ரூ.3.30 லட்சத்தில் கவாஸாகி KLX 230 விற்பனைக்கு வெளியானது..!

இந்தியாவில் கவாஸாகி நிறுவனத்தின் முதல் இரட்டை பயன்பாட்டிற்க்கு ஏற்ற KLX 230 அட்வென்ச்சர் பைக்கின் விலையை ரூ.3.30 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் குறைந்த விலையில் எக்ஸ்பல்ஸ் 200 4வி மற்றும் ஹிமாலயன் 450, யெஸ்டி அட்வென்ச்சர் போன்ற மாடல்கள் உள்ளது. KLX 230 பைக் மாடலில் 2-வால்வுகளை பெற்ற 233cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 18.1hp பவர் 8,000rpm-லும் 18.3Nm டார்க் ஆனது 6,400rpmல் வெளிப்படுத்துகின்றது. … Read more

ரூ.1.22 லட்சத்தில் 2025 ஹோண்டா SP160 விற்பனைக்கு அறிமுகமானது..!

ஹோண்டா டூ வீல்ர் இந்தியா நிறுவனத்தின் புதிய 2025 ஆம் ஆண்டிற்கான SP160 பைக்கில் கூடுதலாக 4.2TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புதிய OBD2B விதிமுறைக்கு ஏற்ற எஞ்சின் பொருத்தப்பட்டு விலை ரூ.1,21,951 முதல் ரூ.1,27,956 (எகஸ்ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி125 என இரண்டு மாடல்களில் இடம்பெற்றிருப்பதனை போன்றே புதிய 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் மூலம் ஹோண்டா ரோடுசிங் ஆப் வாயிலாக இணைக்கும் … Read more

வரவிருக்கும் எம்ஜி சைபர்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் காரின் விபரம் வெளியானது.!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய முயற்சியாக எம்ஜி செலக்ட் என்ற பிரீமியம் டீலர் துவங்கப்பட்டு முதல் மாடலாக சைபர்ஸ்டெர் விற்பனைக்கு ஜனவரி மாதம் நடைபெற உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025ல் அறிவிக்கப்பட உள்ளது. இந்தியா வரவுள்ள மாடலின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப விபரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. MG Cyberster டூயல் மோட்டார் செட்டப் கொண்ட இந்த எலக்ட்ரிக் ரோட்ஸ்டெர் மாடலில் இரு மோட்டார்களும் இணைந்து அதிகபட்சமாக 510 PS பவர் மற்றும் 725Nm டார்க் … Read more

₹ 8.89 லட்சத்தில் 2025 டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 900 விற்பனைக்கு வெளியானது

2025 ஆம் ஆண்டிற்கான புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 900 மாடல் ரூபாய் 8 லட்சத்து 89 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவில் டிசைன் மாற்றங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. 900 சிசி பேரலல்-ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 65 பிஎச்பி பவர் மற்றும் 80 என்எம் டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பவர் மற்றும் டார்க் விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்பீட் ட்வின் … Read more

நிசான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி கூட்டணி..!

ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா, நிசான் மற்றும் மிட்சுபிஷி என மூன்று நிறுவனங்களும் எதிர்காலத்தில் தயாரிக்கப்பட உள்ள வாகனங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட அடிப்படையான தொழில்நுட்பங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்துட்டுள்ளன. இதில் மிட்சுபிஷி இணைவது குறித்தான இறுதி முடிவு மட்டும் ஜனவரி 2025 இறுதிக்குள் அறிவிக்க உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடுமையான சவால் இணைந்து வருகின்றன குறிப்பாக சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரித்து வருகின்ற நிலையில் … Read more

பஜாஜின் சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வேரியண்ட் வாரியான வசதிகள்.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 3501, 3502 மற்றும் 3503 என மூன்றின் வித்தியாசங்கள் மற்றும் பேட்டரி, ரேஞ்ச், நுட்பவிபரங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். பொதுவாக மூன்று ஸ்கூட்டர்களில் 3.5Kwh NMC பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 153 கிமீ வழங்கும் என IDC சான்றிதழை 3501, 3502 என இரண்டு மாடலும் அதிகபட்சமாக மணிக்கு 73 கிமீ பெற்றுள்ளது. புதிய சேத்தக் இ-ஸ்கூட்டரில் சேஸ், பேட்டரி, மோட்டார் … Read more

ரூ.91,771 விலையில் 2025 ஹோண்டா SP125 விற்பனைக்கு வெளியானது.!

ஹோண்டா நிறுவனம் 125சிசி சந்தையில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய SP125 மாடலை ரூ.91,771 முதல் ரூ.1,00,284 வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ், எல்இடி ஹெட்லைட், TFT கிளஸ்ட்டர் உள்ளிட்டவை முக்கிய மாற்றங்களாக அமைந்துள்ளது. 2025 Honda SP125 4.2 அங்குல TFT கிளஸ்ட்டரில் RoadSync Duo கனெக்ட்டிவிட்டி வசதி டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் பெற்றுள்ளது. இக்னியஸ் … Read more

2025ல் கியா சிரோஸ், கேரன்ஸ் எலெக்ட்ரிக் அறிமுகமாகிறது..!

இந்தியாவில் கியா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் கார்களை அடுத்தடுத்து விற்பனைக்கு வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் கேரன்ஸ் அடிப்படையிலான எலெக்ட்ரிக் எம்பிவி மற்றொன்று சமீபத்தில் வெளியான சிரோஸ் எஸ்யூவி காரின் அடிப்படையிலான மாடலாகும். கேரன்ஸ் எலெக்ட்ரிக் எம்பிவி வருகை குறித்து ஏற்கனவே கியா நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்த நிலையில் தற்போது கூடுதலாக சிரோஸ் எலெக்ட்ரிக் மாடலாக வருவது உறுதியாக இருக்கின்றது. கியா மற்றும் ஹூண்டாய் என இரு நிறுவனங்களும் பேட்டரி செல்களை எக்ஸைட் எனர்ஜியில் இருந்து பெற உள்ளது. … Read more

2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள்.!

ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான ஆக்டிவா வரிசையில் உள்ள 125சிசி எஞ்சின் பெற்ற ஆக்டிவா 125 மாடலில் TFT கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்று ரூ. முதல் ரூ. வரையிலான (எக்ஸ்ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025 Honda Activa 125 முக்கிய மாற்றங்கள் 4.2 அங்குல TFT கிளஸ்ட்டரில் Honda RoadSync ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. OBD2B ஆதரவினை பெற்ற 125சிசி எஞ்சின் பெற்றுள்ளது. 6 விதமான நிறங்களை பெறுகின்றது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் அடிப்படையான டிசைனில் மாற்றங்கள் இல்லை … Read more

2025 ஹோண்டா SP125-யில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வருகையா..!

125சிசி சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஹோண்டா நிறுவனத்தின் 2025 SP125 பைக்கில் டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. துவக்க நிலை டிரம் பிரேக் வேரியண்டில் வெறும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் மட்டும் பெற்று இருக்கின்ற நிலையில் டாப் வேரியண்டில் டிஎஃப்டி கிளஸ்ட்டர் உடன் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களை பெறுவது உறுதியாகி உள்ளது. SP125 எஞ்சின் பவர் மற்றும் டார்க் தொடர்பில் எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது. மேலும் முந்தைய மாடலை விட முற்றிலும் … Read more