பிப்-14: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது இ.ஓ.எஸ் – 04 செயற்கைக்கோள்

ஆந்திரா: பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் – 04 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் தலத்தில் இருந்து செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ தயாரித்துள்ள 1,170 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ் – 04 செயற்கைக்கோள் பூமியை கண்காணிக்கும். விவசாயம், காடுகள், வெள்ளம் போன்றவற்றை துல்லியமாக படம் பிடிக்கும் அதிநவீன கேமரா இ.ஓ.எஸ் – 04 செயற்கைக்கோளில் உள்ளது.

4.99% எல்ஐசி பங்குகளை விற்க செபியிடம் வரைவு அறிக்கை தாக்கல்: அரசு செயலாளர் தகவல்

புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தில் உள்ள 4.99 சதவீத பங்குகளை விற்பதற்கு, செபியிடம் ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக, முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறை செயலாளர் துகிஜ் காந்தா பாண்டே கூறியுள்ளார். எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க ஒன்றிய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான நடைமுறைகள் விரைவில் துவங்கும் என, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியிருந்தார். இந்நிலையில், எல்ஐசி பங்குகளை விற்பதற்கான வரைவு அறிக்கை செபியிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. … Read more

ஒன்றிய அரசு சலுகை டிரோனுக்கு பைலட் சான்று தேவையில்லை

புதுடெல்லி: இந்தியாவில் சமீப காலமாக டிரோன்களின் பயன்பாடு அதிகமாகி இருக்கிறது. காஷ்மீரில் கடந்தாண்டு விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் டிரோன்கள் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, டிரோன்களின் பயன்பாட்டுக்கு ஒன்றிய அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது, டிரோன்களின் பயன்பாடு, உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு பல்வேறு சலுகைகளையும், கட்டுப்பாடு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் 2 கிலோ எடையுள்ள டிரோன்களை இயக்குவதற்கு ரிமோட் … Read more

ஐதராபாத்தில் 120 கிலோ தங்கத்திலான சிலை திறப்பு ஆழ்வார் முக்கியத்துவத்தை உலகிற்கு கொண்டு சென்றவர் ராமானுஜர்: குடியரசு தலைவர் பேச்சு

திருமலை: ஐதராபாத் முச்சிந்தலில் ரூ.1000 கோடியில் 216 அடி உயர ராமனுஜரின் சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி முதல் சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் லட்சுமி நாராயண ஹோமம் நடைபெற்று வருகிறது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று உலக நன்மைக்காக யாகம், பூஜைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் இருந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனவைியுடன் தனி விமானம் மூலம் ஐதராபாத்திற்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் … Read more

உத்தரபிரதேசத்தில் 55 தொகுதியில் 2ம் கட்ட தேர்தல்; கோவா, உத்தரகாண்டில் ஆட்சியை பிடிப்பது யார்? நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

புதுடெல்லி: கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சியை பிடிப்பது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை 55 தொகுதிகளில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் … Read more

குஜராத் அருகே வெளிநாட்டு கப்பலில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

போர்பந்தர்: குஜராத் போர்பந்தர் அருகே வெளிநாட்டு கப்பலில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் கப்பலை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் சோதனை நடத்தியதில் போதைப்பொருள் சிக்கியது.

பெரிய மருதும், சின்ன மருதும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

சென்னை: பெரிய மருதும், சின்ன மருதும், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண் என  உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை என அவர் தெரிவித்துள்ளார். 2005-இல் மாநாட்டிற்காக திண்டுக்கல்லுக்கு வந்ததை மறக்க முடியாது … Read more

கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல்

உத்தரகாண்ட்: கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா 3-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை:  கொரோனா 3-வது அலையில் இருந்து மக்களை பாதுகாப்பாக காப்பாற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும் எம்மதமும் சம்மதம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என அமைச்சர் கூறியுள்ளார்.