பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்க்கலாமா?.. அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவுக்கு ஒன்றிட அரசு வலியுறுத்தல்

டெல்லி: பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்க்கலாமா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவுக்கு ஒன்றிட அரசு வலியுறுத்தியுள்ளது. முகக் கவசத்தில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்-13: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நக்சல்களுடன் சண்டை சிஆர்பிஎப் அதிகாரி வீரமரணம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டம், பாசகுடா வன பகுதியில் ஒன்றிய ஆயுதப்படை போலீசார் (சிஆர்பிஎப்) நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நக்சலைட்டுகள் திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில், சிஆர்பிஎப் படையின் உதவி கமாண்டர் சாந்திபூஷன் டிர்க்கி வீரமரணம் அடைந்தார். இது குறித்து போலீஸ் ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், ‘‘இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், சம்பவ இடத்துக்கு போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,827,629 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,827,629 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 410,546,936 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 330,616,160 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 87,808 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலாசாரம், பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை இந்தியாவை ஒரு நாடாகவே காங்கிரஸ் நினைக்கவில்லை: உத்தரகாண்டில் மோடி ஆவேசம்

டேராடூன்: ‘இந்தியாவை ஒரு நாடாகவே காங்கிரஸ் கருதவில்லை. ,’ என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. கடைசி கட்ட ஓட்டு வேட்டைக்காக பாஜ வேட்பாளர்களை ஆதரித்து, இம்மாநிலத்தின் ருத்ராபூரில் நேற்று பிரசாரம் செய்தபோது பிரதமர் மோடி பேசியதாவது: பெரும்பான்மையான மாநிலங்களில் நிராகரிக்கப்பட்ட காங்கிரசை அழிக்கும் வாய்ப்பாக இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேவபூமியில் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை நிறுவ திட்டமிட்டுள்ள காங்கிரசின் திட்டத்தையும், எல்லாவற்றிலும் … Read more

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறப்பு: இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று (12ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு  கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். … Read more

ஐபிஎல் ஏலம் விஷயத்தில் பிரீத்தி ஜிந்தா முடிவால் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று 97 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர்ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், மொத்தம் 10 அணிகள் ஏலத்தில் இருந்தன. அவற்றை ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரர்கள் களம் கண்டனர். அவர்களில் 227 பேர் வெளிநாட்டு வீரர்கள். அனைத்து அணி உரிமையாளர்களும் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர்.அவர்களில் … Read more

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (12ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். … Read more

பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

டெல்லி: இந்தியாவின் முன்னணி தொழில் குழுமம் பஜாஜ். இந்த நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். இவர் உடல் நலனைக் காரணம் காட்டி பஜாஜ் குழுமத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் பஜாஜ் கடந்தாண்டு விலகினார். இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னணி தொழில் அதிபர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 83 வயதான ராகுல் பஜாஜ் நாட்டின் மிக … Read more

மயிலாடுதுறை நகராட்சியில் 19- வது வார்டு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

சென்னை: மயிலாடுதுறை நகராட்சியில் 19- வது வார்டு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி உயிரிழந்ததை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.