இந்தியா – இலங்கை அணிகள் மோதும் டி20 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

மும்பை: இந்தியா – இலங்கை அணிகள் மோதும் டி20 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. முதல் டி20 – லக்னோ, 2வது மற்றும் 3வது டி20 தரம்சாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் – மொகாலி, 2வது டெஸ்ட் – பெங்களூருவில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரூ.139 கோடி முறைகேடு வழக்கிலும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தோரந்தோ கருவூலத்தில் இருந்து ரூ.139 கோடி முறைகேடு செய்த வழக்கிலும் குற்றவாளியாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.  பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்காக தீவனம் வாங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லாலு மீது 5 வழக்குகள் தொடரப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தியது. இதில், 4 ஊழல் வழக்கிலும் அவர் குற்றவாளியாக … Read more

ஜி20 அமைப்புக்கு செயலகம் உருவாக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி : ஜி20 அமைப்புக்கு செயலகம் உருவாக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை நடப்பாண்டின் டிச.1 முதல் நவ.30, 2023 வரை இந்தியா ஏற்கவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் ஏற்றி விவசாயிகள் படுகொலை சிறையில் இருந்து ஆசிஷ் விடுதலை

லக்கிம்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர்கேரியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களின் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதி 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.  இந்த வழக்கில் ஆசிஷ் மித்ரா உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இதற்கான சட்ட நடைமுறைகள் முடிந்து, … Read more

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5 மாநிலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5 மாநிலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திரா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் எல்லைகள் குறித்த பதிவு விவகாரம்: ராகுல்காந்தி மீது தேசதுரோக வழக்கு?: அசாம் மாநில போலீஸ் தகவல்

கவுகாத்தி: ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவில் வடகிழக்கு மாநிலங்கள் எதையும் குறிப்பிடாததால், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அசாம் மாநில பாஜக உறுப்பினர்கள் காவல்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்களை அளித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் தேச துரோக வழக்கு பதிய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த 10ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டில், ‘நமது ஒன்றியத்தில்தான் பலம் உள்ளது. நமது கலாசாரங்களின் ஒன்றியம். நமது பன்முகத்தன்மையின் ஒன்றியம். நமது மொழிகளின் ஒன்றியம். நமது … Read more

உதகை அருகே காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரண்

உதகை: உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்தாண்டு காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் நேற்று கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்த நிலையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சையை அடுத்த மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்த நிலையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர், வக்கீல், தொழிலதிபர் எனக்கூறி 7 மாநிலத்தை சேர்ந்த 14 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது

* நடுத்தர வயது, விவாகரத்து பெற்றவர்களை குறிவைத்து மடக்கியது எப்படி?புவனேஸ்வர்: மருத்துவர், வக்கீல், தொழிலதிபர் எனக்கூறி 7 மாநிலத்தை சேர்ந்த 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட கல்யாண மன்னனை புவனேஸ்வர் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வர் காவல்துறை துணை ஆணையர் உமாசங்கர் தாஷ் கூறுகையில், ‘டெல்லி, பஞ்சாப், அசாம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட … Read more