ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள் – Royal Enfield Bullet 350 on-road price,specs

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட புல்லட் 350 மோட்டார்சைக்கிள் மாடலின் விலை ரூ. 2,28,150 முதல் ரூ. 2,69,842 வரை அமைந்துள்ளது. 2025 புல்லட் 350 பைக்கின் மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Royal Enfield Bullet 350 1932 ஆம் ஆண்டு GS 350cc Bullet என்ற பெயரில் துவங்கிய புல்லட் மோட்டார்சைக்கிளின் பயணம் தொடர்ந்து காலத்துக்கு ஏற்ற பல்வேறு மாற்றங்களை பெற்று விற்பனை … Read more

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான 450S, 450X என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் கூடுதல் வசதிகள், முந்தைய மாடலை விட வேகமான சார்ஜிங் பெற்று ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.58 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஹைப்பர் சேன்ட் மற்றும் ஸ்டெல்த் ப்ளூ என இரு நிறங்களை 450 வரிசை பெற்றுள்ள நிலையில் ஆரம்ப நிலை 450எஸ் ஸ்டெல்த் ப்ளூ நிறத்தை மட்டும் பெற்றுள்ளது. கூடுதலாக  மேஜிக் ட்விஸ்ட் (Low and … Read more

ஹூண்டாய் க்ரெட்டா EV முன்பதிவு துவங்கியது.!

ஜனவரி 17 ஆம் தேதி வெளியாக உள்ள க்ரெட்டா எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது. 4 விதமான வேரியண்டில் 10 விதமான நிறங்கள் பெற்று 18 விதமான வகைகள் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே க்ரெட்டா இவி பேட்டரி, ரேஞ்ச் உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் ஹூண்டாய் வெளியிட்டுள்ளதால் புக்கிங் துவங்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாத மத்தியில் விநியோகம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாப் வேரியண்டில் உள்ள  51.4kWh பேட்டரி பெறுகின்ற லாங் … Read more

ஜனவரி 19.., ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210, ஜூம் 125 அல்லது 250cc வருகையா..?

வரும் ஜனவரி 19ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக எக்ஸ்பல்ஸ் 210 அல்லது ஜூம் 125, ஜூம் 160 உள்ளிட்ட மாடல்களை விற்பனைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற EICMA 2024 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ நிறுவனத்தின் புதிய கரீஸ்மா XMR 250, எக்ஸ்ட்ரீம் 250R, எக்ஸ்பல்ஸ் 210 உள்ளிட்ட மாடல்களுடன் எக்ஸ்பல்ஸ் 421 டீசர், மேலும் புதிய மேவ்ரிக் 440 நிறங்கள் மற்றும் ஜூம் 125 அட்வென்ச்சர் மற்றும் ஜூம் … Read more

2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Bajaj Chetak 35 e scooter on-Road price and Specs

பஜாஜ் ஆட்டோவின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிதாக வந்துள்ள 35 சீரிஸ் மாடலில் 3501, 3502 மற்றும் 3503 என மூன்று வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Bajaj Chetak 35 Series ரெட்ரோ ஸ்டைலிங் அமைப்பினை கொண்டுள்ள சேத்தக் 35 சீரிஸ் மாடலில் உள்ள 3501, 3502 மற்றும் 3503 என மூன்று வேரியண்டிலும் பொதுவாக 3.5Kwh  பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக … Read more

ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Hero Vida V2 e scooter on-Road price and Specs

ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற விடா எலெக்ட்ரிக் பிராண்டின் வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் V2 லைட், V2  பிளஸ், மற்றும் V2 புரோ என மூன்று விதமான வேரியண்டின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Hero Vida V2 முந்தைய விடா வி1 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விடா வி2 ஸ்கூட்டரில் V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், தற்பொழுது வி2 லைட் மாடலில் … Read more

புதிய கியா சிரோஸ் முன்பதிவு துவங்கியது..!

இந்தியாவில் கியா நிறுவனத்தின் புதிய சிரோஸ் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 3, 2025 முதல் துவங்குகிறது. முன்பதிவு கட்டணமாக ரூபாய் 25 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில் விலை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 4 மீட்டருக்கும் குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் சற்று மாறுபட்ட வித்தியாசமான டால்பாய் எஸ்யூவி வடிவமைப்பினை கொண்டிருக்கின்ற சிரோஸ் மாடலுக்கு போட்டியாக சொனெட், புதிய ஸ்கோடா கைலாக், எக்ஸ்யூவி 3XO, நெக்ஸான், பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ … Read more

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகின்றது..!

புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் கூடுதலான நிறங்கள் பெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் பிரபலமான 450X, 450S என இரண்டு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஸ்கூட்டரின் அடிப்படையான டிசைனில் எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையில் கூடுதலாக டிராக்ஷன் கண்ட்ரோல் சில வசதிகள் பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், AtherStack 6 மென்பொருள் மேம்பாடு கொண்டிருக்கலாம். மற்றபடி, கூடுதலாக சில நிறங்கள் பெறக்கூடும். தற்பொழுது விற்பனையில் உள்ள 450s ஸ்கூட்டரில்  2.9Kwh மற்றும் 3.7Kwh … Read more

473 கிமீ ரேஞ்ச்.., க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை வெளியிட்ட ஹூண்டாய்

ஜனவரி 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 42kWh மற்றும் 51.4kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷனை பெற்று முறையே 390 கிமீ முதல் 473 கிமீ வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தும் என ARAI மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Executive, Smart, Premium மற்றும் Excellence என நான்கு விதமான வேரியண்ட் பெற்று 8 விதமான ஒற்றை நிறங்கள், இரண்டு டூயல் டோன் நிறங்களுடன் இதில் மூன்று மேட் நிறங்களை … Read more

QC1 மற்றும் ஆக்டிவா e ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய ஹோண்டா

ஹோண்டா டூ வீலர் இந்தியா நிறுவனத்தின் புதிய  க்யூசி1 மற்றும் ஆக்டிவா இ என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூபாய் ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் எந்தவொரு நகரத்திலும் தற்பொழுது முன்பதிவு துவங்கப்படவில்லை, எனவே அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோண்டாவின் டீலர்கள் மூலம் ஆக்டிவா இ ஸ்கூட்டருக்கு பெங்களூரு, டெல்லி, மும்பை என மூன்று … Read more