி சுசூகி பலேனோ எதிர்பார்ப்புகள்..?

வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள புதிய மாருதி பலெனோ கார் நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. தற்போது நெக்ஸா டீலர்ஷிப் மற்றும் ஆன்லைன் வழியாக முன்பதிவு நடைபெற்று வருகின்றது. 2022 மாருதி சுசூகி Baleno புதிய பலேனோ சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா ஆகிய நான்கு வகைகளில் தொடர்ந்து வழங்கப்படும். சுசூக்கி பலேனோ காரில் தொடர்ந்து என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் 82 bhp பவரை வழங்கும் … Read more

விரைவில்.., ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 விற்பனைக்கு அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற அட்வென்ச்சர் ஸ்டைல் மாடலான ஹிமாலயன் பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய ஸ்கிராம் 411 மாடலை பொருத்தவரை விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஹிமாலயன் மாடலை விட ரூபாய் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை குறைவாக எதிர்பார்க்கப்படுகின்றது மிகவும் நேர்த்தியான ஆன்ரோடு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். ராயல் என்ஃபீல்டு Scram 411 தோற்ற அமைப்பினை பொறுத்தவரை ஹிமாலயனில் இருந்து பல்வேறு மாறுபாடுகள் … Read more

₹.1.16 லட்சத்தில் 2022 யமஹா FZS விற்பனைக்கு வெளியானது

சிறிய அளவிலான மாற்றங்களை பெற்ற யமஹா எஃப்இசட் எஸ் பைக் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. கூடுதலாக Dlx வேரியன்ட விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய மாடலை பொருத்தவரை மிக நேர்த்தியான அமைப்புகளை பெற்று மேட் ப்ளூ மற்றும் மேட் ரெட் என இரண்டு நிறங்களை மட்டும் கொண்டுள்ளது. FZS Dlx வேரியண்ட்டில் புதிய மெட்டாலிக் பிளாக் (டூயல் டோன் இருக்கை), மெட்டாலிக் டீப் ரெட் (டூயல் டோன் இருக்கை) மற்றும் சாலிட் கிரே (கருப்பு இருக்கை) என மூன்று … Read more

யமஹா பொங்கல் திருநாள் சலுகைகளை அறிவித்துள்ளது

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனம், தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு சலுகைகளை இன்று அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஜனவரி மாதம் 31 வரை செல்லுபடியாகும். இந்தியாவில் கிடைக்கும் யமஹாவின் 125cc ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல், 150cc FZ மாடல் மற்றும் 155cc YZF-R15 V3 மாடல் ஆகியவற்றில் தற்போது சலுகைகள் பொருந்தும். தமிழ்நாடு மாநிலத்திற்கான பொங்கல் சலுகை விவரங்கள் கீழே: ஃபேசினோ 125 Fi ஹைப்ரிட் … Read more

டாடா டியாகோ & டிகோர் சிஎன்ஜி முன்பதிவு ஆரம்பம்

டியாகோ மற்றும் டிகோர் என இரண்டிலும் CNG மாறுபாட்டை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடுவதனை டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது. இந்த மாடல் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் எனவே சிஎன்ஜி மாடலுக்கு முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. தற்போது விற்பனையில் உள்ள பெட்ரோல் மாடலை விட தோற்ற அமைப்பில் அல்லது மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். அதிகபட்சமாக 85bhp மற்றும் 113Nm டார்க்கை உற்பத்தி … Read more