கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறைவு: இந்தியாவில் தினசரி பாதிப்பு 50,000-க்கும் கீழ் குறைந்தது

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 44,877 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,26,31,421ஆக உயர்ந்தது.* புதிதாக 684 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை: ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தகவல்

ஆஸ்திரேலியா: விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் நட்சத்திரங்கள் மற்றும் பிற கோள்களிலிருந்து எந்த விதமான அதிர்வுகளும் கண்டறியப்படவில்லை எனவும் மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்க்கோப் மூலம் ஆராய்ச்சி செய்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகை..!

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசியாக 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56,000 கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016ம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி முதல் கட்டமாக 10 ரபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில் அதில் 5 விமானங்கள் 2020ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி இந்தியா வந்தன.அவை முறைப்படி இந்திய விமானப் … Read more

ஐபிஎல் மெகா ஏலம்: 98வது வீரர்களிலிருந்து 164 வரை வீரர்கள் இன்று ஏலம்

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் இன்று 98வது வீரர்களிலிருந்து 164 வரை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 164 முதல் 600 வரை உள்ள வீரர்களில் ஒவ்வொரு அணியும் 20 பேரை தேர்வு செய்ய வேண்டும். அணிகள் தேர்வு செய்த வீரர்கள் மட்டுமே ஏலத்திற்கு விடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்: PSLV C-52 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல்

அமராவதி: பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட EOS-04 செயற்கைக்கோள் PSLV C-52 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 5.59 மணிக்கு சதிஷ் தவான் தளத்தில் இருந்து செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை: மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்குவங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள், மரபுகளுக்கு எதிரானது என முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் மண் சரிவில் சிக்கிய 9 தொழிலாளர்கள்: 7 பேரை மீட்ட பேரிடர் மீப்புக்குழு; இதர 2 பேரை மீட்க முயற்சி

போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாதாள கால்வாய் திட்ட கட்டுமான பணி நடந்த போது மண் சரிவு ஏற்பட்டு 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 7 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 2 பேரின் கதி தெரியவில்லை. கட்னி மாவட்டத்தில் உள்ள நர்மதா நதியின் வலது கரையில் பாதாள கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று மாலை தொழிலாளர்கள் பணியில் இருந்த போது மண் சரிவு ஏற்பட்டு பாதாள கால்வாய் … Read more

சென்னையில் மீண்டும் தலை தூக்கியது ஆன்லைன் லோன் ஆப் மோசடி: மக்களே உஷார்..!

சென்னை: சென்னையில் மீண்டும் ஆன்லைன் லோன்  ஆப் மோசடி தலை துக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு லோன் ஆப் மூலம் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டினர் 2 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சென்னை மாநகர காவால்த்துறையில் இருந்து மாற்றப்பட்டு  சி.பி.சி.டி விசரணையில் உள்ளது. விரைவில் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் அதே லோன் ஆப் மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் … Read more

அடையாளம் தெரியாத சாமியாரை கேட்டு முடிவுகள்; தேசிய பங்கு சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் மீது புகார்: சித்ராவுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவு

அடையாளம் தெரியாத சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி தேசிய பங்கு சந்தையின் முக்கிய முடிவுகளை NSE-யின் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா மேற்கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. NSE எனப்படும் தேசிய பங்கு சந்தை நிறுவனர்களில் ஒருவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் NSE -யின் நிர்வாக இயக்குனராக இருந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து பங்கு வர்த்தனை வாரியமான செபி விசாரணை மேற்கொண்டது. இதில் … Read more

வண்டலூர் பூங்காவிலிருந்து திருடப்பட்ட 2 ஆண் அணில் குரங்குகள் மீட்பு

சென்னை: வண்டலூர் பூங்காவிலிருந்து திருடப்பட்ட 2 ஆண் அணில் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளது. ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.