கேரளாவில் மலை இடுக்கில் சிக்கிய வாலிபர் மீது வழக்கு கிடையாது: தாயின் வேண்டுகோளை ஏற்றது கேரளா

திருவனந்தபுரம்:  கேரள மாநிலம்,  பாலக்காடு அருகே மலம்புழா செராடு பகுதியை சேர்ந்தவர் பாபு (23). தனது  நண்பர்கள் 4 பேருடன்  கும்பாச்சி என்ற மலைக்கு கடந்த 7ம் தேதி சாகசப் பயணம்  சென்றார். அப்போது  பாபு எதிர்பாராமல் கால் வழுக்கி விழுந்த போது பாறை இடுக்கில் சிக்கிக்  கொண்டார். காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் கீழே இறங்கி வர முடியவில்லை. ராணுவம், விமானப் படை வீரர்கள் மிகவும் நேற்று முன்தினம் அவரை மீட்டனர். தற்போது அவர் பாலக்காடு … Read more

பிப்-11: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கொரோனாவுக்கு உலக அளவில் 5,807,191பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.07 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,807,191 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 406,052,643 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 325,881,756 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 89,595 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

182 ஏக்கர் அரசு நில மோசடியில் கைது அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் 182 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்த வழக்கில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், சர்வேயர் பிச்சைமணி, அவரது உதவியாளர் அழகர் ஆகிய 3 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று மனு செய்தனர். விசாரணைக்கு பின் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே … Read more

காவிரி ஆணையம் இன்று கூடுகிறது

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்  கூட்டம் நடத்த கடந்த டிசம்பர் மாதம் இரண்டு முறை அறிவிக்கப்பட்டும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆணையத்தின் 15வது கூட்டம்  வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.அதில், தமிழகம் உட்பட கேரளா, புதுவை, கர்நாடகா ஆகிய மாநில உறுப்பினர்கள் கலந்து கொண்டு நீர் புள்ளி விவரங்கள் மற்றும் முல்லைப் பெரியாறு, மேகதாது ஆகியவை குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் விதை பரிசோதனை செய்யலாம்: அலுவலர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் ராஜகிரி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் பயிரிட்ட விவசாயிகள், காய்கறிகளின் விலையை கருத்தில் கொண்டு அவர்கள் சாகுபடி செய்யும் காய்கறிகளின் விதைகளையே மீண்டும் சாகுபடி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.எனவே விவசாயிகள், தாங்கள் பயிரிட்ட தக்காளி, மிளகாய், கத்தரிக்காய் மற்றும் கீரைகளில் 100 கிராம் விதையையும், தர்பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய் மற்றும் பாகல், புடலை, பீர்க்கன்காய் ஆகியவை 250 கிராம் விதையையும் சேகரித்து விதை பரிசோதனை அலுவலர், விதை … Read more

ஐஏஎஸ் பணி விதிகளில் மாற்றம் கூடாது திமுக உட்பட 10 கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்

புதுடெல்லி:  ஐஏஎஸ் பணி விதிகளில் மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக உட்பட 10 கட்சிகள் கடிதம் எழுதி உள்ளன.இது குறித்து மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில், ”ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி விதிகளில் மாற்றம் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி மாநிலங்களவையில் உள்ள திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட்  கட்சிகள, சிவசேனா உள்ளிட்ட 10 கட்சிகளின் தலைவர்கள், ஓய்வு பெற்ற 38 ஐஏஎஸ் அதிகாரிகள் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை … Read more

ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, தெப்போற்சவ விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. இதையெட்டி தேவி, பூதேவியுடன், சுந்தரவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  தெப்பத்தில் தேவி, பூதேவியுடன் உற்சவர் சுந்தரவரதராஜப் பெருமாள் எழுந்தருளி குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு பகுதிகளை … Read more

3 பாயின்ட் சீட் பெல்ட் இனிமேல் கட்டாயம்: கார் தயாரிப்பாளர்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘கார் தயாரிப்பாளர்கள்  இனிமேல் அனைத்து இருக்கைகளிலும் ‘மூன்று பாயின்ட் சீட் பெல்ட்’ மட்டுமே பொருத்த வேண்டும்,’ என்று ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.தற்போது காரில் பயணிப்பவர்களில் ஓட்டுனர், ஓட்டுனர் அருகே அமர்ந்திருப்பவர், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களில் இருவர் மட்டுமே ‘3 பாயின்ட் சீட் பெல்ட்’ அணிய முடிகிறது. பின் இருக்கையில் நடுப்பகுதியில் அமர்ந்திருப்பவருக்கு, விமானங்களில் பயன்படுத்தப்படுவது போல் இடுப்பில் பொருத்தப்படும் பெல்ட் மட்டுமே பொருத்தப்படுகிறது. இதனால், விபத்து நேரிடும் போது … Read more

காவல்துறையில் 90 % அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர்: ஐகோர்ட் கருத்து

சென்னை: காவல்துறையில் 90 % அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர், 10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும் திறமையானவர்களாகவும் உள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊழல் அதிகாரிகளை களைந்து திறமையான அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என நீதிபதி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.