ஜூலை 5ல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ

குறைந்த செலவில் அதிக மைலேஜ் என்ற நோக்கத்தை கொண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள பஜாஜ் ஆட்டோவின் சிஎன்ஜி பைக் மாடலை ஜூலை 5, 2024ல் வெளியிட உள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ தலைவர் தொடர்ந்து தனது செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வந்த சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் தற்பொழுது உள்ள பெட்ரோல் மாடல்களை விட 50-60 % வரை எரிபொருள் செலவினை குறைக்கும் நோக்கில் தயாரிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 110-150 சிசி பிரிவில் பல்வேறு மாறுபட்ட … Read more

ரூ.1.10 லட்சம் வரை ஸ்கோடாவின் குஷாக் மற்றும் ஸ்லாவியா விலை குறைப்பு

கிளாசிக் எடிசன் என்ற பெயரில் 1.0 லிட்டர் என்ஜின் பெற்ற குஷாக் எஸ்யூவி விலை ரூ.10.89 லட்சத்தில் துவங்கி டாப் பிரீஸ்டீஜ் வேரியண்ட் விலை ரூ.18.79 லட்சம் ஆக கிடைக்கும் என ஸ்கோடா அறிவித்துள்ளது. இதில் ஆரம்ப நிலை வேரியண்ட் முந்தைய மாடலை விட ரூ.1.10 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஏக்டிவ்,ஆம்பியஷன் மற்றும் ஸ்டைல் வேரியண்டுகள் தற்பொழுது கிளாசிக், சிக்னேச்சர், மற்றும் பிரீஸ்டீஜ் என முறையே மாற்றப்பட்டுள்ளது. ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் … Read more

ரூ.11.82 லட்சத்தில் C3 ஏர்கிராஸ் தோனி எடிசனை வெளியிட்ட சிட்ரோன்

100 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் தோனி சிறப்பு எடிசனில் கூடுதலான சில கஸ்டமைஸ் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விலை ரூ.11.82 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திர சிங் தோனியின் கையொப்பமிடப்பட்ட 100 யூனிட்களில் ஒன்றில் கையொப்பமிடப்பட்ட கையுறையை வெல்லும் வாய்ப்பு உள்ளது. மேலும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்க உள்ளது. 5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் … Read more

சக்திவாய்ந்த யமஹா NMAX டர்போ எடிசன்., இந்தியா வருமா..?

இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா NMax மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டரில் கூடுதலாக டர்போ மற்றும் ஸ்போர்ட் டூரிங் என இரு ரைடிங் மோடுகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில்  ஏரோக்ஸ் 155 விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் என்மேக்ஸ் 155 ஆனது பாரத் மொபைலிட்டி கண்காட்சியிலும் காட்சிக்கு வந்திருந்தாலும், இந்திய அறிமுகத்தை தற்பொழுது வரை யமஹா உறுதிப்படுத்தவில்லை. புதிதாக யமஹா தனது ஸ்கூட்டரில் வெளியிட்டுள்ள டர்போ மோடு கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் … Read more

இந்த ஆண்டே வருகை.., நெக்ஸானில் சிஎன்ஜி அறிமுகத்தை உறுதி செய்த டாடா

2024 டாடா நெக்ஸான் சிஎன்ஜி பாரத் மொபைலிட்டி ஷோவில் காட்சிக்கு வந்த சிஎன்ஜி மூலம் இயங்கும் டாடாவின் நெக்ஸானை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற டைசோர், ஃபிரான்க்ஸ் மற்றும் மாருதி பிரெஸ்ஸாவுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் சி.என்.ஜி மாடல் விளங்க உள்ளது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெறுகின்ற நெக்ஸான் சி.என்.ஜி பவர் மற்றும் டார்க் விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த என்ஜின் பெட்ரோல் பயன்முறையில் 118bhp பவரை … Read more

டீலருக்கு வந்த சிட்ரோன் C3 ஏர்கிராஸ் தோனி எடிசன் விபரம்

எம்.எஸ் தோனியை விளம்பர தூதுவராக நியமித்துள்ள சிட்ரோன் இந்தியா நிறுவனம் தனது C3 ஏர் கிராஸ் மற்றும் C3 காரில் தோனி எடிசன் மாடல் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் தற்போது டீலர்களுக்கு இந்த மாடல் ஆனது வர துவங்கியுள்ளது. சிறப்பு தோனி எடிசனில் இடம் பெற போகின்ற வசதிகள் என்ன என்பதை எல்லாம் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம். விற்பனையில் உள்ள மாடலில் இருந்து சற்று மாறுபட்ட டிசைனை வெளிப்படுத்தும் வகையில் பாடி ஸ்டிக்கரிங் மட்டுமே … Read more

2024 பஜாஜ் பல்சர் 150-ல் உள்ள முக்கிய சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 150 பைக்கின் பல்வேறு சிறப்பம்சங்களை இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பல்சர் பைக்கில் தற்பொழுதும் கிளாசிக் ஸ்டைலை தக்க வைத்துக் கொண்டிருக்கிற மாடல்களில் ஒன்றாக விளங்குகின்றது. பல்சர் 150 மாடலுக்கு நேரடியாக போட்டியை ஏற்படுத்தும் வகையில் 150 சிசி சந்தையில் கிடைக்கின்ற யமஹா FZ-S சீரியஸ் பைக்குகள், ஹோண்டா யூனிகார்ன் 160, இது தவிர 160சிசி சந்தையில் இருக்கின்ற சில மாடல்களும் இந்த … Read more

புதிய நிறத்தில் 2024 நின்ஜா 300 பைக்கினை வெளியிட்ட கவாஸாகி

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் ரக கவாஸாகி MY24 நின்ஜா 300 பைக்கின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. தற்பொழுது நின்ஜாவின் 300 மாடலில் கேண்டி லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் மூண்டஸ்ட் கிரே என இரு நிறங்கள் பெற்றுள்ளது. 296சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்ற பைக்கின் பவர்  38.88bhp மற்றும் டார்க் 26.1Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது. … Read more

7 லட்சம் நெக்ஸான் எஸ்யூவிகளை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்சின் பிரசித்தி பெற்ற நெக்ஸான் எஸ்யூவி கார் 7 லட்சம் விற்பனை இலக்கை கொண்டாடும் வகையில் தனது மாடல்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சலுகையே அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட சலுகை ஆனது ஜூன் 30 வரை மட்டுமே கிடைக்க உள்ளது. காரை முன்பதிவு செய்தவர்களுக்கும், அதை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கும் டாடா அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை சலுகை வழங்குகின்றது. இந்த சலுகை வேரியண்ட் வாரியாக மாறுபடக்கூடும். கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட … Read more

டாடாவின் 2024 அல்ட்ரோஸ், அல்ட்ரோஸ் ரேசர் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை

டாடா நிறுவன 2024 ஆம் ஆண்டிற்கான அல்ட்ரோஸ் மற்றும் அல்ட்ரோஸ் ரேசர் என இரு ஹேட்ச்பேக் மாடல்களின் விலை ரூ.7.00 லட்சம் முதல் ரூ.11.35 லட்சம் வரை கிடைக்கின்ற நிலையில் மொத்தமாக 33 வேரியண்டுகள் சிஎன்ஜி உட்பட விற்பனை செய்யப்படுகின்றது. அல்டோரஸ் பெட்ரோல் மாடல் 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. அதுவே CNG எரிபொருள் பெற்ற மாடல் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் … Read more