ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் டிசைன் வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவன முதல் எலக்ட்ரிக் பைக் குறித்தான டிசைன் வரைபடமானது தற்பொழுது காப்புரிமை பெறப்பட்ட பதிவு செய்யப்பட்டுள்ள படம் முதன்முறையாக ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது. தனது ரெட்ரோ பாரம்பரியத்தை தொடர்ந்து பராமரிக்கும் வகையில் தான் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை ஆர்இ நிறுவனம் வடிவமைத்து வருவதாக புதிய காப்புரிமை பெறப்பட்ட படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. முன்புறத்தில் கிர்டர் போர்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது இது ஒரு பழமையான ஒரு தொழில்நுட்பத்தை நினைவுபடுத்துகின்றதாக அதே நேரத்தில் பியூவல் … Read more

மெர்சிடிஸ்-பென்ஸ் EQA 250+ விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் ரூபாய் 66 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் EQA 250+ எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம்.Manfaktur Mountain கிரே மேக்னோ நிறத்துடன் ஏழு விதமான நிறங்கள் ஆனது இந்த காரில் கிடைக்கின்றது. விற்பனையில் உள்ள ICE ரக GLA எஸ்யூவி மாடலைப் போலவே அமைந்திருக்கின்றது முன்புறத்தில் மிகவும் அகலமான கிரில் அமைப்பானது கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்ட மதியில் மெர்சிடஸ் பென்ஸ் லோகோ புதிய கிளஸ்டர் போன்றவை எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றது பின்புறத்திலும் எல்இடி … Read more

டாடாவின் எலக்ட்ரிக் எஸ்யூவி கூபே.. Curvv.ev டீசர் வெளியானது

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள புதிய டீசரின் மூலம் Curvv.ev எஸ்யூவி கூபே மாடலுக்கான அறிமுகத்தை உறுதி செய்துள்ளதால் விற்பனைக்கு இந்த மாத  இறுதி அல்லது அடுத்த மாத துவக்க வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. கர்வ் எஸ்யூவி காரில் எலக்ட்ரிக் மட்டுமல்லாமல் ICE மாடலும் விற்பனைக்கு வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு கான்செப்ட்மாடல் காட்சிக்கு வந்த நிலையில் தற்பொழுது முதன்முறையாக எலக்ட்ரிக் காரின் டீசர் வெளியிட்டுள்ளது. பஞ்ச்.இவி காரினை தொடர்ந்து புதிதாக டாடா மோட்டார்சின்  Acti-EV பிளாட்ஃபாரத்தின் … Read more

ஜூலையில் டாப் இடத்தை கைப்பற்றிய பஞ்ச் இந்தியாவின் 10 கார்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த ஜூலை 2024 மாதந்திர விற்பனை முடிவில் டாடா பஞ்ச் எஸ்யூவி முதலிடத்தை கைபற்றியுள்ள நிலையில் இரண்டாமிடத்தில் மாருதி ஸ்விஃப்ட் உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் நடுத்தர எஸ்யூவி மாடலாக விளங்கும் கிரெட்டா மூன்றாமிடத்தில் உள்ளது. Fada அறிக்கையின் படி ஜூன் 2024 ஒட்டுமொத்த இந்தியாவின் சில்லறை விற்பனை எண்ணிக்கை 2,81,566 முந்தைய ஆண்டு எண்ணிக்கை 3,03,358 இதே காலக்கட்டத்தை ஒப்பீடும் பொழுது வெறும் 6.77 % சரிவினை பதிவு செய்துள்ளது. குறிப்பாக மாருதி, … Read more

பிஎம்டபிள்யூ R 12, R 12 nineT விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் R 12, R 12 nineT ரோட்ஸ்டெர் என இரு மாடல்களும் முறையே ரூ.19.90 லட்சம் மற்றும் ரூ.20.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் பொதுவாக 1,170cc காற்று/ஆயில் கூல்டு பாக்ஸர் என்ஜின் பொருத்தப்பட்டு 7,000rpm-ல் அதிகபட்சமாக 110hp மற்றும் 6,500rpm-ல் 115Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. புதிய பிஎம்டபிள்யூ R 12 nineT மாடலில் பிரஷ் செய்யப்பட்டு பக்கவாட்டு பேனல்களை பெற்றுள்ள அலுமினியம் டேங்க், இருக்கை … Read more

தமிழ்நாட்டில் பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்கின் அறிமுகம் எப்பொழுது..!

