இந்தியாவில் குறைந்த விலை ஃபோர்டு எலக்ட்ரிக் காரை தயாரிக்கின்றதா.! | Automobile Tamilan

இந்திய சந்தையில் மீண்டும் கார்களை உற்பத்தி செய்ய ஃபோர்டு இந்தியா திட்டமிட்டு வரும் நிலையில் பிரீமியம் எஸ்யூவி முதல் குறைந்த விலை எலக்ட்ரிக் கார் வரை தயாரிக்க செயல்திறன் மிக்க திட்டங்களை வகுத்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஃபோர்டின் எதிர்கால திட்டங்கள் மற்றும் முதலீடு தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் விவாதிக்க ஃபோர்டு மோட்டார் தலைவர், சர்வதேச சந்தைகள் குழு, கே ஹார்ட் இந்தியா வரவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Ford EV plan இந்தியாவில் மீண்டும் ஃபோர்டு முதலீடு செய்வதற்கான … Read more

இந்தியாவில் கியா கார் விலை 3 % வரை உயருகின்றது | Kia announce Price hike upto 3%

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கியா நிறுவனத்தின் சோனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் எம்பிவி ஆகிய மூன்று மாடல்களின் விலை அதிகபட்சமாக 3 % வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2024 முதல் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ள இந்நிறுவனம் அதிகரித்து வருகின்ற உற்பத்தி மூலப் பொருட்களின் விலை மற்றும் சப்ளை செயின் தொடர்பான கட்டணங்கள் அதிகரித்து வருவதனால் விலையை தவிரக்க முடியவில்லை என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் அடுத்த … Read more

0 ஸ்டார் ரேட்டிங் பெற்ற சிட்ரோன் eC3 காரின் கிராஷ் டெஸ்ட் விபரம் | Citroen eC3 Global NCAP safety rating

குளோபல் NCAP மையத்தால் சோதனை செய்யப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிட்ரோன் eC3 காரில் வயது வந்தோருக்கான பாதுகாப்பில் 0 நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வெறும் 1 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட eC3 காரில் மிகவும் அடிப்படையான பாதுகாப்பு வசதிகளாக இரண்டு ஏர்பேக்குகள், சிட் பெல்ட் உள்ளிட்டவை மட்டுமே இடம்பெற்றுள்ளது. எலக்ட்ரானிக் ஸ்ட்பிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட எந்த அம்சங்களும் இல்லை. Citroen eC3 Global NCAP safety rating கிராஷ் டெஸ்ட்டில் வயது வந்தோருக்கான … Read more

இந்தியா வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் ID.4 அறிமுக விபரம் வெளியானது | Automobile Tamilan

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் காட்சிப்படுத்தியுள்ள ID.4 எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக நடப்பு ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. 2024 Volkswagen ID.4 சர்வதேச அளவில் கிடைக்கின்ற ID.4 மாடலில் ஒற்றை மோட்டார் பெற்ற வேரியண்ட் 58 kWh மற்றும் டூயல் மோட்டார் பெற்ற 77 kWh வேரியண்ட் என இருவிதமாக கிடைக்கின்றது. பல்வேறு மாறுபட்ட வேரியண்டுகள் விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில், இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடலின் உறுதியான … Read more

ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட், ஜிடி லைன் அறிமுகமானது | Automobile Tamilan

புதுப்பிக்கப்பட்ட வசதிகளை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி காரின் அடிப்படையில் டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் மற்றும் ஜிடி லைன் என மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிடி வரிசையில் டைகன் மாடலில் தற்பொழுது எட்ஜ், சவுண்ட், ஸ்போர்ட், க்ரோம் எடிசன் ஆகியவை விற்பனைக்கு கிடைக்கின்றது. Table of Contents Toggle New Volkswagen Taigun GT Plus Sport Volkswagen Taigun GT line New Volkswagen Taigun GT Plus Sport டைகன் ஜிடி பிளஸ் … Read more

2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி சோதனை ஓட்டம் துவங்கியது | Automobile Tamilan

