அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் அழிந்து போவார்கள்: அண்ணாமலைக்கு எடப்பாடி மறைமுக எச்சரிக்கை

விழுப்புரம்:  ‘அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் அழிந்து போவார்கள்’ என்று தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் விழுப்புரத்தில்  நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அதிமுக பல்வேறு சோதனைகளை … Read more

ஏப்-03: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 317-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தேர்தலுக்கு முன் காங். உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்: தேவ கவுடா பேட்டி

பெங்களூரு: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, பொது தேர்தலுக்கு முன், காங்கிரஸ் உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்,’’ என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் தேவ கவுடா பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:  கர்நாடக மாநில தேர்தல் களத்தில் பாஜ, காங்கிரஸ் என்ற இரு தேசிய கட்சிகளிடையே வலுவான போட்டி இருந்தாலும், இதில் மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) ‘பஞ்சரத்னா’ என்ற அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாய … Read more

பங்கு சந்தையில் நஷ்டம் தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை

மதுரை: மதுரை, அவனியாபுரம், பிரசன்னா காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (39). இவரது மனைவி மணிமாலா. தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஜெகதீஷ் மேலாளராக பணியாற்றினார். அப்போது அவர் பங்கு சந்தையில் முதலீடு செய்தார். முதலில் ஓரளவு லாபம் வந்தது. இதையடுத்து ஜெகதீஷ் அக்கம்பக்கம் கடன் வாங்கி  முதலீடு செய்தார். திடீரென பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டு அவர் வாங்கிய பங்குகளின் விலை மிகவும் குறைந்தது. இதனால் ஜெகதீசனுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு, … Read more

சிபிஐ 60ம் ஆண்டு விழா பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ், சிபிஐ அமைப்பு கடந்த 1963ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்பட்டது.   சிபிஐ.யின் 60ம் ஆண்டு விழா டெல்லி விக்யான் பவனில் இன்று நடைபெறுகிறது.  பிரதமர் மோடி பங்கேற்று விழாவை தொடங்கி வைக்க உள்ளார். மேலும், ஷில்லாங், புனே, நாக்பூர் நகரங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக கட்டிடங்களையும் காணொலி மூலம் திறந்து வைக்கிறார். சிபிஐ வைர விழா ஆண்டின் நினைவாக தபால்தலையையும் வெளியிட உள்ளார். அத்துடன், சிபிஐ அமைப்பின் … Read more

தீப்பற்றி எரிந்த பஸ்: 14 பயணிகள் தப்பினர்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் இருந்து 14 பயணிகளுடன் கோவைக்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஆம்னி பஸ் புறப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் அகிலன்(45) ஓட்டி சென்றார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நள்ளிரவு 12.45 மணியளவில் பஸ் வந்தபோது, திடீரென பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக டிரைவர்  பஸ்சை  நிறுத்தி இறங்கி பார்த்தார். அப்போது பஸ்சின் பின்புறம் லேசாக தீப்பற்றியிருந்தது தெரிந்தது.  இதையடுத்து அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பயணிகளை எழுப்பி கீழே இறக்கினார். அடுத்த சில … Read more

அமலாக்கத்துறை சோதனை சட்டீஸ்கர் முதல்வர் குற்றச்சாட்டு

ராய்ப்பூர்: முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில்,‘‘ கடந்த ஒரு மாதமாக அமலாக்கத்துறை மாநிலத்தில் சோதனை நடத்தியது.  50  இடங்களில் நடத்திய சோதனையில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த 29ம் தேதி ராய்ப்பூர் மேயர் அய்ஜாஸ் தேபார், அவருடைய சகோதரர் அன்வர், மதுபான ஆலை அதிபர் பல்தேவ் சிங் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த விவரமும் வெளியிடப்படவில்லை. அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட இந்த சோதனைகள்  … Read more

அண்ணாமலையார் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தமும், 5ம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தமும் அமைந்துள்ளது. பாதுகாப்பையொட்டி இந்த குளத்தில் பக்தர்கள் இறங்கவும், புனித நீராடவும் அனுமதியில்லை. சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்போது மட்டும், கோயில் குளத்துக்குள் இறங்க சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் நேற்று செத்து மிதந்தன. அதனை பார்த்த பக்தர்கள் வேதனை அடைந்தனர். மிதந்த மீன்களை கோயில் ஊழியர்கள் அகற்றினர்.  … Read more

‘எங்க ஊருல வந்து பேசிப் பாருங்க’மிரட்டல் விடுத்த அசாம் முதல்வர் விருந்துக்கு அழைத்த கெஜ்ரிவால்

கவுகாத்தி: அசாம் சென்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அவதூறு வழக்கு தொடருவதாக தனக்கு மிரட்டல் விடுத்த அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவை மதிய விருந்துக்கு அழைத்து பதிலடி தந்துள்ளார். அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘  என் மீது ஊழல் வழக்கு இருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகிறார்.  ஏப்ரல் 2ம் தேதி அசாம் வரும் அவர் இங்கு வந்து என்னை ஊழல்வாதி என்று சொல்லட்டும். அடுத்த நாளே, மணீஷ் … Read more

பயிர்க்கடனுக்கான வட்டியை ரத்து செய்ய ரூ.350 கோடி நிதி: அரசு விடுவித்தது

சேலம்: பயிர்க்கடனை கால அவகாசத்திற்குள் செலுத்திய விவசாயிகளின் பயிர்கடன் வட்டி ரத்து செய்யப்பட்டு, அதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.350 கோடியை அரசு விடுவித்துள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன் பெற்ற தேதியில் இருந்து, குறித்த காலத்திற்குள் கடனை முழுதும் செலுத்துவோருக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள், தங்களின் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க … Read more