கேரளா, மே.வங்கம் போல உ.பி. மாறிவிடக்கூடாது!: யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு..!!

டெல்லி: கேரளா, மேற்குவங்கத்தை போல உத்திரப்பிரதேசம் மாறிவிடக்கூடாது என்ற யோகி ஆதித்யநாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். உத்திரப்பிரதேச மாநில தேர்தல் பரப்புரையின் போது அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தேர்தலில் பாஜக தோற்றால் உத்திரப்பிரதேசம் மாநிலமானது கேரளா, மேற்குவங்கம் மாநிலம் போல் ஆகிவிடும் என தெரிவித்தார். இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் … Read more

டேட்டிங் ஆப்களை உளவு பார்க்க பயன்படுத்தும் இந்தியர்கள்: தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல்

டெல்லி: 73% இந்தியர்கள் தங்களின் வாழ்க்கை துணையை அவர்களது அனுமதி இல்லாமல் உளவு பார்க்கவே டேட்டிங் செயலிகளை பயன்படுத்துவதாக தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 % பேர் போலி கணக்குகளை தொடங்கி உளவு பார்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவயது முதலே மலைஏற்றத்தில் ஆர்வம்; பாலக்காடு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த நிலையில் வீடு திரும்பிய இளைஞர் பாபு பேட்டி

பாலக்காடு: கேரளாவில் மலையில் சிக்கி தவித்து பின்னர் மீட்கப்பட்ட பாபு மருத்துவமனையில் சிகிக்சை முடிந்து வீடு திரும்பினார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் மலம்புழா பகுதியில் மலையேற்றத்தின் போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிய பாபு, 45 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பாபுவின் உடல்நலம் தேறியதை அடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுவயது முதலே … Read more

விராலிமலை அருகே திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர் பலி

விராலிமலை: விராலிமலை அருகே திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர்  உயிரிழந்துள்ளார். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 19 வயது இளைஞர் பாண்டிமுருகன் பலியாகியுள்ளார்.

நாடு முழுவதும் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் 11% வரை அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50,035 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட 11.8% அதிகம். 2020- ல் பதிவான 50,035 வழக்குகளில் 30,142 வழக்குகள் மோசடியை உள்நோக்கமாக கொண்டவை என்றும், இது மொத்த வழக்குகளில் 60.2% … Read more

கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்திற்கு வரி விதிப்பது அதை அங்கீகரிப்பதற்கு அர்த்தமாகாது: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிப்பதா, வேண்டாமா என உரிய ஆலோசனைக்குப் பின் முடிவெடுக்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்திற்கு வரி விதிப்பது அதை அங்கீகரிப்பதற்கு அர்த்தமாகாது, வரி விதிப்பது அரசின் உரிமை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகல் தோட்டம் நாளை திறப்பு!: பொதுமக்கள் பார்வையிட அனுமதி..ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்..!!

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகல் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள வரலாற்று புகழ்மிக்க முகல் கார்டனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று திறந்து வைத்தார். வண்ண வண்ண விதவிதமான மலர்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக 11 வகையான துலிப் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் காற்றை தூய்மைப்படுத்தக்கூடிய தாவரங்களும் இந்த தோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த மலர் … Read more

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பது கண்டிக்கத்தக்கது: வைகோ

சென்னை: கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பது கண்டிக்கத்தக்கது என வைகோ கூறியுள்ளார். 3-வது மற்றும் 4-வது அலகுகள் அமைத்திட தரப்பட்ட அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு இனி பகுதியளவில் அங்கீகாரம் அளிக்கப்படாது: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் அறிவிப்பு

டெல்லி: பி.இ, பி.டெக் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் முழு அங்கீகாரம் அவசியம் என பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இனி பகுதியளவில் அங்கீகாரம் அளிக்கப்படாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை

வாஷிங்டன் : உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே எல்லை பதற்றம் நிலவி வரும் நிலையில் பிடன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.