இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது: ஒன்றிய விண்வெளித்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக ஒன்றிய விண்வெளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களும் அடங்கும் என ஒன்றிய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மணிப்பூர் சட்டமன்ற முதற்கட்ட தேர்தல் தேதி பிப்ரவரி 27ம் தேதிக்கு பதில் 28ம் தேதிக்கு மாற்றம்

மணிப்பூர்: மணிப்பூர் சட்டமன்ற முதற்கட்ட தேர்தல் தேதி பிப்ரவரி 27ம் தேதிக்கு பதில் 28ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2ம் கட்ட தேர்தல் மார்ச் 3ம் தேதிக்கு பதிலாக 5ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முனீஷ்வரநாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரைத்தது.

மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு நாள் பிப்ரவரி 27-ம் தேதிக்கு பதில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஏற்கனவே அறிவித்த தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல், தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் … Read more

மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடல்

சென்னை: வனவிலங்குகள் நலனை கருத்தில் கொண்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடப்படுகிறது. திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.

தலைவருடன் கைகோர்க்கும் நெல்சன்-அனிரூத்

தலைவருடன் கைகோர்க்கும் நெல்சன்-அனிரூத் 2/10/2022 6:25:40 PM சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படத்தை, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். கோலிவுட்டில் ‘கோலமாவு கோகிலா’  மூலம் காலடி எடுத்து வைத்த இயக்குநர் நெல்சனுக்கு, அந்தப் படம் மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. வசூல் ரீதியாகவும் ஹிட்டானதால், அடுத்த படத்தில் தனது நண்பரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே வெளியான டாக்டர், வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் … Read more

ஹிஜாப் ஆடை தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு: ஹிஜாப் ஆடை தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சேவை கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக இந்தியாவுக்கான ஏர்டெல் செயல் இயக்குநர் கோபால் விட்டல் தகவல்

டெல்லி: சராசரி தனிநபர் வாடிக்கையாளர் வருவாய் இலக்கை ரூ.163-லிருந்து ரூ.200-ஆக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அடுத்த 3-4 மாதங்களுக்கு பிறகு சேவை கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக இந்தியாவுக்கான ஏர்டெல் செயல் இயக்குநர் கோபால் விட்டல் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்பு: லாவ்அகர்வால் தகவல்

டெல்லி: தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 50,000-க்கும் அதிகமானோர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 11 மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,000-50,000 ஆக உள்ளதாக லாவ்அகர்வால் கூறியுள்ளார். ஜன.24-ல் தினசரி கொரோனா பாதிப்பு 20.75%-ஆக இருந்த நிலையில் தற்போது 4.44%-ஆக குறைந்துள்ளது.