2024 ஹோண்டா CBR250RR அறிமுகமானது.. ஆனா இந்தியா வருமா..?

மலேசியாவில் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய 2024 CBR250RR ஸ்போர்ட்டிவ் பைக்கில் பவர் அதிகரிக்கப்பட்டு புதிய பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ளது. மற்றபடி, டிசைனில் பெரிய அளவில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. 2024 Honda CBR250RR ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள ஹோண்டாவின் சிபிஆர்250ஆர்ஆர் பைக்கில் உள்ள 8 வால்வுகளை கொண்ட 249சிசி என்ஜின் அதிகபட்சமாக 41bhp பவரை 13,000rpm-லும், 25Nm டார்க்கினை 11,000rpm-ல் வழங்குகின்றது. குறிப்பாக முந்தைய மாடலை விட 1 hp வரை பவர் … Read more

அறிமுகத்திற்கு முன்னர் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

650சிசி சந்தையில் உள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ரெட்ரோ வடிவமைப்பினை பெற்றுள்ள பிஎஸ்ஏ நிறுவன கோல்டு ஸ்டார் 650 மாடலில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ, ஜாவா மற்றும் யெஸ்டி போன்ற நிறுவனங்களில் ஜாவா, யெஸ்டி பிராண்டு இந்தியாவில் கிடைக்கின்றது. இங்கிலாந்து, ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த பிஎஸ்ஏ பிராண்டினை தற்பொழுது இந்திய சந்தைக்கு … Read more

இந்தியா வரவிருக்கும் ஹூண்டாய் இன்ஸ்டெர் இ-எஸ்யூவி அறிமுகம்

ஹூண்டாய் வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டெர் எலக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி கார் இந்திய சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக இந்த மாடல் 300 மற்றும் 355 கிலோமீட்டர் என இரண்டு விதமாக ரேஞ்ச் வெளிப்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Hyundai Inster Electric SUV ஏற்கனவே ஒரு சில நாடுகளில் விற்பனையில் உள்ள ICE கேஸ்பெர் மாடலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்யூவி காரில் சில ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் வெளிப்புறத் தோற்றத்தில் சில வித்தியாசங்களை … Read more

பிரேசிலில் பஜாஜ் ஆட்டோ தொழிற்சாலை உற்பத்தி துவக்கம்

பிரேசில் நாட்டில் முதன்முறையாக இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ களமிறங்கியுள்ள நிலையில் ஆண்டுக்கு சுமார் 20,000 இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த பிரேசில் தொழிற்சாலையில் டாமினார் வரிசை பைக்குகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. பல்சர் 200 மற்றும் 160 என இரு மாடல்களும் டாமினார் பெயரில் விற்பனை செய்யப்படுகின்றது. 9,600 சதுர மீட்டர் பரப்பளவில் என்ஜின் அசெம்பிளி மற்றும் வாகன அசெம்பிளி லைன் மற்றும் சோதனை வசதி … Read more

3வது ஆலைக்கு ரூ.2,000 கோடி முதலீட்டை மேற்கொள்ளும் ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களில் ஒன்றான ஏதெர் எனர்ஜியின் மூன்றாவது தொழிற்சாலையில் ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய மஹாராஷ்டிரா மாநிலத்தில் துவங்க ரூ.2,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனம் பெங்களூருவில் ஆண்டுக்கு 1.20 லட்சம் யூனிட்டுகளை தயாரிக்கும் ஆலையுடன், தமிழ்நாட்டில் ஆண்டுக்கு மூன்று லட்சம் யூனிட்டுகளை தயாரிக்கும் திறன் பெற்ற இரு ஆலைகளுடன் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் 4.20 லட்சம் ஆக உள்ளது. 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் … Read more

யமஹா வெளியிட்ட Y-AMT நுட்பம் என்றால் என்ன.?

யமஹா நிறுவனம் முன்னணி நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ள நிலையில், Y-AMT (Yamaha Automated Manual Transmission) எனும் நுட்பத்தின் மூலம் மிக இலகுவாக கியர் ஷிஃப்ட் அனுபவத்தை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Yamaha Automated Manual Transmission என்பது முழுமையாக ஆட்டோமேட்டிக் முறையில் இயங்கவும் அல்லது மேனுவல் முறையில் கியர் ஷிஃப்ட்டை பட்டன் மூலம் மேற்கொள்ளும் வகையில் வழங்கியுள்ளதால், மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக யமஹா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால் … Read more

50,000 பேருந்துகளை தயாரித்த ஐஷர் டிரக்ஸ் & பஸ்

வால்வோ ஐஷர் வர்த்தக வாகனங்கள் பிரிவின் கீழ் செயல்படுகின்ற ஐஷர் டிரக்ஸ் மற்றும் பஸ் நிறுவனத்தின் பாக்கத் ஆலையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட 50,000வது ஐஷர் ஸ்கைலைன் Pro E மின்சாரப் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஐஷர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வினோத் அகர்வால், எம்டி & சிஇஓ, கூறுகையில் “VECV அனைத்து பிரிவுகளிலும் சிறந்த தயாரிப்புகளை வழங்குவதுடன் மற்றும் அனைத்து ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்கக்கூடிய குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் வளைவை விட தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த மைல்கல், இந்திய பேருந்துத் … Read more

கோல்டு ஸ்டாரின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த பிஎஸ்ஏ

மஹிந்திரா கீழ் செயல்படுகின்ற கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பிஎஸ்ஏ பிராண்டின்  கோல்ட் ஸ்டார் 650 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. 650 சிசி சந்தையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு கடும் சவாலினை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக என்ற இண்டர்செப்டார் 650 மாடல் எதிர் கொள்ளும் வகையில் இந்த மாடல் ஆனது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் 650cc பிரிவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் இரட்டை சிலிண்டர் என்ஜினை கொடுத்திருக்கின்றது ஆனால் பிஎஸ்ஏ … Read more

ரூ.1.10 லட்சம் விலையில் வந்த பிகாஸ் RUV350 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

பிகாஸ் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள புதிய RUV350 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 120 கிமீ ஆக உள்ள நிலையில் விலையை ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Bgauss RUV350 Escooter பிகாஸின் RUV350 (Rider Utility Vehicle) என்ற மாடலின் வடிவமைப்பு தென் கிழக்கு அசிய நாடுகளில் பிரபலமான ஒன்றாகும். இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ள 3kWh பேட்டரி பேக் ஆனது இருக்கையில் அடியில் பொருத்தப்பட்டு அலுமினிய கேஸ் உடன், பேட்டரி … Read more

குறைந்த விலை 2024 ஜாவா 350 விற்பனைக்கு வெளியானது

ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடுக்கும் வகையில், ஜாவா 350 மாடலில் ஸ்போக் வீல் பெற்ற மாடலை ரூ.1.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளதால், தற்பொழுது நான்கு விதமான வகையில் கிடைக்க துவங்கியுள்ளது. 2024 Jawa 350 புதிய ஜாவா 350 பைக்கின் 334சிசி என்ஜின் அறிமுகத்தின் பொழுது விலை ரூ.2.15 லட்சத்தில் துவங்கிய அதிகபட்சமாக ரூ. 2.24 லட்சம் வரை அமைந்திருந்தது. தற்பொழுது ரூ.16,000 வரை விலை குறைவான வேரியண்ட் வெளியாகியுள்ளது. 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 … Read more