பெங்களூரு – மைசூரு நகரங்களை இணைத்து சென்னைக்கு புல்லட் ரயில்; ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: சென்னை – பெங்களூரு – மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமான கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், ‘டெல்லி – வாரணாசி, மும்பை – நாக்பூர், மும்பை – ஐதராபாத் உள்ளிட்ட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்க ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை – … Read more

திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை நடத்திவருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் பரப்புரைக்காக திருப்பூர்  மாவட்டத்தில் 200 இடங்களில் எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்படுகிறது.

ஐபிஎல் ஏலமா? குழந்தைகளின் பாசமா? நடிகை எடுத்த திடீர் முடிவால் அதிர்ச்சி

பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஐபிஎல் ஏலம் நடைபெறும் நிலையில், ‘என்னால் எனது குழந்தைகளை விட்டுவிட்டு இந்தியா வரமுடியாது’ என்று  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.  கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று 97 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர்ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், மொத்தம் … Read more

ஐபிஎல் மெகா ஏலம்: பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் ஏலம் தொடங்கும் என தகவல்

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்த நிலையில் ஏலம் பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி-யில் 55 தொகுதியில் 2ம் கட்ட தேர்தலுடன் சேர்த்து உத்தரகாண்ட், கோவாவில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

லக்னோ: உத்தரகாண்ட், கோவா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 165 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. அதனால் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 58 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 61 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் நாளை மறுநாள் (பிப். … Read more

ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்தார். நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் ஏலத்தின்போது ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டாம் : ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்!

டெல்லி : ஹிஜாப் பிரச்சனையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என ஒன்றிய அரசு கேட்டு கொண்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிலையங்களுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி சில நாடுகளும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளன. இதனை குறிப்பிட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் … Read more

பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்

விருதுநகர்: மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னால்  அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தார். கடந்த 10-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்: ஒன்றிய அரசு

டெல்லி: ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துக்கள் எப்போதும் ஏற்கப்படாது என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.

தஞ்சையில் மஹர்நோன்பு சாவடி பகுதில் 2 வீடுகளில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர்: கீழவாசல் அருகே மஹர்நோன்பு சாவடி பகுதில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் 2 வீடுகளில் சோதனை நடத்தினர். புழல் சிறையில் இருக்கும் கிலாபத் அமைப்பு தலைவர் மண்ணை பாபு அளித்த தகவலின் பேரில் முகமது யாசின், அப்துல் காதர் அகமது ஆகியோர் வீடுகளில் சோதனை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.