உலகின் முதல் சிஎன்ஜி பைக்கினை வெளியிட்டுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஃப்ரீடம் 125 மாடலை 330 கிமீ ரேஞ்சை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் வெளிப்படுத்தும் நிலையில் தமழ்நாட்டில் விற்பனைக்கு எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  முதற்கட்டமாக மஹாராஷ்டிரா, குஜராத் என இரு மாநிலங்களில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மாடலில் உள்ள 125சிசி என்ஜின் அதிகபட்சமாக 9.7PS பவர் மற்றும் 9.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. … Read more

பஜாஜ் வெளியிட்டுள்ள ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் சிறப்புகள்

உலக ஆட்டோமொபைல் வரலாற்றில் முதன்முறையாக மோடார்சைக்கிளில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வகையில் ஃப்ரீடம் 125 பைக்கினை ரூ.95,000 விலையில் (எக்ஸ்-ஷோரூம்) பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம்மில் மிக இலகுவாக சிஎன்ஜிக்கும் பெட்ரோலுக்கு மாற்றிக் கொள்ளும் வகையிலான சுவிட்ச் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள இருக்கை மிக நீளமானதாக உள்ளதால் நான்கு நபர்கள் கூட அமரும் வகையில் இடம் இருந்தாலும் இரண்டு பேர் மட்டும் … Read more

ஜிம்னி எஸ்யூவிக்கு ரூ.2.75 லட்சம் வரை சலுகையை அறிவித்த மாருதி சுசூகி

ரூ.12.74 லட்சத்தில் துவங்குகின்ற ஜிம்னி எஸ்யூவி மாடலுக்கு போதிய வரவேற்பின்மையால் தொடர்ந்து அறிமுகம் முதலே சலுகைகளை அறிவித்து வருகின்ற மாருதி சுசூகி தற்பொழுது ரூ.2.75 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது. இருப்பில் உள்ள ஜிம்னி மாடல்களின் எண்ணிக்கையை பொறுத்து சலுகை வழங்கப்படுகின்றது. ஒரு சில டீலர்களில் அதிகபட்ச விலை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,00,000 ரொக்க தள்ளுபடி, சில ஆக்செரீஸ் வாங்குகையில் தள்ளுபடி மற்றும் போனஸ் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்ப்புகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட 5 டோர் ஜிம்னி … Read more

ஹூண்டாய் 2024 அல்கசாரின் உற்பத்தியை துவங்கியதா..!

சமீபத்தில் முழுமையாக உற்பத்தியை எட்டிய ஹூண்டாய் அல்கசார் 2024 மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் படங்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக புதிய சிவப்பு நிறத்தை பெற்றதாக வரவுள்ள மாடல் கிரெட்டா எஸ்யூவி தோற்றத்தில் இருந்து மாறுபட்ட முன்பக்க டிசைன் மற்றும் ஹெட்லைட் பெறுகின்றது. 6 மற்றும் 7 இருக்கை பெற்றுள்ள அல்கசாரில் உள்ள இன்டிரியர்  கிரெட்டாவை போலவே இரட்டை ஸ்கீரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றிருக்கும்.  மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் … Read more

இந்தியா வரவிருக்கும் வின்ஃபாஸ்ட் VF e34 அறிமுக விபரம்

தூத்துக்குடியில் துவங்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் தொழிற்சாலையில் முதற்கட்டமாக VF e34 எலக்ட்ரிக் எஸ்யூவி தயாரிக்கப்பட உள்ளதால் இந்த மாடலை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய பேட்டரி, ரேஞ்ச் உட்ப்பட முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம். 4.3 நீளமுள்ள இ34 மாடல் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் CKD எனப்படுகின்ற பாகங்களை தருவித்து ஒரங்கிணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், ஆலை முழுமையான பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 2025ல் தயாராகும் பொழுது இந்தியாவிலே முழுமையாக தயாரிக்கப்பட உள்ளது. Vinfast … Read more