வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை: பள்ளிக்கல்வி ஆணையம்

சென்னை: வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வி ஆணையம் கூறியுள்ளது. நாளை நடைபெற உள்ள +2 திருப்புதல் தேர்வுக்கான உயிரியல் பாட வினாத்தாள் கசிந்தது. 10-ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் ஆங்கில தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்த நிலையில் +2 வினாத்தாளும் கசிந்துள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க இலவச டிக்கெட் திருப்பதியில் நாளை முதல் விநியோகம்

திருமலை: திருப்பதியில் நாளை முதல் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்னதாக தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டிக்கெட் வெளியிட்ட 10 நிமிடங்களில் ஒரு மாதத்திற்கு உண்டான டிக்கெட்டுகள் … Read more

மறைந்த பத்தரிகை புகைப்பட கலைஞர் டி.குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மறைந்த பத்தரிகை புகைப்பட கலைஞர் டி.குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்ப சூழ்நிலையை கருதி சிறப்பு நேர்வாக ரூ.3 லட்சம் பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க 4 மாநிலங்களுக்கு ரூ.1,154.90 கோடி நிதி ஒதுக்கீடு: ஒன்றிய அரசு

டெல்லி: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க 4 மாநிலங்களுக்கு ரூ.1,154.90 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆந்திரா மாநிலத்துக்கு ரூ.225.60 கோடி, பீகார் மாநிலத்துக்கு ரூ.769 கோடி, குஜராத் மாநிலத்துக்கு ரூ.165.30 கோடி, சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்: பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மதுரை மாவட்டம் மேலூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பரப்புரை நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், மதுரையை லண்டன், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார்கள்; ஆனால் மதுரையை சிதைத்துள்ளார்கள். மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்தும் விசாரிக்கப்படும் என்றார்.

சசிகுமாரின் காமென் மேன் டைட்டிலுக்கு சிக்கல்

சசிகுமாரின் காமென் மேன் டைட்டிலுக்கு சிக்கல் 2/14/2022 3:46:59 PM சசிகுமார் நடித்து வரும் காமன்மேன் என்ற படத்தின் தலைப்பு எங்களிடம் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது. டைரக்டர் சுசீந்திரன் இணை இயக்குனரான விஜய் ஆனந்த்  2018ம் ஆண்டே காமென்மேன் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும்  ஏஜிஆர் நிறுவனம் … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவியின் தந்தை சிபிசிஐடி விசாரணையை மட்டுமே … Read more

வாக்குப்பதிவு நிலவரம்!: சட்டமன்ற தேர்தல் நண்பகல் 1 மணி நிலவரப்படி கோவாவில் 60.18%, உ.பி., 51.93%, உத்தராகண்ட் 49.24% வாக்குகள் பதிவு..!!

பனாஜி: கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்திரப்பிரதேச சட்டமன்ற 2ம் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.93  சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

படப்பிடிப்பில் விஷால் காயம்: லத்தி படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு தள்ளி வைப்பு

படப்பிடிப்பில் விஷால் காயம்: லத்தி படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு தள்ளி வைப்பு 2/14/2022 3:48:49 PM விஷால் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 55 நாட்களுக்கும் மேலாக இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தில் இடம் பெறும் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார் பீட்டர் ஹெயின் மாஸ்டர். அடியாட்களுடன் மோதிக் கொண்டு  குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் நொடி பொழுது ‘மிஸ்’ ஆனதால் … Read more

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவிகள்: ஆசிரியர்கள், பெற்றோர்கள் இடையே வாக்குவாதம்

பெங்களூரு: ஹிஜாப் சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடகாவில் 5 நாட்களுக்கு பிறகு உயர்நிலை பள்ளிகள் இன்றுமுதல் திறக்கப்பட்டன. பள்ளி வளாகம் வரை ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பின்னர் அதை அகற்றிய பிறகு வகுப்புகளில் பங்கேற்றனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகத்தில் இன்று முதல் உயர்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.பள்ளி வளாகம் வரை ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் வகுப்பறைக்கு செல்லும் முன்னர் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வகுப்புகளில் பங்கேற்றனர். மாண்டியாவில் உள்ள உயர்நிலை பள்ளியில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஹிஜாப் … Read more