இந்தியாவில் நிசான் விற்பனை செய்து வருகின்ற ஒரே மாடலான மேக்னைட் எஸ்யூவி காரின் சோதனை ஓட்டத்தை துவங்கியுள்ளதால் அடுத்த 4 முதல் 8 மாதங்களுக்குள் சந்தைக்கு வர வாய்ப்புள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மேக்னைட் மேம்படுத்துவதனால் கிகர் எஸ்யூவி மாடலை மேம்படுத்தி விற்பனைக்கு ரெனால்ட் வெளியிட உள்ளது. இரு மாடல்களும் ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளுகின்றன. 2024 Nissan Magnite ஒட்டுமொத்த அடிப்படையான கட்டுமானத்தில் பெரிதாக மாற்றமில்லாமல் சில பாதுகாப்பு மேம்பாடுகளுடன் ஏர்பேக்குகளின் எண்ணிக்கை … Read more

Ather Rizta teased – புதிய ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு | Automobile Tamilan

ஏப்ரல் 6 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ஏத்தர் நிறுவனத்தின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பாக வெளியிட்ட புதிய டீசர் மூலம் நீரில் பயணிக்கும் திறன் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 40 அடி உயரத்திலிருந்து பேட்டரி தூக்கி எறியப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டீசர் வெளியான நிலையில், தற்பொழுது 400 மிமீ நீர் நிரம்பிய இடத்தில் ஸ்கூட்டரை இயக்கி சோதனை ஓட்டத்தை ஈடுத்திய வீடியோ வெளியிட்டுள்ளது. மிக அகலமான இருக்கை குடும்ப பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்கும் … Read more

MG Motor – நாளை எம்ஜி மோட்டார்-ஜேஎஸ்டபிள்யூ கூட்டணியில் முதல் எலக்ட்ரிக் கார் அறிமுகம்..! | Automobile Tamilan

எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் கூட்டணியில் முதல் எக்ஸெலார் எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட பல்வேறு எதிர்கால திட்டங்கள் குறித்தான தகவல்களை வெளியிட உள்ளது. இந்திய சந்தையில் மிகவும் வலுவான சந்தை பங்களிப்பை மேற்கொள்ள சீனாவின் SAIC குழுமத்தின் எம்ஜி மோட்டார் தனது சந்தையை விரிவுப்படுத்த புதிய எலக்ட்ரிக் வாகனங்களை ரூ.15 லட்சத்துக்கும் குறைவான விலையில் அடுத்தடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் எம்ஜி எக்ஸெலார் இவி என்ற பெயரை பதிவு செய்துள்ள நிலையில், சீன சந்தையில் … Read more

Bajaj Bruzer cng bike – பஜாஜ் ஆட்டோ 3 சிஎன்ஜி பைக்குகளை வெளியிடுகின்றதா..!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ வெளியிட உள்ள உலகின் முதல் ப்ரூஸர் (Bruzer CNG) சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனில் எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனை பெற உள்ள சிஎன்ஜி ப்ரூஸர் 115சிசி முதல் 150சிசி வரை வரக்கூடும் அல்லது 102சிசி முதல் 125சிசி வரை உள்ள எஞ்சின்களை பயன்படுத்தி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. துவக்க நிலை தினசரி பயன்பாடிற்கு ஏற்ற கம்யூட்டர் பிரிவில் வரவுள்ள   மோட்டார்சைக்கிளில் சிஎன்ஜி எரிபொருளுக்கான … Read more

ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் வரவிருக்கும் ஸ்கோடா மாடல் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஸ்கோடா 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மாடல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு கிடைக்க துவங்க உள்ளது. MQB-A0-IN பிளாட்ஃபாரத்தில் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ள காரில் மிகவும் நவீனத்துவமான வசதிகளுடன், பாதுகாப்பான கட்டுமானத்தை கொண்டிருக்கும். ஸ்கோடாவின் பாரம்பரிய கிரிலுடன் அமைந்துள்ள காரின் முன்புறத்தில் எல்இடி … Read more