சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம்; சசிகலா, இளவரசி ஆஜராக சம்மன்: நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சொத்து  குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு அடைக்கப்பட்டனர். சசிகலாவும், இளவரசியும் தண்டனை காலம் முடிந்து கடந்தாண்டு விடுதலையாகினர். இந்நிலையில், சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு ₹2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் இருவரும் சிக்கினர். இது தொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமார், 2வது குற்றவாளியாக டாக்டர் அனிதா, 3வது குற்றவாளியாக சுரேஷ், 4வது … Read more

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 4.58 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வே மண்டலத்தில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு குழு நடத்திய அதிரடி நடவடிக்கைகளால், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ₹4.58 கோடி மதிப்புள்ள சுமார் 10.055 கிலோ அளவிலான தங்கப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் சேதத்துக்கு கேட்டது ரூ6,230 கோடி; கொடுத்தது ரூ816 கோடி: மக்களவையில் ஒன்றிய அரசு ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ள சேதத்துக்கு தமிழகம் கேட்டது ரூ.6,230 கோடி. ஆனால் ஒன்றிய அரசு கொடுத்தது ரூ.816 கோடி. இதனை மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார். ‘தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள், பயிர் சேதங்கள், மனித உயிர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்புகள் ஆகியவற்றை ஈடுகட்டுவதற்காக ஒன்றிய அரசிடம் 6 ஆயிரத்து 230 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டு முறையீடு செய்திருக்கிறதா? அப்படி முறையிட்டிருந்தால் … Read more

பெரம்பலூர் அருகே பள்ளிக்கு வந்த சிறுமிகளிடம் போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் காரை மலையப்பநகர் அரசு தொடக்கபள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை இன்று பள்ளிக்கு வந்து சிறுமிகளிடம் போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தலைமை ஆசிரியரியரை பிடித்து ஊர் மக்கள் போலிசில் ஒப்படைத்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தி சிக்கிம் மாநில அரசு உத்தரவு.!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 58,077 ஆக உறுதியாகி உள்ளது என தெரிவித்து உள்ளது. இது, நேற்றுடன் ஒப்பிடும்போது குறைவாகும். நேற்று 67,084 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒரே நாளில் 58,077 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில்  சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தி மாநில … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.44.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.44.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.44.25 லட்சமாகும். அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு மகாராஜா இங்கிருக்கிறார்… மற்றொருவர்… ‘மை நேம் இஸ்’ ஜோதிராதித்ய சிந்தியா: ஒன்றிய அமைச்சரை கிண்டலடித்த ஆதிர் ரஞ்சன்

புதுடெல்லி: எனது பெயர் ஜோதிராதித்யா சிந்திய என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் தெரிவிக்க விரும்புகிறேன்’ என ஒன்றிய அமைச்சர் மக்களவையில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவை கேள்வி நேரத்தின் போது  காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை (மத்திய பிரதேச காங்கிரசில் இருந்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் விலகியவர். இதனால், அங்கு பாஜக ஆட்சி அமையக் காரணமானது. இதற்கு பரிசாக … Read more

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை

சென்னை: கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிமுறைகளை காற்றில் பறக்க விடுவதாக தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

காரைக்குடி – கன்னியாகுமரி இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டம் சாத்தியமற்றது; மக்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல்

டெல்லி: காரைக்குடி – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. காரைக்குடி – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநில அளவிலான விளம்பரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்திடமும், மாவட்ட அளவில் வெளியிடப்படும்  விளம்பரங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.