திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு
துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருவான்மியூரில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு அலங்காரங்களில் உற்சவர் மாட வீதிகளில் உலா … Read more