புதிய நிறத்தில் ஜாவா 42 பாபெர் விற்பனைக்கு வெளியானது

2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா 42 பாபெர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளில் கூடுதலாக red sheen என்ற வேரியண்ட்டை விற்பனைக்கு ரூ.2,29 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே விலையில் முன்பாக பிளாக் மிரர் எடிசன் கிடைக்கின்றது. விற்பனையில் உள்ள பிளாக் மிரர் எடிசனில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் ரெட் ஷீன் வேரியண்டில் டேங்க் உட்பட சில பாகங்களில் சிவப்பு மற்றும் க்ரோம் பூச்சூ கொடுக்கப்பட்டு மற்றபடி, பைக் முழுமைக்கும் கருப்பு நிறம் பெற்றுள்ளது. டியூப்லெஸ் டயருடன்  டயமண்ட் … Read more

₹ 3.30 கோடியில் மெர்சிடிஸ் AMG S 63 E பெர்ஃபாமென்ஸ் வெளியானது

இந்தியாவில் ரூ.3.30 கோடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள S-Class வரிசையில் இடம்பெற்றுள்ள AMG S 63 E பெர்ஃபாமென்ஸ் மாடலை தவிர கூடுதலாக ரூ.3.80 கோடியில் S63 E Performance Edition 1 சிறப்பு மாடலும் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு S63 E Performance Edition 1 குறிப்பிட்ட எண்ணிக்கையில் Manufaktur Alpine Grey நிறத்தை பெற்று மேட் பிளாக் நிறத்தை கொண்ட 21 அங்குல வீல் ஃபோர்ஜ்டூ பெற்றதாக அமைந்துள்ளது. AMG எக்ஸ்குளூசிவ் அம்சங்களை பெற்று பல்வேறு ஸ்டைலிஷான மாற்றங்களை … Read more

₹ 56 லட்சம் விலை குறைந்த ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

மேட் இன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் என இரு மாடல்களும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதனால் மிகப்பெரிய அளவில் ரூ.29 லட்சம் முதல் ரூ.56 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த இந்த இரு எஸ்யூவி மாடல்கள் முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றது. இதற்கு முன்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பிரத்தியேக ஜேஎல்ஆர் தொழிற்சாலையில் வேலார், எவோக், ஜாகுவார் F-Pace, மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகியவை … Read more

2024 பஜாஜ் பல்சர் 220F vs பல்சர் F250 இரு பைக்குகளுக்கான வித்தியாசம் மற்றும் விலை

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள இரண்டு செமி ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பல்சர் 220F vs பல்சர் F250 என் இரண்டு மாடல்களுக்கு இடையிலான வித்தியாசங்கள், வசதிகள் மற்றும் விலை ஒப்பீடு என அனைத்தும் அறிந்து கொள்ளலாம். இரண்டு ஃபேரிங் ஸ்டைல் மாடலும் சில மாதங்கள் சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் கரீஸ்மா XMR 210 விற்பனைக்கு வந்த உடனே கிடைக்க துவங்கிய நிலையில், தற்பொழுது 2024 ஆம் ஆண்டிற்கான பல்சரின் டிஜிட்டல் கிளஸ்ட்டர் உட்பட … Read more

குறைந்த விலை ஹீரோ வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வீடா எலக்ட்ரிக் பிராண்டில் ஏற்கனவே விற்பனையில் உள்ள V1 இ-ஸ்கூட்டரை விட மிக குறைந்த விலையில் ஒரு மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ஹீரோ நிறுவனம் இந்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், ரூ.1 லட்சம் விலைக்கு குறைவாக வெளியிட உள்ள இ-ஸ்கூட்டர் 80 முதல் 100 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். மேலும் … Read more

2024 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 220F விலை மற்றும் வசதிகள்

பஜாஜ் ஆட்டோவின் செமி ஃபேரிங் செய்யப்பட்ட பிரபலமான மாடலான பல்சர் 220F பைக் டீலர்களுக்கு வர துவங்கியுள்ளதால் விரைவில் நாடு முழுவதும் டெலிவரி வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் அனைத்து பஜாஜின் பல்சர் பைக்குகளிலும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த மாடலுக்கும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்து அம்சங்கள்,யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்  பெறுகின்றது. டன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கூடுதலாக ஸ்மார்ட்போன் சார்ந்த இணைப்புகளை ஏற்படுத்துகின்றது. மற்றபடி இன்ஜின், மெக்கானிக்கல் சார்ந்த எந்த ஒரு … Read more

இந்தியா வரவுள்ள கியா EV3 எஸ்யூவி காரின் முக்கிய சிறப்புகள்

கியா வெளியிட்டுள்ள புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி EV3 காரில் 81.4kWh மற்றும் 58.3kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருப்பதுடன் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவிகளை வழங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் முதன்முறையாக ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட உள்ள EV3 இ-எஸ்யூவி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுகின்றது. Kia EV3 மிக சிறப்பான பாக்ஸ் ஸ்டைல் டிசைனை … Read more

சிவிடி கியர்பாக்சில் நிசானின் மேக்னைட் கெஸா எடிசன் அறிமுகம்

நிசான் இந்தியா விற்பனை செய்து வருகின்ற ஒரே மாடலான மேக்னைட் எஸ்யூவி காரில் கூடுதலாக சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்டிலும் கெஸா எடிசன் விற்பனைக்கு ரூ.9.84 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதம் வெளியிடப்பட்ட கெஸா எடிசன் எஸ்யூவி மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றிருந்த நிலையில், தற்பொழுது சிவிடி மாடலும் வெளியாகியுள்ளது. 100 hp பவரை 5,000rpmலும் மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm சுழற்சியில் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 … Read more

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கு காத்திருப்பு காலம்..?

ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 125R பைக் பற்றி முதன்முறையாக நாம் தான் படத்தை வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் இந்த பைக்கிற்கு வரவேற்பு மிக அமோகமாக உள்ளதை தொடர்ந்து தற்பொழுது இந்த மாடலை டெலிவரி பெற 15 முதல் 30 நாட்கள்  வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை, பெங்களூரு, மும்பை  உள்ளிட்ட சில முன்னணி மெட்ரோ நகரங்களில் 10 முதல் 15 நாட்கள் என சொல்லப்படுகின்ற காத்திருப்பு காலம் … Read more

இந்தியாவில் புதிய கியா கார்னிவல் எம்பிவி அறிமுக விபரம்

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற நான்காம் தலைமுறை 2024 கியா கார்னிவல் எம்பிவி காரின் சாலை சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதனால் பண்டிகை காலத்துக்கு முன்பாக இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்க துவங்கலாம். கார்னிவல் எம்பிவி ரக மாடலில் 3.5 லிட்டர் பெட்ரோல் V6 என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் பெற்றிருந்தாலும், இந்திய சந்தைக்கு  200bhp மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் … Read more