குறையும் கொரோனா பரவல்: திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்

ஆந்திரா: கொரோனா பரவல் குறைந்து வருவதால் திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

60 பைக்குகளில் பயணம் செய்து விக்ரமின் 60வது படத்தை கொண்டாடும் ரசிகர்கள்

60 பைக்குகளில் பயணம் செய்து விக்ரமின் 60வது படத்தை கொண்டாடும் ரசிகர்கள் 2/14/2022 12:32:49 PM விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியாகி உள்ள அவரது 60வது படம் மகான். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரமின்  60வது படம் என்பதால் விக்ரமிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரின் ரசிகர்கள் 60 பேர்  தங்கள் மோட்டார் சைக்கிள்களில் பல குழுக்களாகப் புறப்பட்டு, தமிழ்நாட்டின் … Read more

கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு: மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு..!!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஹிஜாப், காவி உடை அணியும் பிரச்னை உடுப்பியில்தான் முதன் முதலில் வெடித்தது. இந்த போராட்டத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் பரவியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டது. இப்பிரச்னை தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை கடந்த வாரம் வியாழக் கிழமை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த … Read more

முன்னாள் நீதியரசர் ரவிராஜ் பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

சென்னை: முன்னாள் நீதியரசர் ரவிராஜ் பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திருவான்மியூரில் உள்ள ரவிராஜ் பாண்டியன் இல்லத்தில் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.

வில்லன் ஆன விக்ராந்த்

வில்லன் ஆன விக்ராந்த் 2/14/2022 12:23:53 PM விஜய்யின் சித்தி மகனான விக்ராந்த் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் தற்போது சசிகுமார் நடிக்கும் காமன்மேன் படத்தில் வில்லனாக நடிக்கிறர். இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது சசிகுமார், ஹரி பிரியா, விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவு … Read more

தஞ்சை மாணவி மரணம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கு!: தந்தை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தந்தைக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. பள்ளி மாணவி மரண விவகாரம் வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக்: பள்ளிக்கல்வித்துறை விசாரணை

திருவண்ணாமலை: 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தது பற்றி பள்ளிக்கல்வித்துறை விசாரணையைத் தொடங்கியது. திருவண்ணாமலை அரசு பள்ளியில் தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்குமார் விசாரணையை தொடங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த நிலையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த வந்த தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்.!

டெல்லி: டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த வந்த தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வந்தவர்களை ரயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியதுள்ளது காவல்துறை. 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் எல்லையில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் நெல், கரும்புக்கு அடிப்படை … Read more

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே கட்டமாக 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

டொராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே கட்டமாக 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தரகாண்ட்டில் 70 தொகுதிகளில் 623 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்; 81 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

டெல்லி: டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த வந்த தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வந்தவர்களை ரயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியதுள்ளது காவல்துறை.