அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கூட்டாளிகள் 2 பேரின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கூட்டாளிகள் 2 பேரின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை ஏற்று ரூ.110 கோடி நிரந்தர வைப்புத் தொகையை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களை ஏமாற்றம் மோசடி திட்டமான கிரிப்டோகரன்சியை தடை செய்வதே இந்தியாவுக்கு நன்மை : ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் பேச்சு

மும்பை : கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்கள் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ஒன்றிய அரசு 30% வரி விதித்துள்ள நிலையில், அதனை தடை செய்வதே இந்தியாவுக்கு  நல்லது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிப்டோகரன்சி வர்த்தகம் பல ஆண்டுகளாகவே குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் கிரிப்டோ கரன்சி தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாற்றாக  கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் … Read more

பிப்-15: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கொரோனாவுக்கு உலக அளவில் 5,843,525 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.43 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,843,525 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 413,730,726 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 335,493,571 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 85,416 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரவிதேஜா படம் மீது வழக்கு

புதுடெல்லி: ரவிதேஜா நடித்துள்ள கில்லாடி படம் மீது பாலிவுட் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வெளியான படம் கில்லாடி. இதே பெயரில் இந்தியில் ஒரு படம் வெளியானது. அதில் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். அந்த படத்தை ரதன் ஜெயின் தயாரித்து இருந்தார். இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரத்தன் ஜெயின் தாக்கல் செய்த மனுவில், ‘கில்லாடி என்ற பட பெயர் இந்தியா முழுமைக்கும் பொதுவானது. அந்த தலைப்பை நான் பதிவு செய்து … Read more

டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகளை தடுத்து திரும்பி அனுப்பிய போலீசார்

புதுடெல்லி: நெல், கரும்புக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்தக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திருச்சியிலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் ரயில் மூலம் நேற்று காலை புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். ரயில் நிலையத்திலேயே அவர்கள் ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி போலீசார் தமிழக விவசாயிகள் அனைவரையும் தடுத்து … Read more

முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் பிப். 21ம் தேதி மாலை வரை கல்லூரிகளில் சேரலாம்: ராதாகிருஷ்ணன்

சென்னை: முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் பிப். 21ம் தேதி மாலை வரை கல்லூரிகளில் சேர அவகாசம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். ஏற்கனவே பிப்.18 வரை கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டள்ளது. 

அமைதியாக நடந்த ஒரேகட்ட தேர்தல் கோவா-79%, உத்தரகாண்ட்-62% வாக்குப்பதிவு: உ.பி.யில் 2ம் கட்டமாக 55 இடங்களிலும் நடந்தது

புதுடெல்லி: கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நேற்று ஒரே கட்டமாக எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதில், கோவாவில் 79% வாக்குகளும், உத்தரகாண்டில் 62% வாக்குகளும் பதிவாகின. உத்தரபிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கு நடந்த 2ம் கட்ட தேர்தலில் 60% வாக்குகள் பதிவாகின. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை கடந்த மாதம் 8ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் 7 … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு: ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிரசாரம் முடிந்த பின் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.-வாக இல்கர் அய்சி நியமனம்: டாடா அறிவிப்பு

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் அய்சி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக டாடா தெரிவித்திருக்கிறது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இல்கர் அய்சி, ஏர் இந்தியாவின் சி.இ.ஓ.வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.