காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கும் செல்வதை உறுதி செய்தது திமுக அரசுதான்: பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கும் செல்வதை உறுதி செய்தது திமுக அரசுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பரப்புரையில் பேசிய அவர், கலைஞர் போராடி போராடி வளர்த்த மாவட்டம் தஞ்சை மாவட்டம். கலைஞரின் போராட்ட தழும்பு ஏறிய ஊர்தான் தஞ்சாவூர். தஞ்சை பெரிய கோவிலின் 1000வது சதய விழா நடத்தியது கலைஞர்தான் என்று கூறினார். தஞ்சை மக்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களே வியக்கும் வகையில் மகாமக விழாவை சிறப்பாக நடத்தியது திமுக ஆட்சி என்றும் மு.க.ஸ்டாலின் … Read more

கடந்த 2014ம் ஆண்டிலேயே எனது ஹெலிகாப்டர் பறக்க அனுமதிக்கவில்லை: பஞ்சாப் பிரசாரத்தில் மோடி பேச்சு

ஜலந்தர்: கடந்த 2014ம் ஆண்டிலேயே எனது ஹெலிகாப்டர் பஞ்சாப்பில் பறக்க அனுமதிக்கவில்லை என்று ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 117  தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின்   பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுக்தேவ் சிங் திண்ட்சாவின்  சிரோமணி அகாலி தளம்  (சன்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள … Read more

ஏற்றத்தில் நிறைவு பெற்ற பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1736 புள்ளிகள் உயர்ந்து 58,142 புள்ளிகளில் வணிகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1736 புள்ளிகள் உயர்ந்து 58,142 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 509 புள்ளிகள் அதிகரித்து 17,352 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவு பெற்றது.

மாடலாக மாறிய 60 வயதான கூலித் தொழிலாளி: இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்

கேரளா: கேரளாவில் 60 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் மாடலாக மாறி, இணையத்தை கலக்கி வருகிறார். வெண்ணைகாடு பகுதியைச் சேர்ந்த மம்மிக்கா என்ற தினக்கூலித் தொழிலாளியின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தினமும் லுங்கி மற்றும் சட்டையில் வலம் வரும் இவர், தற்போது கோட்டு சூட்டுடன் இருக்கும் இவரது புகைப்படம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. மம்மிக்காவிற்கு சிகை அலங்காரம் செய்து, வித்தியாசமான முறையில் அவரது புதிய தோற்றத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். … Read more

ஏற்றத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1232 புள்ளிகள் உயர்ந்து 57,637 புள்ளிகளில் வணிகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1232 புள்ளிகள் உயர்ந்து 57,637 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 338 புள்ளிகள் உயர்ந்து 17,181 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டு வழக்கை ஏன் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கூடாது: உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டு வழக்கை ஏன் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் சாசன பிரச்சனைகள் குறித்து அரசியல் சாசன அமர்வு தான் முடிவு செய்ய முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் தான் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தரப்படுகிறது என தெரிவித்தது.    

கடலூரில் பரபரப்பு: வள்ளி விலாஸ் நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

கடலூர்: கடலூர் மாவட்டம் வள்ளி விலாஸ் நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாரன்ஸ் சாலையில் உள்ள கடையில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். விருதாச்சலத்தில் உள்ள ஜெயின் நகை கடையிலும் உரிமையாளர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் ஒன்றிய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல்

டெல்லி: முன்னாள் ஒன்றிய சட்ட அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அஸ்வினி குமார் கட்சியிலிருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் மூலம் தகவல் அளித்துள்ளார்.   

தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி!!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா குறைந்த நிலையில் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.     

அணை நிலவரம்: தமிழகம் – கேரளா எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.40 அடி; நீர்திறப்பு 600 கனஅடி..!!

திருவனந்தபுரம்: தமிழகம் – கேரளா எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 73 கனஅடி; தமிழகத்துக்கு நீர்திறப்பு 600 கனஅடி; நீர் இருப்பு 5,025 மில்லியன் கனஅடி ஆக இருக்கிறது.