2025 ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம் எப்பொழுது.?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் 2025 மாடல் விலை அனேகமாக வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே ஸ்கூட்டரின் முழுமையான விபரங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது டீலர்களுக்கு வர துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜனவரி 1 முதல் இந்த இந்த மாடலை டெலிவரி வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதால் அதற்கு முன்பாக விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பை விட மிக ஸ்டைலிசான தோற்ற அமைப்பினை பெற்று பல்வேறு … Read more

டிசம்பர் 20ல் பஜாஜ் சேட்டக் 2025 விற்பனைக்கு அறிமுகமாகிறது

தற்பொழுது 96 ஆயிரம் ஆரம்ப விலையில் கிடைக்கின்ற பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலெக்டரிக் ஸ்கூட்டரின் புதிய தலைமுறை மாடல் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி சற்று கூடுதலான மாற்றங்கள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக அதிக பூட்ஸ்பேஸ் சில வசதிகளில் மேம்பாடு மற்றும் ரேஞ்சு உள்ளிட்டவற்றில் மாறுதல்கள் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றபடி, தற்பொழுதுள்ள டிசைனில் எந்த மாற்றமும் இருக்காது. சேட்டக் ஸ்கூட்டரில் தற்பொழுது சேட்டக் 2901, சேட்டக் அர்பேன், சேட்டக் பிரீமியம், மற்றும் 3201 SE … Read more

ரூ.1,14,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா கார்ஸ்

இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது கார்களுக்கான சிறப்பு 2024 வருடாந்திர இறுதி மாத சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை ஆனது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாவது தலைமுறை அமேஸ் தவிர்த்து மற்ற அனைத்து கார்களுக்கும் கிடைக்கின்றது அதிகபட்ச சலுகையாக ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி காருக்கு ரூ. 1,14,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன, மேலும் சிட்டி e:HEV காருக்கு ரூ.90000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது தலைமுறை அமேஸ் மாடலுக்கு ஒரூ. 1,12,000 … Read more

ஜனவரி 1 முதல் ஹூண்டாய் கார்களின் விலை ரூ.25,000 வரை உயருகிறது..!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற ஜனவரி 1, 2025 முதல் அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அதிகபட்சமாக ஒரு சில வேரியண்டுகள் ரூபாய் 25 ஆயிரம் வரை விலை உயரும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. விலை உயர்வு MY25 வருடத்தின் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதனால் தற்பொழுது முன் பதிவு செய்பவர்களுக்கு எந்த வகையிலும் விலை உயர்வு பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கான காரணம் குறித்து தெரிவிக்கையில் தொடர்ந்து … Read more

பஜாஜின் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை குறைப்பு..!

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் மாடலான பஜாஜ் ஆட்டோவின் ஃப்ரீடம் 125 மாடலின் விலை ரூபாய் 10 ஆயிரம் முறை நடுத்தர வேரியண்டின் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே ஆரம்ப நிலை மாடலின் விலை 5 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கூடுதலாக நடுத்தர மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது . மற்றபடி டாப் வேரியண்டின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. ஃபீரிடம் 125 பைக்கில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என … Read more

Hero Vida V2 launched – ரூ.96,000 விலையில் ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது..!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலெக்ட்ரிக் பிராண்டின் புதிய V2 மாடல் 96,000 முதல் ரூ.1,35,000 வரையிலான விலையில் தற்பொழுது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விடா வி2 நாடு முழுவதும் 500க்கு மேற்பட்ட டீலர்களில் கிடைக்க உள்ளது. முக்கிய குறிப்புகள் விடா வி2 புரோ, வி2 பிளஸ், மற்றும் வி2 லைட் என மூன்று விதமாக வந்துள்ளது. வி2 லைட் புதிய 2.2Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது. நுட்பங்கள், பேட்டரி, ரேஞ்ச் முந்தைய வி1 போல … Read more

ADAS உடன் வந்துள்ள 2025 ஹோண்டா அமேஸ் விலை மற்றும் சிறப்புகள்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை அமேஸ் காரில் ADAS நுட்பத்துடன் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.10.89 லட்சம் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மேம்பாடுகளை பெற்று உயர் கட்டுமானத்தை வெளிப்படுத்துவதுடன் 6 விதமான நிறங்களை பெற்றுள்ளது. முக்கிய குறிப்புகள் ஹோண்டா அமேசில் 1.2 லிட்டர் எஞ்சின் 90hp மற்றும் 110Nm டார்க் வழங்கும். இந்தியாவின் குறைந்த விலையில் ADAS பெறுகின்ற மாடலாக அமேஸ் உள்ளது. V, VX, ZX என மூன்றிலும் … Read more

ஹீரோ விடா V2 பிளஸ், V2 புரோ, V2 லைட் ஸ்கூட்டர்களின் பேட்டரி, ரேஞ்ச் விபரம்.!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா (Hero Vida) பிராண்டின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் முந்தைய V1 மாடல்களுக்கு பதிலாக புதிய V2 வரிசை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது கூடுதலாக இந்த வரிசையில் V2 லைட் மாடல் ஆனது சேர்க்கப்பட்டு விலை குறைவானதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. மற்றபடி அடிப்படையான டிசைன அமைப்பில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை நிறங்களிலும் அதேபோல அமைந்திருக்கின்றது. கூடுதலாக விடா வி2 லைட் வேரியண்டில் 2.2Kwh ஆனது சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதேபோல வி2 ப்ளஸ் … Read more

ஸ்கோடாவின் கைலாக் ஆன்ரோடு விலை மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள்

4 மீட்டருக்கும் குறைந்த நீளமுள்ள ஸ்கோடாவின் கைலாக் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆன்-ரோடு விலை மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள் முழுமையாக அறிந்து கொள்ளலாம். கைலாக் காரில் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர்+ மற்றும் பிரஸ்டீஜ் என என நான்கு விதமான வேரியண்டுகளை பெற்று 115bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. Skoda Kylaq on-road price … Read more

Skoda Kylaq Price list : புதிய ஸ்கோடா கைலாக் விலை பட்டியல் வெளியானது..!

ஸ்கோடா இந்தியாவின் கைலாக் எஸ்யூவி ரூபாய் 7,89,000 முதல் ரூபாய் 14,40,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் முன்பதிவு ஆனது தொடங்கப்படுகின்ற நிலையில் டெலிவரி ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்தியாவின் மிக கடுமையான போட்டிகள் நிறைந்த காம்பேக்ட் சந்தையில் நுழைந்துள்ள ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் நிறுவனத்தின் கைலாக் மாடல் ஆனது இந்திய சந்தையிலே MQB-A0-IN பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு மிகச் சிறப்பான வகையில் பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு … Read more