சென்னை – பெங்களூரு – மைசூர் இடையே புல்லட் ரயில் : வழித்தடம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!!

டெல்லி : சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் புல்லட் ரயில் குறித்த கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் மொத்தம் 7 புல்லட் ரயில் வழித்தடங்களை அமைப்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 7 வழித்தடங்களில் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரையிலான … Read more

கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (12.02.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம்: கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (12.02.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 58,000 பேர் பாதிப்பு: அதிவேகத்தில் சரியும் கொரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு படுவேகமாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 58,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். ஒமிக்ரான் எனும் புதுவகை வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா 3வது அலை ஏற்பட்டது. இது வேகமாக பரவக் கூடிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. அதே போல், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் போ்ல் இந்தியாவிலும் கடந்த மாதம் கொரோனா தொற்று படுவேகமாக அதிகரித்தது. தினசரி தொற்று மீண்டும் 2 லட்சத்தை … Read more

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வு நடைபெறும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு உலக அளவில் 5,819,328 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,819,328 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 408,644,943 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 328,529,470 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 88,681 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

சேலம்: சேலம் மேற்கு மாவட்டம் மேச்சேரி பேரூராட்சியில் 4வது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர் நடராஜ். இவர் கடைசி நாளில் மனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் மேச்சேரி 4வது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலர்கள் சின்னதம்பி, மகிபாலன், மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒபுளிசெட்டியார், சேகர், சிவசங்கர், ராஜா, தியாகராஜன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் … Read more

டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் 2வது முறையாக நியமனம்

புதுடெல்லி:டாடா குழு நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவன தலைவராக கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த என். சந்திசேகரன் (58) நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, 2வது முறையாக சந்திரசேகரனின் பதவிக்காலத்தை நீட்டித்து டாடா குழுமம் மீண்டும் நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பாக டாடா சன்ஸ் நிறுவனம் விடுத்த அறிக்கையில், ‘கடந்த 11ம் தேதி நடந்த டாடா சன்ஸ் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் செயற்குழு தலைவர் சந்திரசேகரின் 5 ஆண்டு பணி குறித்து மதிப்பீடு … Read more

திமிரி பேரூராட்சியில் திமுக வேட்பாளர்களாக களம் காணும் தம்பதி

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. திமுக 12 வார்டுகள், விசிக ஒரு வார்டு, அதிமுக 5 வார்டுகள்,  பாஜ ஒரு வார்டு, நாம் தமிழர் கட்சி ஒரு வார்டு, சுயேச்சை வேட்பாளர்கள் பல்வேறு வார்டுகளில் 24 பேர் என மொத்தம் 44 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 11வது வார்டில்  நகர செயலாளர் ஜி.இளஞ்செழியன் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல், அவரது மனைவி இளஞ்செழியன் 2வது வார்டில் திமுக … Read more

நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட் தொடர் நிறைவு: காங்., திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதில், கடந்த 1ம் தேதி 2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, இரு அவையிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்றது. இந்நிலையில், நேற்றுடன் பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதில், புதிதாக எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவில்லை. அடுத்ததாக, … Read more

ஒரு வருஷத்துக்கு பால், போன் ரீசார்ஜ் இலவசம்: பழநியை திணறடிக்கும் சுயேச்சைகள்

பழநி: அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் மிரள வைப்பதாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகராட்சி மற்றும் பேரூராட்சி  வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் இடங்களில் தங்களை ஜெயிக்க வைத்தால் ஒரு வருடத்திற்கு வீட்டுக்கு பால் இலவசமாக விநியோகம். செல்போன் ரீசார்ஜ் செய்து தருவேன் என்று வாக்குறுதிகளை வாரி வீசி வாக்கு வேட்டையாடி வருகின்றனர். இதுபோன்ற கவர்ச்சிகரமான … Read more